ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் "ஹட்சன் பசும்பால்" என்ற ஒரு புதிய பால் பிராண்டு அறிமுகம்!
சென்னை, April 3, 2019 /PRNewswire/ --
இந்தியாவின் முன்னணி தனியார்துறை பால்வள நிறுவனமான ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் (HAP) இந்திய குடும்பங்களுக்கென பண்ணையிலிருந்து வரும் பசுமையான பசும்பாலை வழங்கக்கூடிய 'ஹட்சன் பசும்பால்' என்ற புதிய பிராண்டு அறிமுகத்தின் மூலம் பால் பிரிவில் தனது பட்டியலை விரிவுபடுத்தியிருக்கிறது.
வாடிக்கையாளர்களின் அன்றாடத்தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஹட்சன் பசும்பால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பண்ணையிலிருந்து வரும் இந்த பசுமையான பசும்பால் HAP-யின் அதிநவீன பால் ஆலைகளில் கிருமி நீக்கப்பட்டு, தரம் உறுதி செய்யப்பட்டு பின் பேக் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. பாக்டீரியா கிருமிகளை நீக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலை சூடுபடுத்திப் பக்குவப்படுத்தும் முறை (Pasteurization) பயன்படுத்தப்படுகிறது. இந்த செய்முறையில் பாலிலிருந்து எதுவும் சேர்க்கவோ அல்லது நீக்கப்படுவதோ இல்லை. இந்த செய்முறையால் பால் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு பாலை அதன் உண்மையான மற்றும் இயற்கையான வடிவத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காக, பாலை கொதிக்கவைத்த பிறகு கொள்கலனின் மேல்பகுதிக்கு எழக்கூடிய பாலேடு உருவாவதற்கு வழிவகுக்கும் வகையில் ஹட்சன் பசும்பால் பதப்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் உயர்நிலை தரத்தை ஹட்சன் பசும்பால் பின்பற்றுகிறது.
ரூ.25 விலை கொண்ட ஹட்சன் பசும்பால் 500 மி.லி. பேக்குகளில் ஹட்சன் டெய்லி மையங்கள் மற்றும் இதர சில்லரை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.
ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட், HAP சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப்பிரிவு சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் J. அவர்கள் கூறுகையில், "பண்ணையிலிருந்து கறக்கப்படும் பசுமையான பாலைப்போன்று ஒரு பாதுகாப்பான பசும்பால் தேவை சந்தையில் வாடிக்கையாளர்களிடையே பெருகிவருகிறது. இந்த தேவையை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஹட்சன் பசும்பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பசும்பால் தமிழ்நாடு (சென்னை, வேலூர், திருச்சி, சேலம்) மற்றும் புதுச்சேரியில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் விரைவில் பிற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
ஊடக தொடர்பு:
Archanaa G
[email protected]
044-42696651
Perfect Relations
Share this article