Accessibility Statement Skip Navigation
  • PRNewswire.com
  • Resources
  • +91 22-69790010
  • Client Login
  • Send a Release
PR Newswire: news distribution, targeting and monitoring
  • News
  • Products
  • Contact
When typing in this field, a list of search results will appear and be automatically updated as you type.

Searching for your content...

No results found. Please use Advanced Search to search all press releases.
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Hamburger menu
  • PR Newswire: news distribution, targeting and monitoring
  • Send a Release
    • Telephone

    • +91 22-69790010 from 9 AM - 5:30 PM IST

    • Contact
    • Contact

      +91 22-69790010
      from 9 AM - 5:30 PM IST

  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists
  • Explore Our Platform
  • Plan Campaigns
  • Create with AI
  • Distribute Press Releases
  • Amplify Content
  • All Products
  • Request More Information
  • Journalists
  • Request More Information
  • Journalists

முதலாவது Facilities Show India கண்காட்சி மெய்நிகர் வடிவில் நடத்தப்பட்டது
  • India - English
  • India - Gujarati
  • India - Hindi

Informa_Markets_Logo

News provided by

Informa Markets in India

26 Nov, 2020, 12:01 IST

Share this article

Share toX

Share this article

Share toX

வசதி மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக International Facilities Management Association உடன் இணைந்து Informa Markets in India நடத்தும் இந்தியாவின் முதன்மையான கண்காட்சி மற்றும் மாநாடு

மும்பை, இந்தியா, நவ. 26, 2020 /PRNewswire/ -- ஒரு முன்னணி B2B நிகழ்ச்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), யுகே-யில் ஆரம்பிக்கப்பட்ட 'Facilities Show'-வின் முதலாவது மெய்நிகர் கண்காட்சியை இந்தியாவில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. வசதி மேலாண்மை சப்ளையர் துறைக்காக வரும் 26 - 27, நவம்பர் 2020 ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள 'Facilities Show India'-ன் முதல் கண்காட்சியானது, வசதிகள் மற்றும் களச் சேவை மேலாண்மை தொழில்புரிபவர்களுக்கான உலகளாவிய நடுவமாகச் செயல்படும். அதற்கு வரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இதில் உள்ள புதுமைகள், தீர்வுகள் மற்றும் யோசனைகளைப் பற்றி அறிந்துகொள்வதோடு, இத்துறை சார்ந்த முன்னணியாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும்.

Continue Reading
Facility_Virtual_Expo
Facility_Virtual_Expo

FM என்றும் அறியப்படும் வசதி மேலாண்மையில் பல்வேறு வகையான பிரிவுகளும் சேவைகளும் உள்ளன. இவை கட்டடங்கள் மற்றும் வளாகங்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற கட்டமைக்கப்பட்ட சூழல்களின் செயல்பாடு, சௌகரியம், நலன், பாதுகாப்பு மற்றும் உற்பத்தியை உறுதி செய்ய உதவுகின்றன. FM இரு வகையாக வகைப்படுத்தப்படுகிறது - அவை ஹார்டு ஃபசிலிட்டீஸ் மேனேஜ்மெண்ட் சர்விசஸ் மற்றும் சாஃப்ட் ஃபசிலிட்டீஸ் மேனேஜ்மெண்ட் சர்விசஸ். Hard FM என்பது பிளம்பிங், ஹீட்டிங் மற்றும் கூலிங், எலவேட்டர்கள் போன்ற புறநிலை சொத்துக்கள் சார்ந்த செயல்பாடுகளை உள்ளடக்கும். Soft FM என்பது, பாதுகாப்பு சேவைகள், குத்தகைக் கணக்கு வைப்பு, உணவளித்தல், பாதுகாப்பு, வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் போன்ற மக்களால் செய்யப்படும் பணிகளை உள்ளடக்கும்.

TELMA மற்றும் APSA போன்ற சங்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்தக் கண்காட்சியானது பல்வேறு வசதி மேலாண்மை நிறுவனங்களிலிருந்து உள்ளூர் மற்றும் உலகளாவிய தயாரிப்பாளர்கள், சப்ளையர்கள், ஆலோசகர்கள், சேவையாளர்கள் மற்றும் முடிவெடுப்பவர்கள் சந்தைப்படுத்த அல்லது சமீபத்திய தயாரிப்புகளையும் சேவைகளையும் கொள்முதல் செய்யவும் சங்கமிக்கும் இடமாக இருக்கும். இது, வேலை வளர்ச்சி, நெட்வொர்க்கிங், அலுவலக வடிவமைப்பு முதல் ஸ்மார்ட் எனர்ஜி மற்றும் லைட்டிங்வரை துறைகளில் விலை குறைந்த தீர்வுகளை அளிப்பது போன்றவற்றுக்கு உதவுகிறது. பசுமை ஆற்றல் மற்றும் ஸ்மார்ட் பில்டிங்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வாய்ப்புகளை வாரி வழங்குகின்றன. தொடர்ந்து மாறிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்துறை நிபுணர்கள் கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் வாய்ப்பளிக்கும்.

Facilities Show India-வின் மெய்நிகர் கண்காட்சியை அறிவித்துப் பேசிய Informa Markets in India-வின் நிர்வாக இயக்குநரான திரு. Yogesh Mudras பேசும்போது, "வசதி மேலாண்மைத் துறையினர் அவர்களுடைய முதலீட்டின் மீதான வருவாயை அதிகரிப்பதற்காக முயற்சிக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களுடைய சொத்துக்களை அதிகரிப்பதிலும், வாடிக்கையாளர் உறவுகளை மேம்படுத்தவும், தாங்கள் வேலை செய்யும் இடங்களை மறுவரையறை செய்யவும், அதிக மகிழ்ச்சியளிப்பதாகவும், உற்பத்திமிக்கதாகவும் ஆக்க நினைப்பதோடு, தங்களுடைய கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் முயற்சி எடுக்கிறார்கள். முக்கியமாக, வசதி மேலாண்மைத் துறையினர் தங்களுடைய முதலீட்டின் மீதான வருவாயைப் பெருக்க முயற்சிக்கிறார்கள். நடப்புச் சூழ்நிலையில், நீடித்த வளர்ச்சிக்காகத் தேவைப்படும் கருவிகளில் முதலீடு செய்ய நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. இந்திய வசதி மேலாண்மைச் சந்தை 2019-ல் 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக உள்ளது. 2020-2025 காலக் கட்டத்தில் இத்துறை மிக வேகமான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 20% CAGR வளர்ச்சியை அடைந்து 2025-ல் 406 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இந்த விகித விளர்ச்சியினால், வசதி மேலாண்மையை முன்னிருத்துவது அர்த்தம் பெறுகிறது. இந்திய துணைக்கண்டத்திற்கு Facilities Show-வின் மெய்நிகர் கண்காட்சியைக் கொண்டுவருவது என்பது Informa Markets in India-வின் வசதி மேலாண்மையின் முக்கியத்துவத்தின்மீதும் தொழில் நடவடிக்கையை ஸ்டிரீம்லைன் செய்வதன்மீதும் கவனம் செலுத்தும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. அறிவு இடைவெளியை சேர்ப்பதற்கு இந்தக் கண்காட்சி உதவும் என்றும், இன்னும் அதிகம் பயன்படுத்தப்படாத வசதி மேலாண்மையின் பல முகங்களை அளிக்கும் என்றும் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

இந்த மெய்நிகர் கண்காட்சியில் WEWORK, 3M INDIA, MALLCOM, HELIX SENSE, ABACUS INFOTECH, 75 F, MoveInSync போன்ற பல முன்னணி பிராண்டுகள் இடம் பெறும். IFMA Global 2020 மாநாடும் இச்சமயத்தில் நடைபெறும். இந்த உயர் மட்ட மெய்நிகர் மாநாட்டில் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச தலைவர்களும் நிபுணர்களும் கலந்துகொண்டு நிறுவனம்சார் கலாச்சாரம், தொழில் தொடர்ச்சி, பணியிட உருமாற்றம், தொழிலாளர் நலன் போன்ற பல தலைப்புகளில் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர். மாநாட்டின் முக்கிய அமர்வுகள்: தி ஃபியூச்சர் ஆஃப் ஒர்க், பில்டிங் எம்ப்ளாயீ எக்ஸ்பீரியன்ஸ் அன்டு ஆர்கனைசேஷனல் கல்சர் த்ரூ ஒர்க்பிளேய்ஸ் டிரான்ஸ்ஃபார்மேஷன், பிஸினஸ் கன்டினியூயிட்டி, ஹவ் FM வில் பி டெலிவர்டு இன் தி நியூ வேர்ல்டு, ஹெல்த்கேர்: நியூ வேய்ஸ் ஆஃப் ஒர்க்கிங், ஹெல்த் அன்டு வெல்னஸ் அட் தி ஒர்க்பிளேய்ஸ், தி சேஞ்சிங் ஃபேஸ் ஆஃப் ஒர்க் அன்டு ஒர்க்பிளேய்ஸ் டிசைன், டெக்னாலஜி - ரீஇன்வென்டிங் ஃபார் தி ஃபியூச்சர் ஆஃப் ஃபசிலிட்டீஸ், லீடிங் அன்டு டெவலப்பிங் எமர்ஜிங் FM-ஸ், FM ஸ்பெஷலைசேஷன் - எக்ஸ்புளோரிங் சேஞ்சஸ் அன்டு இன்னோவேஷன்ஸ்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய பேச்சாளர்கள்: திரு. Peter Ankerstjerne, குளோபல் லீடு, FM & எக்ஸ்பீரியன்ஸ் சர்விசஸ் JLL & போர்டு தலைவர் IFMA; திரு. Sandeep Sethi, மேலாண் இயக்குநர், கார்ப்பரேட் சொலூஷன்ஸ் - வெஸ்ட் ஏசியா, JLL; திரு. Mahantesh Mali, மூத்த VP - ரியல் எஸ்டேட் ஆப்பரேஷன்ஸ், Nucleus Office Parks, Blackstone Portfolio Company; திரு. Sumeet Sharma, Global Contracts இயக்குநர், Capgemini group-ல் பணியிட சேவைகள்; திரு. Aman Dutta, EY Consulting பார்ட்னர், Chris Hood, Advanced Workplace Associates (AWA)-ன் இயக்குநர்; Maj Bijay Mukherjee - ஹெட் - கார்ப்பரேட் ஒர்க்பிளேய்ஸ் சொலூஷன்ஸ், Cognizant Technologies; டாக்டர் Shalini Lal - ஆர்கனைசேஷனல் கன்சல்டன்ட்; திரு. Shravan Bendapudi - ஸ்டுடியோ டிரெக்டர், Gensler; திரு. Parthajeet Sarma, ஒர்க்பிளேய்ஸ் டிரான்ஸ்ஃபார்மேஷன் ஸ்பெஷலிஸ்ட், Workplace Evolutionaries (WE) ஹப் லீட், Chevening ஸ்காலர்; திரு. Asan Dasari, சீனியர் டிரெக்டர், Global Real Estate, NTT Data Services; திரு. Peter Andrews; எக்ஸெகியூட்டிவ் டிரெக்டர், CBRE Workplace Strategy Centre of Excellence, APAC; திரு. Arunjot Singh Bhalla, மேனேஜிங் டிரெக்டர் இன்டியா, RSP Architects Planners Engineers; திரு. Keith Monteiro- மூத்த துணைத் தலைவர், Reliance Industries Ltd.; திரு. Amitabh Satyam, தலைவர், Smart Transformations மற்றும் பலர்.

கண்காட்சியை அறிவிக்கும்போது பேசிய JLL-ன் குளோபல் லீடு FM & எக்ஸ்பீரியன்ஸ் சர்விசஸ் ஆகவும், IFMA போர்டின் தலைவருமான திரு. Peter Ankerstjerne பேசும்போது, "வசதி மேலாண்மை தொழில்முறையாளர்கள் தங்களுடைய தலைமைத்துவத்தை வெளிக்காட்டும் சிறந்த நேரம் இதுதான். நம்முடைய தொழிலையும் சமூகங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவதிலும் நீடித்ததன்மை மற்றும் நலனில் அக்கறை காட்டுவதிலும் நம்முடைய துறை முக்கியப் பங்காற்றுகிறது. நாம் நாழும் முறை மற்றும் வேலை செய்யும் முறை பற்றிய அடிப்படையான கேள்விகளை COVID-19 எழுப்பியுள்ளது. இதன் காரணமாக, நாம் இணைந்து அர்த்தமுள்ள முறையில் முன்னேற முயற்சிக்கிறோம். மாற்றத்தை முன்னெடுப்பது ஒருபோதும் சுலபமாக இருந்ததில்லை. ஆனால், அணியாக இணைந்து வேலை செய்யும்போது புதிய விஷயங்களைப் பரீட்சிப்பது சுலபமே. பெருந்தொற்றின் நீண்டகால விளைவுகள் எங்களையும் பாதிக்கும், - இந்தியா முதல் நெதர்லாந்து, வாஷிங்டன், D.C-வரை எங்களைப் பாதிக்கிறது. இது ஒரு புதிய, எதிர்கால நடப்பு நிலைமைக்கு இணைந்து தயாராகும் வாய்ப்பை எமக்கு அளிக்கும்" என்றார்.

"சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப சேவையாற்றவும், சவால்களைச் சந்திக்கவும், இணைந்து யுத்திகளை வகுக்கவும் இந்த மெய்நிகர் கண்காட்சியும், இ-மாநாடும் வழிவகுக்கும். தொடர்பு கொள்ளவும், நெட்வொர்க் ஏற்படுத்தவும் வளரவும் ஒரு நல்ல தளத்தை ஏற்படுத்தும்" என்று மேலும் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான தொழில்துறை அறிக்கையின்படி, இந்தியாவில் வசதி மேலாண்மைத் துறை என்பது இன்-ஹவுஸ் பிரிவின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்தச் சேவைகள் பெரும்பாலும் வெளியிலிருந்து பெறப்படுகிறது. ஒருங்கிணைந்த வசதி மேலாண்மைக்கான வளர்ந்துவரும் தேவையானது துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தற்போது, இத்துறை மிகவும் சிதறிய நிலையில் ஒருங்கிணைக்கப்படாத சிறு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தாலும், பெரிய நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை வாங்கும் நிலையில், இத்துறை வரும் ஆண்டுகளில் அதிக ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. IT, BPO, மற்றும் BFSI போன்ற கார்ப்பரேட் அலுவலகங்கள் வேகமாக தங்களுடைய சேவைகளை வெளியிலிருந்து பெறத் தொடங்குகின்றனர். இதனால் இந்தியாவில் இத்துறை வேகமாக வளர்ச்சியடைகிறது. இத்துறை பெரும்பாலும் மெட்ரோ நகரங்களிலும் 1-ஆம் நிலை நகரங்களிலுமே மையம் கொண்டுள்ளது. பூனே மற்றும் மும்பை போன்ற நகரங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றன. சர்வதேச அளவிலும், இத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு நிறுவனங்கள் சேவைகளை வெளியிலிருந்து பெறுவதே காரணம். ஆசிய பசுபிக் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வசதி மேலாண்மைக்கான வளர்ந்துவரும் தேவையானது துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது. இந்தத் துறையைப் பொருத்தவரை, ஆசியா பசுபிக் வட்டாரம்தான் மிக வேகமாக வளரும் வட்டாரமாகும். இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் இதற்கு வழிவகுத்துள்ளன. இந்த வட்டாரத்தில் மிக வேகமாக அதிகரித்துவரும் மக்கள்தொகையும் சந்தை வளர்ச்சியைத் தூண்டுகிறது.

பதிவு செய்வதற்கு, தயவுசெய்து கீழ்க்காணும் இணைப்பில் கிளிக் செய்யவும் - https://bit.ly/3fbdEN5

Facilities Show India-ல் துறை நிபுணர்களின் உரைகள்:

திரு. Raghuvinder Singh Pathania, ஹெட் ஆஃப் ஆப்பரேஷன்ஸ், WeWork India

"நிறுவனங்கள் தங்களுடைய பணியிடத்தை பயன்படுத்தும் முறையை இந்தப் பெருந்தொற்று நிச்சயமாகப் பாதித்திருக்கிறது. அப்படிச் சொல்லும்போது, இந்த நடப்பு இடர்மிக்க சூழல் புதுமையான தீர்வுகளையும், வேலை நடைமுறைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு வசதி மேலாண்மையானது அவசியமான பணியை ஆற்றியிருக்கிறது. IFMA-யுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம். Facilities India Virtual Expo -வை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் வேலை செய்யும் விதத்தை மறுவரையறை செய்ய உதவும் முக்கியமான மேம்பாடுகள் பற்றி கலந்துரையாட விரும்புகிறோம்."

திரு. Gaurav Burman, APAC தலைவர் - 75F

"COVID-க்குப் பின்னர் தங்களுடைய தொழிற்சாலைகளைத் திறப்பதற்கு உலகம் மெதுவாக முன்னேறும் நிலையில், தொழில்நுட்பமும் கூட்டுச்செயல்பாடும் மாறியிருக்கின்றன. Facilities Virtual Expo போன்ற டிஜிட்டல் தளம் எங்களை FM பங்காளர்களுடன் தொடர்புகொள்ள வழிவகுக்கிறது, அறிவையும் எங்களுடைய முன்னேற்றங்களையும் பகிர்ந்து கொள்ள மட்டுமல்லாது, அதே நேரம் கற்றுக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. ஆக்கப்பூர்வமான நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கிறோம்!"

திரு. Jatin Mehta - CEO, Abacus Infotech

"இந்த பெருந்தொற்றுச் சூழலில் மெய்நிகர் கண்காட்சி என்பது மிக அருமையான யோசனை. இந்த பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களும் விற்பனையாளர்களும் ஒரே தளத்தில் தொடர்புகொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்களுடைய இடத்திலிருந்தே சமீபத்திய தொழில்நுட்ப அறிவைப் பெற முடியும். இது அவர்களுடைய பயண நேரத்தைக் குறைத்து, குறைவான விற்பனையாளர்களுடன் சரியான தயாரிப்புகள் / தொழில்நுட்பங்களின்மீது கவனம் செலுத்தலாம். மெய்நிகர் கண்காட்சியில் பூத்துக்கு வரும் நபர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை என்பதால், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் விற்பனையாளர் ஒரு நபரை ஒதுக்க முடியும். ஆன்லைனில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சேவையளிக்க முடியும். ஒவ்வொருவரும் புதிய தொழில்நுட்பத்துடன் வேலை செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். இந்தக் கண்காட்சி வாடிக்கையாளர்களுக்கும் கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனத்துக்கும் பலனளிக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்."

திரு. Rana Rajvinder Singh, டிரெக்டர் ஆஃப் ஆப்பரேஷன்ஸ் & கஸ்டமர் சக்சஸ், Helix Sense Technologies Pvt. Ltd.

"COVID-19 பெருந்தொற்று இருந்தாலும் Facilities Virtual Expo-வானது FM/PM நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவும், தங்களுடைய திறன்களை காட்சிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், நிகழ்ச்சி வெற்றி பெறும் எனக் காத்திருக்கிறோம்."

திரு. Rana Das, இணை துணைத் தலைவர் - பிராண்டட் சேல்ஸ், Mallcom India Ltd.

"தனிநபர் பாதுகாக்கப்பட்ட கருவிகளின் முன்னணித் தயாரிப்பாளரும், ஏற்றுமதியாளரும், விநியோகிப்பாளராகவும் இருக்கும் Mallcom-ஆனது IFMA Global India-வுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறது. 26 -27 நவம்பர் 2020 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் இந்த Facilities India Virtual Expo-வின் சில்வர் ஸ்பான்சராகப் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்."

திரு. Deepesh Agarwal, இணை-நிறுவனர் & CEO, MoveInSync Technology Solutions.

"வசதி மேலாண்மையை COVID-19 பெருந்தொற்று இன்று ஒவ்வொரு நிறுவனத்தின் முன்னுரிமையாக ஆக்கியிருக்கிறது. நாங்களே அதே குழப்பநிலையைச் சந்தித்தோம். அதற்கு ஒரு புதுமையான தீர்வைக் கண்டறியும்படி தள்ளப்பட்டோம். வீரியமான வேலை செய்யும் இடத்தை நிர்வகிக்க WorkInSync எங்களுடைய சொந்த தீர்வை பகிர்ந்துகொள்ள Facilities Virtual Expo உதவும் என நம்புகிறோம். WorkInSync-ஐ காட்சிப்படுத்த இதைவிட சிறந்த ஒரு தளத்தை எங்களால் எதிர்பார்க்க முடியாது."

திரு. Pawan Kumar Singh, கன்ட்ரி பிசினஸ் லீடர், TEBG, 3M India Ltd.

"COVID-19 பெருந்தொற்றுச் சூழலில் தொழில்துறையும் சமூகமும் சங்கமிக்க ஒரு நல்ல தளமாக Virtual Expo உள்ளது. Facilities India Virtual Expo | 2020-ல் கலந்துகொள்வதிலும், வெற்றிகரமான மெய்நிகர் நிகழ்வுக்கு வசதி மேலாண்மை நிபுணர்களுடன் கலந்துரையாடவும் ஆவலோடு காத்திருக்கிறோம்".

Informa Markets பற்றி

தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்

Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி

Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.

IFMA பற்றி

IFMA India-வானது கல்விசார், தகவல்சார் மற்றும் நெட்வொர்க்கிங் சேவைகளை அளிக்கிறது. வசதி மேலாண்மை சந்தைக்கான வளர்ந்துவரும் தேவையினால் பலனடைய உதவுகிறது. IFMA-க்கு பெங்களூரு, சென்னை, டெல்லி, மற்றும் மும்பையில் நெட்வொர்க்கிங் குழுக்கள் உள்ளன. பெங்களூருவில் உள்ள ஊழியர்கள் நேரடியாக அமெரிக்காவில் சர்வதேச தலைமை அலுவலகத்துடன் தொடர்புகொள்கின்றனர். நீங்கள் வசதி மேலாளராக பல ஆண்டு அனுபமிக்கவராக இருந்தாலும் அல்லது இத்துறையில் புதியவராக இருந்தாலும், உங்களுடைய தகுதியை வளர்க்க நல்ல வாய்ப்பாகவும், IFMA வழியாக தொழிலை வளர்க்க வாய்ப்பாகவும் உள்ளது.

www.ifma.org

எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்: 

Roshni Mitra - [email protected]

Mili Lalwani - [email protected]

லோகோ: https://mma.prnewswire.com/media/1339726/Facility_Virtual_Expo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg

Modal title

Contact PR Newswire

  • +91 22-69790010

Global Sites

  • APAC
  • APAC - Traditional Chinese
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany

 

  • India
  • Indonesia
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Middle East - Arabic
  • Netherlands
  • Norway
  • Poland

 

  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States

Do not sell or share my personal information:

  • Submit via [email protected] 
  • Call Privacy toll-free: 877-297-8921
Global Sites
  • Asia
  • Brazil
  • Canada
  • Czech
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • India
  • Israel
  • Italy
  • Mexico
  • Middle East
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Russia
  • Slovakia
  • Spain
  • Sweden
  • United Kingdom
  • United States
+91 (0) 22 6169 6000
from 9 AM - 5:30 PM IST
  • Terms of Use
  • Privacy Policy
  • GDPR
  • Information Security Policy
  • Site Map
  • Cookie Settings
Copyright © 2025 Cision US Inc.