இன்டெலிஸ்டே ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் (IntelliStay Hotels Pvt Ltd (IHPL)) ஹைதராபாத், ஹை டெக் சிட்டியில் 92 அறைகளைக்கொண்ட ஃபிளாக்ஷிப் பிராபர்ட்டியுடன் ஐஸ்டே ஹோட்டல்ஸ் பிராண்டை (iStay Hotels Brand) தொடங்கியுள்ளது
- இந்த பிராண்டின் கீழ் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் ராய்ப்பூரில் 5 ஹோட்டல்களை நடத்துகிறது.
- தனித்த இ-வர்த்தக பிளாட்ஃபார்ம் www.istayhotels.in -ஐ தொடங்கியுள்ளது
ஹைதராபாத், இந்தியா, Oct. 22, 2019 /PRNewswire/ -- இன்டெலிஸ்டே ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் (IntelliStay Hotels Pvt Ltd (IHPL)) சமீபத்தில் 18 அக்டோபர் 2019 அன்று ஹைதராபாத், ஹை டெக் சிட்டியில் சாய் ஸ்ரீநிவாசா ஹாஸ்பிட்டாலிட்டி குழுமத்துடன் (Sai Srinivasa Hospitaity Group) இணைந்து புதிய ஐஸ்டே ஹோட்டல்ஸ்-ஐ (iStay Hotels) தொடங்கியுள்ளது. இந்த ஐ-ஸ்டே ஹோட்டல்ஸ் ஹை-டெக் சிட்டி (iStay Hotels Hi-Tech City) என்பது ஐ-ஸ்டே ஹோட்டல்ஸ் (iStay Hotels) பிராண்டின் முக்கியமான பிராப்பர்ட்டியாகும். மும்பை மற்றும் ராய்ப்பூரில் உள்ள முதல் இரு முன்னோடி பிராப்பர்ட்டிகளிலிருந்து கற்றுக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிராப்பர்ட்டியில் i கியூப் (Cube), i கம்ஃபர்ட் (Comfort), ஐ-கிளாசிக் (i Classic) போன்ற பல வகையான அறைகள் உள்ளன. இதில் ஐ-ஒர்க் (i-Work) என்ற சுவாரசியமான, துடிப்புமிக்க இணைந்து வேலைசெய்யும் பகுதியும், ஐ-மீட் (i-Meet) என்ற கருத்தரங்கமும், மற்றும் ஐ-செலபிரேட் (i-Celebrate) என்ற விருந்து மற்றும் மாநாட்டு வசதியும் உள்ளன.
"தி ஐ-ஸ்டே ஹோட்டல்ஸ் (The iStay Hotels) பிராண்டு என்பது முற்போக்கான சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட லைஃப்ஸ்டைல் எக்கானமி ஹோட்டல் பிராண்டாகும். இதை அதன் வடிவமைப்பிலும் பாணியிலும் காண முடியும். இணைந்து வேலை செய்வது, இணைந்து வாழ்வது, மாணவர்களின் தங்கும்வசதி முதலான குறுகிய நோக்கில் இந்த இடம் பயன்படுத்தப்படுவதை நாங்கள் பார்த்தோம். விருந்தினர்கள் தங்களுடைய விருப்பப்படி பயன்படுத்தும் "லிவ் பிளே மற்றும் ஒர்க்" ('Live Play and Work') டெம்ப்ளேட்டாக iStay ஹோட்டல் பிராண்டை இந்த பிராப்பர்ட்டி அளிக்கிறது. இதுவரை இந்த அக்டோபர்-வரை எம்மிடம் 5 ஹோட்டல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்த பிராண்டை மேம்படுத்துவோம். இங்கு வரும் விருந்தினர்கள் மக்கள் பண்பாடு மற்றும் சமூக உணர்வைப் அனுபவிக்க விரும்புகிறார்கள். இதன் வடிவமைப்பு, கிடைக்கும் வசதிகள், இசை மனநிலைகள், மெனுக்கள், பொதுப் பகுதிகள் மற்றும் உடனடி வாய்ப்புகளில் ('insta' opportunities) இது பிரதிபலிக்கப்படுகிறது," என்றார் IHPL-ன் CEO-வான திரு. பிரசாந்த் அரூர்.
அத்தியாவசியச் சேவைகளுடன் பல வசதிகளை இந்த வழக்கத்திற்கு மாறான அறைகள் வழங்குகின்றன. iStay ஹோட்டல்ஸில் உள்ள இந்த அறைகளில், முதன்மையான சேனல்களைக்கொண்ட TV செட்கள், சொகுசான படுக்கைகள், சில அறைகளில் வாசிப்புப் பகுதிகள், ஃபாஸ்ட் Wi-Fi, காம்பிளிமென்டரி காலை சிற்றுண்டி, இன்-ரூம் மினி பார், மற்றும் காப்பி மற்றும் டீ அருந்தும் இடங்கள் உண்டு. இவை தவிர, பல வகையான லைஃப்ஸ்டைல் வசதிகளையும் விருந்தினர் அனுபவிக்கலாம். முழுமையாக இயங்கும் ஜிம், ஓய்விட வசதி, வாசிக்க, வேலை செய்ய, ஓய்வெடுக்க மற்றும் சக பயணிகளுடன் இருக்க, மற்றும் பயணத்தின்போதும்வேலை செய்பவர்கள் வேலை செய்வதற்கான இடம் ஆகியவை இதில் அடங்கும்.
iStay ஹோட்டல்ஸ் ஹை டெக் சிட்டி-யில் MoXa சமையலறை உள்ளது. இங்கு பல வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு பயணிகள் உண்டு மகிழ பரிமாறப்படுகிறது. உள்ளூர் சுவையான உணவுகள் முதல் பன்னாட்டு பிரபல உணவுவரை அனைத்தையும் உண்டு மகிழலாம். நாள் முழுவதும் தங்கள் வேலையைச் செய்ய தேவையான அனைத்தும் கிடைக்கும்.
இந்த பிராப்பர்ட்டியை தொடங்கியுள்ளதோடு ஜூபிலி ஹில்ஸில் திறக்கப்பட்டுள்ள iStay ஹோட்டல்ஸோடு சேர்த்து IHPL-ன்கீழ் இந்தியா முழுவதும் உள்ள மொத்த பிராப்பர்ட்டிகள் 25-ஐ தாண்டியுள்ளது. இன்னும் 25 திட்டங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. இவற்றில் 10 ஹோட்டல்கள் மார்ச் 2020-க்குள் திறக்கப்பட உள்ளன. இதனால் அடுத்த ஆண்டு இந்த சமயத்தில் எம்மிடம் 50 ஹோட்டல்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றில் மொத்தம் 2500-க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கும். iStay ஹோட்டல்ஸ் தற்போது ஹைதராபாத்தில் ஹை டெக் சிட்டி (Hi-Tech City) மற்றும் ஜூபிலி ஹில்ஸிலும் (Jubilee Hills) மும்பையில் MIDC-யிலும், பெங்களூருவில் இன்ஃபான்ட்ரி சாலையிலும் (Infantry Road), ராய்ப்பூரில் ராய்ப்பூர் ஜங்க்ஷனிலும் (Raipur Jn) உள்ளன. மேலும், பெங்களூருவில் ராஜாஜிநகர் மெட்ரோவில் உள்ள Mango Hotels மற்றும் நாக்பூரின் நாக்பூர் ஜங்ஷனில் (Nagpur Jn உள்ள மேங்கோ ஹோட்டல்கள் iStay ஹோட்டல்ஸ் பிராண்டுக்கு மாற்றப்பட உள்ளன.
IHPL தன்னுடைய பலமான பிராண்டு போர்ட்ஃபோலியோ மற்றும் விருந்தினர்களுக்கான தனிப்பட்ட சேவைகளை அளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் சந்தைப் பங்கை தொடர்ந்து வாங்க முயற்சிக்கிறது. இந்த புதிய டெம்ப்ளேட்டுடன், IHPL நவீன பயணிக்குத் தேவைப்படும் அன்-ஹோட்டல் அனுபவத்தை அளிக்க iStay ஹோட்டல்கள் உதவும். ஸ்டே லோக்கல், ஸ்டே சோசியல், ஸ்டே ஃபூயல்டு மற்றும் ஸ்டே மைவே (Stay Local, Stay Social, Stay Fueled and Stay MyWay) என்ற நான்கு தளங்களில் கட்டப்பட்டு, ஸ்டே ஷார்ப், ஸ்டே ஹேப்பி (Stay Sharp, Stay Happy) என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ள இந்த பிராண்டு இந்தியா முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மைக்ரோ மார்க்கெட்டுகளைக்கொண்டு ஹோட்டல் தொழில் பிரமிடின் அடித்தளத்தையே அசைக்க உள்ளது.
இன்டெலிஸ்டே ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் (Intellistay Hotels Pvt Ltd - IHPL) பற்றி
இன்டெலிஸ்டே ஹோட்டல்ஸ் (IntelliStay Hotels) என்பது Apodis Hotels and Resorts Ltd-ன் ஒருங்கிணைந்த ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்டர்பிரைஸ் ஆகும். இது PRAMA-வினால் புரோமோட் செய்யப்படுகிறது. IHPL இந்தியா முழுவதும் 25 ஹோட்டல்களையும் ரிசார்ட்களையும் நான்கு பிராண்டுகளின்கீழ் நிர்வகிக்கிறது அதாவது, Apodis Collection - ஒரு பிரிமியர் அப்ஸ்கேல் ரிசார்ட் பிராண்டு; Mango ஹோட்டல்ஸ் & சூட்ஸ் செலக்ட், ஒரு அப்பர் மிட்-ஸ்கேல் பிராண்டு, Mango ஹோட்டல்ஸ் & சூட்ஸ் ஒரு மிட்-ஸ்கேல் பிராண்டு; மற்றும் iStay ஹோட்டல்ஸ், ஒரு இளம் லைஃப்ஸ்டைல் எக்கானமி பிராண்டு. IHPL இந்த ஹோட்டல்களில் 30 உணவகங்களையும் MoXa All Day, KalpaVriXa Vegetarian, X-cite Lounge, Xcuse Bar மற்றும் X-tra Grab N Go என்ற பிராண்டுகளின்கீழ் நடத்துகிறது. இந்த நிறுவனம் இந்த 25 ஹோட்டல்களில் 20 நிகழ்ச்சி இடங்களையும் நடத்துகிறது.
தொடர்புக்கு: [email protected]
Tripborn.com (TRRB) பற்றி
Tripborn.com [TripBorn Inc - NASDAQ (TRRB)] என்பது பயணம், ஃபின்-டெக் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ள ஒரு புரட்சிகரமான மற்றும் செல்வாக்குமிக்க இ-மார்க்கெட் தளமாகும். வலைதளம் மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் TRRB-யானது யதார்த்த உலகின் செயலிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கத்தக்க ஒரு தளமாக உள்ளது. TRRB என்பது இந்த வகையில் முதலாவது மட்டுமல்ல, இத்துறையில் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் லாஸ்ட் மைல் புரொவைடராகவும் உள்ளது. Tripborn - B2B's டிராவல் சர்விஸ் என்பது மிக முக்கியமான பயணத் திட்டங்களுக்கு அணுகும் ஒரே தளமாக இரக்கும். இது முகவர்களுக்கு 24/7 இணையத்தில் கிடைக்கும்.
PRAMA பற்றி
PRAMA என்பது இந்தியா முழுவதும் Apodis பிராண்டின்கீழ் ஹோட்டல்களில் முதலீடு செய்வது, நிர்வகிப்பது, நடத்துவது மற்றும் அது சார்ந்த உணவுச் சேவைகள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. PRAMA, தன்னுடைய IntelliStay ஹோட்டல்களின்கீழ் இந்தியாவில் தற்போது 21 நகரங்களில் பரவியிருக்கும் தன்னுடைய முழுவதும் சொந்தமான துணைநிலை அமைப்புகளான Apodis ஃபூட்ஸ் & பிராண்டுகள் மற்றும் IntelliStay ஹோட்டல்கள், Mango ஹோட்டல்கள், Mango சூட்கள், Mango ஹோட்டல்ஸ் செலக்ட், Mango சூட்ஸ் செலக்ட், iStay ஹோட்டல்ஸ் மற்றும் Apodis கலெக்ஷன் வழியாக 25 ஹோட்டல்களை நடத்தி வருகிறது.
ஊடகத் தொடர்பு:
தேவிகா சேகர்
[email protected]
+91-86575-65514
இன்டெலிஸ்டே ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் (Intellistay Hotels Pvt Ltd)
லோகோ: https://mma.prnewswire.com/media/885234/IntelliStay_Hotels_Logo.jpg

Share this article