பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் விருது வென்றுள்ள பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் , தமிழ்நாட்டிலிருந்து தகுதியுடைய பின்தங்கிய 100 மாணவர்கள் , வெளிநாடுகளில் ஆராய்ச்சிக் கல்வியைப் பெறும் வகையில் திட்டம் வகுத்து வருகிறது
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி , முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட வலிமையான தலைவர்கள் பங்கேற்ற இந்தியாவுக்கான சிந்தனைகள் மாநாட்டில் முக்கியப் பங்கு வகித்த டாக்டர். சந்தீப் ஆனந்த் 2022- ம் ஆண்டுக்கான ஆசிய பிரிட்டன் விருதைப் பெற்றார்.
சென்னை, இந்தியா, June 28, 2022 /PRNewswire/ -- உள்நாட்டில் ஏராளமான பாராட்டுகளையும் , விருதுகளையும் வென்ற பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் , பிரிட்டனில் அரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 2022- ம் ஆண்டுக்கான ஆசிய பிரிட்டன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சென்னையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் குழுமத் தலைவர் டாக்டர் ஜே. சந்தீப் ஆனந்த் பெற்றார்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கி , உலகம் முழுவதிலும் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைப்பதை உறுதி செய்யும் அப்பழுக்கற்ற சாதனைக்காக 2022- ம் ஆண்டின் சிறந்த கல்வியாளருக்கான ஆசிய பிரிட்டன் விருதினை டாக்டர் ஆனந்த் பெற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பங்கேற்ற விருதுகள் வழங்கும் விழாவில் , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற கீழவை உறுப்பினர் விரேந்திர சர்மாவால் டாக்டர் ஆனந்த் கௌரவிக்கப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசையில் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இதற்கேற்ப தொழில்-கல்வி உறவுகளை மேம்படுத்த மிகவும் வலிமையான அமைப்புகளைக் கொண்டமைக்காக பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கான அறிவுசார் வளர்ச்சியை உருவாக்க , தகுதியுடைய 100 பின்தங்கிய மாணவர்கள் வெளிநாடுகளில் ஆராய்ச்சிக் கல்வியைப் பெறுவதற்கு நிதி திரட்டி உதவ பாரத் குழுமம் புதிய திட்டத்தைத் தொடங்கவுள்ளதாக டாக்டர் ஆனந்த் அறிவித்தார்.
டாக்டர் ஆனந்த் கூறுகையில் , " எங்கள் கல்விக் குழுமத்தில் பயிலும் எந்தவொரு மாணவரும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் வெளிநாடுகளில் ஆராய்ச்சிக் கல்வி மேற்கொள்ள முடியவில்லை என்று நினைத்துவிடக் கூடாது. தலைசிறந்த சிந்தனைகளையுடைய அனுகூலங்கள் பெற்றிராத மாணவர்கள் , வெளிநாடுகள் சென்று ஆராய்ச்சிக் கல்வி மேற்கொண்டு நம் அனைவரையும் பெருமைப்படுத்துவதற்கு நாங்கள் உதவுவோம்" என்றார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் , பெர்க்லே பல்கலைக்கழகம் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகம் போன்ற 100- க்கும் மேற்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் பாரத் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
விருதினைப் பற்றிப் பேசிய டாக்டர் ஆனந்த் , ஆராய்ச்சிக் கல்வி உடன்படிக்கைகள் மூலம் உலகளாவிய கல்வியை அணுக தங்கள் மாணவர்களுக்கு உதவுவதற்கான பெரிய திட்டங்களின் தொடக்கம்தான் இது என்றார். மேலும் , " பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட ஒரு பெரிய கூட்டு நிறுவனம் எங்களை கௌரவப்படுத்தியதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். தென்னிந்தியாவிலுள்ள மிகவும் கிராமப்புற பின்தங்கிய மாணவர்களைக் கொண்டே நாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். வெறும் புள்ளிவிவரங்களைக் காட்டுவதற்கு மாறாக சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க இதுபோன்ற முற்போக்கு சிந்தனை செயல்முறையை ஊக்குவிப்பதன் மூலம் நாங்கள் இதைச் செய்கிறோம். அதுதான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று டாக்டர் ஆனந்த் கூறினார்.
பிரிட்ஜ் இந்தியாவால் நடத்தப்பட்ட ' இந்தியாவிற்கான சிந்தனைகள் ' மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி , கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சி. அஸ்வத் நாராயண் , லண்டன் துணை மேயர் ராஜேஷ் அக்ரவால் ஆகியோர் இடம்பெற்ற அமர்வில் முக்கியப் பிரதிநிதியாகப் பங்கேற்ற டாக்டர் ஆனந்த் , தொழில் , ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் , பாதுகாப்புக்கான தொழில்நுட்பம் , கிராமப்புற மாணவர்களிடமிருந்து திறன்களைப் பெறுவது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினார். மேலும் , " இந்தியாவின் சிறந்த சிந்தனையாளர்களுடன் விவாதித்துப் பேசியதில் முழு மகிழ்ச்சியடைகிறேன். மேலும் , நமது கல்லூரிகளை நிலையானதாக மாற்றுவதற்கும் , நாட்டின் சிறந்த இளம் திறமையாளர்களை வடிவமைப்பதில் எங்களின் அர்ப்பணிப்பைத் தொடர்வதற்கும் இது எங்களை நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்" என்று டாக்டர் ஆனந்த் கூறினார்.
பாரத் குழும கல்வி நிறுவனங்கள்:
1984- இல் தமிழ்நாட்டின் முதல் தனியார் பொறியியல் கல்லூரியாகத் தொடங்கப்பட்டு , தற்போது மிகப் பெரிய ஒரு கூட்டு கல்வி நிறுவனமாக உள்ளது. பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் தவிர்த்து , ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , ஸ்ரீ பாலாஜி நர்சிங் மற்றும் பிசியோதெரபி கல்லூரி மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா மருத்துவக் கல்வி நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்களையும் இந்தக் குழுமம் நடத்துகிறது. இந்தியாவில் அதிகம் பேர் படிக்கக்கூடிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் , பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான வாயிற்கதவாகவும் இது திகழ்கிறது. இவற்றின் செயல்பாடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள www.bharathuniv.ac.in.
டாக்டர் சந்தீப் ஆனந்த்:
டாக்டர் சந்தீப் ஆனந்த் ஒரு கல்வியாளர் , கொடையாளர் , தொழிலதிபர் , தொழில்நுட்ப ஆர்வலர் மற்றும் அறிவுக் களஞ்சியம். இவர் தற்போது பாரத் குழும கல்வி நிறுவனங்களின் தலைவராக உள்ளார். பலதரப்பட்ட கல்விக்காக , சிறிய கல்விக் குழுமத்திலிருந்து இந்தியாவின் மிகப் பெரிய கூட்டுக் கல்வி நிறுவனங்களின் ஒன்றாக வளர்ச்சியடைவதற்கு உந்துதலாக இருந்து செயல்பட்டவர். ஸ்டார்ட்-அப் மீது எப்போதும் ஒரு பார்வை கொண்டுள்ள திறன் மிகுந்த கண்காணிப்பாளர். செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த அனைத்து விஷயங்களிலும் முதலீடு செய்வதில் முனைப்பானவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் என்பதால் , அவர்களது சிந்தனைகளை தொடர்ந்து ஊக்குவிப்பவர்.
பட வரி: லண்டன் நாடாளுமன்ற கீழவையில் லண்டன் துணை மேயர் ராஜேஷ் அக்ரவாலிடமிருந்து ஆசிய பிரிட்டன் விருதினைப் பெறுகிறார் பாரத் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜே. சந்தீப் ஆனந்த்.
Photo: https://mma.prnewswire.com/media/1849027/award_winners_with_Mr_Salman_Khurshid.jpg
Photo: https://mma.prnewswire.com/media/1849028/Dr_J_Sundeep_Aanand_UK_Achiever_s_Award.jpg
Photo: https://mma.prnewswire.com/media/1849029/Dr_Sundeep_Aanand_at_the_Ideas_for_India_conference.jpg
Share this article