வேகமும் விறுவிறுப்புமாக வாசகர்களை அழைத்துச் செல்லும் புத்தகமான "த சோளா டைகர்ஸ்" ஓர் ஆழமான வினாவை முன்வைக்கிறது: தர்மத்தையும், நாட்டின் கெளரவத்தையும் காக்க நீ எத்தனை தூரம் செல்வாய்? புத்தக வெளியீட்டின் அறிவிப்பின் சமயம், ஆசிரியர் அமிஷ், சொல்கிறார், "தன் காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த பேரரசர் ராஜேந்திர சோழர், சுல்தான் முஹமது சோமநாதர் ஆலயத்தை அழித்ததினால் வெகுண்டெழுந்து கஜனியின் மேல் தொடுத்த போரின் சுவாரசியமான கதை தான் "த சோளா டைகர்ஸ்". இந்த வரலாற்றுப் புனைவு 2020 இல் வெளியான "லெஜெண்ட் ஆஃப் சுஹேல்தேவ்" உடன் தொடர்புடையது. மிகச்சிறந்த தமிழரான பேரரசர் ராஜேந்திர சோழரால் ஆணையிடப்பட்ட பணியைக் குறித்து பேசுகிறது இந்தப் புத்தகம். இதன் அட்டைப்பட்ட வடிவம் இன்றைய ஒரு மிகச்சிறந்த தமிழர், இந்தியாவின் புதையல், ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்படுவது மிகவும் பெருமைக்குறியது".
பெளலமி சட்டர்ஜி, எக்ஸிக்யுடீவ் பப்ளிஷர் - ஹார்பர் காலின்ஸ் சேர்க்கிறார், "அமிஷ் அவர்கள், மிகவும் சுவாரசியமாக, இந்திய வரலாற்றில் நம் மனதிற்கு பிடித்த, நம்மை பிரம்மிக்க வைத்த மனிதர்களையும், புராணங்களையும், நிகழ்வுகளையும் தன் மீள்கற்பனையால் புத்தகங்களாக்கி இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு புதியதாக அனுபவிக்க கொடுக்கிறார். இந்தப் புதிய நாவல், ஒரு வேகமான, விறுவிறுப்பான, விரிவான வரலாற்றுப் புனைவு. அரசியல் சூழ்ச்சி, தனிப்பட்ட வெறுப்புகள், மனதை பிழிந்தெடுக்கும் தியாக நிகழ்வுகள், பழிவாங்கல் அத்தனையும் நிறைந்தது. இந்தப் புத்தகம் முக்கியமாக, ஆழமாக, திறமையாக, மனிதரின் தைரியம், உறுதித்தன்மை, எங்களை உடைத்துவிட இயலாது என்று துணிந்து நிற்கும் ஒரு தேசத்தின் ஆன்மாவின் அழிக்கவியலாத வலிமை என எல்லாவற்றையும் அலசி ஆராய்கிறது. வாசகர்களை கடைசி பக்கம் வரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வைத்திருக்கப் போகிற இந்தப் புத்தகத்தை வெளியிடப்போவது மிகவும் மகிழ்வாக உள்ளது."
"த சோளா டைகர்ஸ்" குறித்து :
இடம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்
நேரம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்
ஆனால் இந்தியர்கள் கண்டிப்பாக பழிவாங்குவார்கள்
1025 CE, இந்தியா
கஜினி முஹமது நம்புகிறார் பாரதத்தின் ஆன்மாவை தான் அழித்துவிட்டதாக - சோமநாதர் ஆலயத்தில் சிவலிங்கம் உடைந்து தெரித்து கிடக்கிறது; ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கிடக்கிறார்கள்.
ஆனால் அழிவின் சாம்பல்களுக்கு இடையே ஒரு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
ஐவர் -- ஒரு தமிழ் வீரன், ஒரு குஜராத் வியாபாரி, ஐயப்ப கடவுளின் பக்தர் ஒருவர், ஒரு மேதை - மால்வாவின் பேரரசர், இப்பூமியின் சக்திவாய்ந்த பேரரசர் ராஜேந்திர சோழர் - எதிரி அரசின் மையப்பகுதியில் ஒரு அபாயகரமான போர் தொடுக்க உறுதி கொள்கிறார்கள்.
சோழப்பேரரசின் பிரம்மாண்டத்திலிருந்து, இரத்தக் கறைகளால் நிரம்பியிருக்கும் கஜினியின் அரசுமன்றம் வரை, "த சோளா டைகர்ஸ்", ஆபத்து மிகுந்த பழிவாங்குதலின் மிகவும் சுவாரசியமான ஒரு கதை. வலியால் ஒன்றாக இணைந்து, வேதனையால் வெகுண்டெழுந்து, பழிவாங்கி அதுவே தர்மமாக முடியும் கதை.
ஆசிரியர் குறித்து :
அமிஷ் 1974 இல் பிறந்து, IIM (கோல்கத்தா) வில் படித்து, வங்கியில் பணியாற்றி, எழுத்தாளரானவர். அவரின் முதல் புத்தகம், "த இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஹா (ஷிவா ட்ரிலாஜியின் முதல் புத்தகம்) வின் வெற்றி நிதி சார்ந்த பணியை விடுத்து எழுத்தில் கவனம் கொள்ள ஊக்குவித்தது.
புத்தக ஆசிரியர் என்பதைத் தாண்டி அவர் ஓர் ஒளிப்பரப்பாளர், ஒரு வீடியோ கேமிங் கம்பெனியின் நிறுவனர், திரைப்படத் தயாரிப்பாளர், முன்னாள் இந்திய அரசின் பிரதிநிதியாகவும் செயல்பட்டவர்.
அமிஷ் அவர்கள், வரலாறு, ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில் மிகவும் ஆர்வமுள்ளவர். உலகின் அத்துனை மதங்களிலும் அழகையும், அர்த்தங்களையும் ரசிப்பவர். அவர் புத்தகங்கள் 8 மில்லியன் பிரதிகள் வரை விற்றிருக்கின்றன, மேலும் 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்திய பதிப்பகத்துறையில், இவரின் "ஷிவா ட்ரிலாஜி" தான் வேகமாக விற்ற முதல் தொகுப்பு, இரண்டாவதாக வேகமாக விற்ற புத்தகத் தொகுப்பு இவரது "ராம சந்திரா". மத்தியகால இந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இவரது "த இண்டிக் க்ரானிகள்ஸ்" என்ற தலைப்பிலான இவரின் தொகுப்புப் புத்தகங்கள் பெறும் அளவில் விற்று சாதனை படைத்துள்ளன.
அமிஷ் அவர்களுடன் தொடர்புகொள்ள :
www.facebook.com/authoramish
www.instagram.com/authoramish
www.twitter.com/authoramish
மேலும் தகவலுக்கு தயவுசெய்து செல்க: https://harpercollins.co.in/
Photo: https://mma.prnewswire.com/media/2735029/Cover_Launch_Amish.jpg
Logo: https://mma.prnewswire.com/media/2105077/4665143/HarperCollins_Logo.jpg
Share this article