புது டெல்லி, April 29, 2015 /PRNewswire/ --
முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனமான ரிச்சா இன்டஸ்டிரீஸ் லிமிடெட், உத்தரகண்டிலுள்ள ஹரித்வாரில், மிக உயர்ந்த பலமாடி ஸ்டீல் கட்டுமான கட்டிடம் ஒன்றை உருவாக்கியுள்ளது. 47 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்டீல் கட்டிடம், விப்ரோ என்டர்பிரைசஸின் கொழுப்பு அமிலங்கள் உற்பத்தித் தொழிற்சாலையாகும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150428/10121599 )
சுமார் 2605 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்கட்டிடத்தின் தெளிவான உயரம் 34 மீட்டராகும் மற்றும் ஹை பே உயரம் 47 மீட்டராகும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கீழே விழுகின்ற அபாயங்களிலிருந்து பணியாளர்களை பாதுகாப்பதற்காக, கூரை மீது உயிர்காப்பு வலிமை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனில், வடிவம், பொறியியல், ஃபேப்ரிகேஷன், ஷிப்மென்ட், நிறுவல், மற்றும் நிலப்பணி தொடங்குதல் மற்றும் இவற்றுடன், அதிகபட்ச இயந்திர லோடான சுமார் 100 MT உடனான ஏழுமாடி கட்டமைப்பு ஆகியவையும் அடங்கும்.
ரிச்சா இன்டஸ்டிரீஸ் லிமிடெடின் இணை நிர்வாக இயக்குனரான டாக்டர் சந்தீப் குப்தா கூறியதாவது, "இந்தியாவிலேயே மிக உயர்ந்த ஸ்டீல் கட்டமைப்புகளில் ஒன்றை உருவாக்குவது என்பது, உண்மையில் ரிச்சாவின் சரித்திரத்தில் ஒரு மைல் கல்லாகும். இக்கட்டிடம் மிகவும் துல்லியமான பொறியியல் மற்றும் வடிவமைப்புடன் இருப்பது, பலமாடி ஸ்டீல் கட்டிடக் களத்தில் நாங்கள் கொண்டுள்ள திறனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சாதனையைக் கருத்தில் கொள்ளும்போது, எதிர்காலத்தில் எந்தவொரு சிக்கலான கட்டமைப்புகளையும் ஏற்பதற்கான உறுதியான நம்பிக்கை இப்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ளது."
கூடுதலாக, கட்டமைப்பு சார்ந்த பொறியலில் தொழில்நுட்ப்ப் புத்தமைவுகளை வெளிப்படுத்தியமைக்காக, அமெரிக்காவிலுள்ள பென்ட்லி சிஸ்டம்ஸ் (வடிவம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பின் இயக்கம் ஆகியவற்றிகான தீர்வுகளை உருவாக்கும் ஒரு மென்பொருள் நிறுவனம்) இக்கட்டிடத்திற்கு, சாதனைச் சான்றிதழை வழங்கியுள்ளது. கட்டமைப்பின் செயல்பாடு சார்ந்த செயல்திறன், டெலிவரி செயல்முறை அல்லது சேவைகளின் தரத்தை உயர்த்தக்கூடிய உயர்தரக் கட்டமைப்புகள் அல்லது மேம்பட்ட கட்டமைப்புசார் திட்ட பணிகளை தொழில்நுட்பப் புத்தமைவின் பயன்பாட்டால் எவ்விதம் வழங்க முடியும் என்பதை இந்த விருதின் பிரிவிலுள்ள திட்டங்கள் எடுத்துரைக்கின்றன.
ரிச்சா இன்டஸ்டிரீஸ் லிமிடெட் பற்றி
1993-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ரிச்சா இன்டஸ்டிரீஸ் லிமிடெட், ஜவுளி, முன்வடிவமைக்கட்ட கட்டிடம் (PEB), கட்டுமான ஸ்டீல் மற்றும் டர்ன்கீ தீர்வுகள் துறையில் செயல்படும் ஒரு முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனமாகும். ஓர் ஐஎஸ்ஓ 9001:2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனமான ரிச்சா இன்டஸ்டிரீஸ், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். நிறுவப்பட்ட நாள் முதல் ஜவுளித் துறையில் பிரமாதமான வளர்ச்சி கண்ட பிறகு ரிச்சா இன்டஸ்டிரீஸ், 2008-ம் ஆண்டில் முன் வடிவமைக்கப்பட்ட கட்டிடத் துறைக்குள் பிரவேசித்தது. இன்று, நாட்டின் வடக்குப் பகுதியில் இயங்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அது திகழ்கிறது. இந்நிறுவனம் தனது தலைமை மற்றும் பதிவுபெற்ற அலுவலகத்தை ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாதில் அமைந்துள்ளது மற்றும் அதன் முழுச் செயல்பாட்டிலுள்ள அதிநவீன PEB உற்பத்தித் தொழிற்சாலையானது, உத்தரகண்டிலுள்ள காஷிப்பூரிலும், ஜவுளி உற்பத்தித் தொழிற்சாலை ஹரியானாவிலுள்ள காவ்ன்ராவில் (ஃபரிதாபாத்) அமைந்துள்ளது. சர்வதேச அங்கீகாரமுள்ள, இந்திய பதிவுத் தர அமைப்பினால் (IRQS) வழங்கப்படுகின்ற OHSAS 18001:2007 சான்றளிப்பைப் பெற்றுள்ள முதல் இந்திய PEB பொது பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற பெருமையையும் ரிச்சா கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு அணுகவும்: http://richa.in/
ஊடகத் தொடர்பு:
ரிச்சா கவுர்,
[email protected],
+91-9718998811,
AM - கார்ப்பரேட் கம்யூனிகேஷன்,
ரிச்சா இன்டஸ்டிரீஸ் லிமிடெட்
Share this article