.Shiksha டொமைன் பெயர்களுக்கு PIIPL சலுகையை அறிவிக்கின்றது
புது தில்லி, March 27, 2019 /PRNewswire/ --
Pan India Internet Pvt. Ltd. (PIIPL), கிட்டத்தட்ட 500 கல்வி வலைத்தளங்களைக் கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெறிய நெட்வொர்க்கான- India Education Network (IEN) ன் கீழ் இன்று.Shiksha டொமைன் பெயர்களுக்கு, மிகவும் குறைந்த விலையில் சலுகையை அறிவித்தது, முதல் வருடத்திற்கு ரூ.411/- மட்டுமே.
ஒரு பிரத்யேக டொமைன் பெயர் பதியும் வலைதளமான www.website.shiksha வில், 2019 ஜூன் 30வரையில், அமெரிக்காவின் Afilias Inc. உடன் இணைந்து PIIPLஇந்த தனித்துவமான வாய்ப்பை அறிவித்துள்ளது.
Pan India Internet Private Limited (PIIPL)ன் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. Rajkumar Jalan, சலுகையை அறிவிக்கையில், "கல்வி என்ற வார்த்தைக்கான இந்திய அர்த்தமே Shiksha என்பதாகும். அதனால் .Shiksha டொமைன், இந்தியாவின் கல்வி துறைக்கு பெரும் மதிப்பை சேர்க்கும். கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் ஏராளமானோருக்கு இன்னும் இணையத்தளம் இல்லை, மேலும் .Shiksha டொமைன் பெயர் அவர்களுக்கு பிரத்யேகமான ஒரு வலைத்தளத்தை வழங்குவதற்கான சிறந்த வாய்ப்பை .Shiksha டொமைன் பெயர் வழங்குகிறது."
"பிற டொமைன்களில் தங்களின் வலைதளத்தை ஏற்கனவே வைத்திருக்கும் பல பெரிய கல்வி நிறுவனங்கள்- அவர்களின் தற்போதைய வலைத்தளங்களுக்கு திசைதிருப்பிச் செலுத்துவதற்கான முறையான .Shiksha டொமைன் பெயரைப் பயன்படுத்தலாம் மேலும் மின்னஞ்சல் அல்லது பிற சேவைகளுக்கும் அவற்றைப் பயன்படுத்த முடியும்," என்று மேலும் கூறினார்.
PIIPL ஏற்கனவே India Education Network (IEN) ஐ தொடங்கியுள்ளது, இது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களையும் உள்ளடக்கிய .Shiksha டொமைனின் அடிப்படையில் கிட்டத்தட்ட 500 கல்வி வலைத்தளங்களின் நெட்வொர்க் ஆகும், இதில் ஒவ்வொன்றுக்கும் www.Delhi.Shiksha, www.Punjab.Shiksha மற்றும் பல பிரத்யேக வலைதளங்கள் உள்ளன. நெட்வொர்க் வலைத்தளங்களில் விரிவான பட்டியலை www.indiaeducation.shiksha/network ல் காணலாம்.
இந்த வலைத்தளங்கள் இந்தியாவின் கல்விச் சமூகத்தின் நலனுக்காக மற்ற பயனுள்ள சேவைகளுடன் அனைவரின் பயன்பாட்டிற்கும் தேவையான அனைத்து கல்வி தொடர்பான தகவல்களையும் வழங்குகின்றன.
பிரத்யேக தேர்வு முடிவுகளுக்கான வளைதளமான www.results.shiksha, பல முக்கியமான் தேர்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் இந்த நெட்வொர்க்கிற்கு ஆதரவளிக்கிறது.
தொகுக்கப்பட்ட மற்றும் மிக குறைந்த விலையிலான வளைதளம் மற்றும் ஈமெயில் தீர்வு கொண்ட சலுகையினையும் கல்வித்துறைக்கு இந்நிறுவனம் வழங்குகிறது, மேலும் இதன் தொகுப்புகளில் .Shiksha டொமைனுடன் 5 பக்க வளைதளம் மற்றும் 1 பிரத்யேக ஈமெயில் கணக்கு, வருடத்திற்கு ரூ.3500/- யிலிருந்து தொடங்குகிறது.
Pan India Internet Pvt. Ltd. பற்றி:
Pan India Internet Private Limited (PIIPL) என்பது NASSCOM & ISO இரண்டினாலும் சான்றளிக்கப்பட்ட இந்தியாவின் குறிப்பிட்ட ஐடி & இணையதள நிறுவனங்களில் ஒன்றாகும். உலகெங்கிலும் இருந்து 4000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றும் செழுமையான அனுபவத்துடன் 2000+ வலைத்தளங்களை சொந்தமாக செயல்படுத்துகிறது.
நிறுவனம் பற்றிய கூடுதல் விவரங்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்: www.panindia.in
ஊடக தொடர்பு
திரு. Siddharth Jalan
+91-11-41406106
Pan India Internet Pvt. Ltd. (PIIPL)
New Delhi
[email protected]
Share this article