'COVID-19 காலத்தில் நீடித்த பராமரிப்பு' என்ற பிரச்சாரத்தைத் தொடங்க MIOT சர்வதேச மருத்துவமனையுடன் Popcorn Films கைகோர்த்துள்ளது
சென்னை, இந்தியா, Oct. 20, 2020 /PRNewswire/ -- சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் முன்னணி விளம்பரப் படத் தயாரிப்பு மையமான Popcorn Ad Films-ஆனது சென்னையைச் சேர்ந்த MIOT சர்வதேச மருத்துவமனைக்காக புதிய விழிப்புணர்வுப் படத் தொடர்களை உருவாக்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் MIOT பின்பற்றிய சமரசம் செய்யாத பாதுகாப்பு மற்றும் கடுமையான தர நடவடிக்கைகள் பற்றி நோயாளிகள் தெரிந்துகொள்ளுவதற்காக MIOT எடுத்திருக்கும் முன்முயற்சியின் ஒரு அங்கமாக இந்தப் பிரச்சாரம் இருக்கும்.
இன்று, MIOT International என்பது 250 முழு நேர மருத்துவர்களைக்கொண்டு 63 சிறப்புப் பிரிவுகளில் நான்காம்நிலைப் பராமரிப்பு சிகிச்சையை வழங்கும் 1000 படுக்கை வசதியைக் கொண்ட மருத்துவமனையாகும். வளாகத்தில் உள்ள சிறப்பு வசதிகளில் ஒன்றாக இருப்பது நாட்டிலேயே மிகச் சிறந்த இமேஜிங் அறிவியல் துறை மற்றும் மிகச் சிறந்த ஆய்வகமாகும் (சர்வதேச அளவில் 8-வது சிறந்த ஆய்வகமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது). இங்குள்ள 21 மிகச்சிறந்த அறுவை சிகிச்சை அரங்கங்களில் உயர்நுட்பமான தொழில்நுட்பமும் தாதனங்களும் உள்ளன. இதனால் மருத்துவர்களால் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் செய்ய முடியும்.
இந்தக் கூட்டாளித்துவம் பற்றிப் பேசிய தலைமை படத் தயாரிப்பாளரும் Popcorn Ad Films-ன் நிறுவுநருமான Ananth Babu பேசும்போது, "தன்னுடைய மிகச் சிறந்த மருத்துப் பராமரிப்பினை இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும்கூட பொதுமக்களுக்கு அளிக்கும் MIOT வெளிக்கொண்டுவரும் இதுபோன்ற பிரச்சாரத்தின் அங்கமாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்றார்.
பெருந்தொற்று உச்சத்தில் இருக்கும்போது, சுகாதாரப் பராமரிப்பு பொதுமக்களுக்குக் கிடைக்காதிருக்கும்போது, சென்னையில் COVID மற்றும் COVID அல்லாத நோயாளிகளுக்கு தன்னுடைய கதவுகளைத் திறந்து வைத்திருந்த ஒரு சில மருத்துமனைகளில் MIOT-ம் ஒன்று. COVID பராமரிப்புக்கென்று தனியானதொரு ஒரு தனித்த பகுதியையே MIOT ஒதுக்கி வைத்தது.
இந்தத் திட்டம் பற்றி Ananth அவர்கள் மேலும் பேசியபோது, "'COVID-19 காலத்தில் நீடித்த பராமரிப்பு' என்ற MIOT-ன் பிரச்சாரம் பற்றித் தெரிவிப்பதுதான் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியின் சுருக்கம்". நோயாளிகள் மருத்துவமனையைத் தொடும் இடங்கள் முழுவதும் MIOT மிக விரிவான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது. சமூக இடைவெளி மற்றும் பொது முடக்க வழிகாட்டுதல்களுக்குக் கட்டுபட்டு ஒட்டுமொத்தப் பிரச்சாரத்தையும் நாங்கள் படம்பிடிக்க வேண்டியதிருந்தது. தொலைதூரத்திலிருந்து வேலை செய்யும் எமது நிபுணர்களின் உதவியோடு படப்பிடிப்பையும், எடிட்டிங்கையும், போஸ்ட்-புரொடக்ஷனையும் எங்களால் முடிக்க முடிந்தது."
சென்னையில் உள்ள Popcorn Films பற்றி
Popcorn Films என்பது சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் முன்னணி விளம்பரப் படத் தயாரிப்பு மையமாகும். தலைமை படத் தயாரிப்பாளரான Ananth Babu தலைமையேற்றிருக்கும் இத்தயாரிப்பு மையம் Butterfly Gandhimathi Appliances, GRB Dairy Foods, Standard Fireworks, Yamaha, Indian Oil, Tamil Nadu Government, Classic Polo போன்ற பல பிராண்டுகளின் பிரபலமான பல பிரச்சாரங்களில் தனது பங்களிப்பை ஆற்றியிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, கீழ்க்காணும் வலைதளத்தைப் பார்க்கவும்:
http://www.popcornadfilms.com/
ஊடகத் தொடர்பு:
MU Ananth Babu
[email protected]
Ad Filmmaker, Popcorn Films
Share this article