இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான போக்குகள் மற்றும் வெற்றிக்கோட்பாடுகள் மீது கவனம் கொள்ளும் Cosmoprof India 2019
மும்பை, May 22, 2019 /PRNewswire/ --
இந்தியாவில் உள்ள ஒப்பனை சந்தையின் குறிப்பிட்ட தேவைகளை முக்கிய கருத்துகளாக கொண்ட Cosmoprof Indiaன் 2019 பதிப்பு, மும்பையில் உள்ள பாம்பே எக்சிபிஷன் சென்டர்(பிஈசி)ல் ஜூன் மாதம் 12 ஆம்தேதி முதல் 14 ஆம்தேதி வரை BolognaFiere மற்றும் UBM India ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/887631/Cosmoprof_India_Logo.jpg )
மும்பை நிகழ்ச்சியில் கலந்தாலோசனை செய்யப்படும் முக்கிய கருத்துகளில் சமீபத்திய போக்குகள், சிறந்த தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் தீர்வுகள்,சிறப்பாக செயல்படும் விநியோக கொள்கைகள் ஆகியவை அடங்கும். 19 நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு கொள்ளும் இந்த கண்காட்சியானது, தொழில்துறையின் அனைத்து பிரிவுகளையும் குறிக்கிறது: மூலப்பொருளிலிருந்து இயந்திரம் மற்றும் ஆட்டோமேசன் வரை, ஒப்பந்த உற்பத்தி முதல் தனியார் லேபிள் வரை, மற்றும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பேக்கேஜிங் முதல் பூர்த்தி செய்யப்பட்ட தயாரிப்பு வரை- வாசனைபொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா, முடி, நகம்மற்றும் இயற்கை மற்றும் ஆர்கானிக் நிலையங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.
Cosmoprof Indiaல் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கிழக்கு நாடுகள் போன்ற சர்வதேச ஆபரேட்டர்கள் மற்றும் உள்ளூர் ஆபரேட்டர்களின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தவிற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் தங்கள் ஒப்பீட்டு சந்தையில் எதிர்கால கண்டுபிடிப்புகளை காணலாம், உற்பத்தியாளர்கள், பேக்கேஜிங் மற்றும் இயந்திர ஸ்பெஷலிஸ்டுகள், சப்ளையர்கள் தங்கள் நிறுவனங்களுக்கான மிகவும் விரும்பத்தக்க தொழில்துறை தீர்வுகளை கண்டறியலாம். சலூன் முதலாளிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தங்கள் விற்பனை புள்ளிகளை எவ்வாறு வளப்படுத்தலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
Cosmoprof India, Made in India beautyன் மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பு தளமாக அமைகிறது- அது உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் நெட்வொர்க்கிங் செய்யவும் பங்குதாரர்களாகவும் இணையவும் வாய்ப்பளிக்கிறது , அது வளர்ச்சி கண்டுபிடிப்புகள் , தொழில்நுட்பங்கள் மற்றும் பிரிவின் தீர்வுகளைத் தூண்டும், அதன் மூலம் வெளிப்பாட்டின் தரத்தை உயர்த்தலாம். இன்றைய நாளில் இந்தியா அதிகளவு சாத்தியமுள்ள சந்தையாக உள்ளது- 2018 மற்றும் 2023 காலத்துக்கு இடையில் குறிப்பாக 9.7% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது வாசனை திரவிய பிரிவில் 19.6% உடன் மேக் அப் பிரிவில் +13.1 % வளர்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு முயற்சிகள் - COSMOTALKS & COSMOPROF ONSTAGE
Cosmoprof India இந்திய ஒப்பனை தொழில்துறைக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் மிக ஆழமான ஆய்வுகளுக்கான முக்கிய பிரதிநிதித்துவமாக அமைகிறது. CosmoTalks காலண்டரில் ஒர்க்ஷாப்ஸ் மற்றும் பயிற்சி அமர்வுகள் அடங்கியுள்ளன. அது ஆபரேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கானது மேலும் துறை வல்லுநர்கள், டிரென்ட் மற்றும் வடிவமைப்பு முகவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அதில்பங்கேற்று தங்கள் அறிவைப் பகிர்ந்து வர்த்தக மேம்பாட்டிற்கு உதவுவர். இந்திய சந்தைக்கான தாக்கம்தரும் டிரென்டுகளை அவர்கள் கலந்தாலோசிப்பார்கள், பிராண்டு விநியோகம் மற்றும் தகவல்தொடர்பு தீர்வுகள், முக்கிய துறைகளில் மேம்பாடு அதாவது தலைமுடி மற்றும் நகம் தொழில்துறை வல்லுநர்கள் , மற்றும் பச்சை அழகு கருத்து போன்றவை கலந்தாலோசிக்கப்படும். MINTEL, KLINE & GROUP, CENTDEGRES, WGSN, EUROMONITOR INTERNATIONAL மற்றும் BEAUTYSTREAMS போன்ற முக்கிய நிறுவனங்கள் இதில் பங்கேற்பார்கள்.
LOOKX, SWATI, DERMAPEN, PEVONIA, DNG GROUP with BARBA ITALIANA மற்றும் RICA போன்ற கண்காட்சி நிறுவனங்களுக்கு Cosmoprof Onstage வாய்ப்புகளை வழங்கும் தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், மேலும் வாங்குபவர்கள் மற்றும் தொழில்நுட்பவல்லுநர்கள் சந்திக்க வாய்ப்பாக அமையும்
COSMOPROF INDIA விருதுகள்
Cosmoprofன் ஜூன்பதிப்பில் Cosmoprof India Awards பெரும் வரவேற்பை பெறும். இந்திய தொழில்துறையில் தரம் மற்றும் ஆய்வை கொண்டாட அமைக்கப்பட்ட, விருதுகள் சிறப்பாக காட்சிபடுத்திய நிறுவனங்களை அங்கீகரித்து மேலும் வெற்றியாளர்கள் தொழில்துறை தலைவர்களுடன் இணைய அனுமதிக்கிறது. கண்காட்சியாளர்கள் மே 14 ஆம்தேதியிலிருந்து தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்; பின்னர் மே மாத இறுதியில் வல்லுநர்களின் நீதிக்குழு இறுதி வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும். வெற்றியாளர்களின் பெயர்கள் ஜூன்12 ஆம்தேதி அறிவிக்கப்பட்டு Cosmoprof Indiaன் காலா விருதுகள் நிகழ்ச்சியின்போது கௌரவிக்கப்படுவார்கள்.
முயற்சியானது சர்வதேச டிரென்ட் ஏஜென்சியான Beautystreams உடன் இணைந்து செயல்படும் மற்றும் டிசைன் ஏஜென்சி centdegrés வெற்றிக்கோப்பைகளை உருவாக்கும்.
கூடுதல் தகவல்களுக்காக , http://www.cosmoprofindia.com/en
எங்களைப் பின்தொடரவும்! http://www.cosmoprofindia.com | Facebook | LinkedIn | Instagram
UBM Asia பற்றி
உலகில் உள்ள சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட வியாபாரம், கண்காட்சிகள் மூலமாக கண்டுபிடிக்க மற்றும் வளர்ச்சியடைய மற்றும் டிஜிட்டல் உட்கருத்து மற்றும் சேவைகள் வழங்கும் UBM Asia , Informa Markets உடன் இணைந்துள்ளது. எங்களது பிராண்டு மாறிவந்தாலும், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் வெற்றிக்காண எங்களது அர்ப்பணிப்பு வலிமையாக நீடிக்கிறது.
ஊடக தொடர்பு :
ASIA:
UBM India Pvt. Ltd:
Ms. Roshni Mitra
P: +91-7506183888
[email protected]
Ms. Mili Lalwani
P: +91-9833279461
[email protected]
உலகெங்கிலும்:
BolognaFiere Cosmoprof Spa:
Mr. Paolo Landi
P: +39-02-45-47-08-320
[email protected]
Ms. Arianna Rizzi
P: +39-02-45-47-08-253
[email protected]
Share this article