சுவாமி குர்மீத் ராம் ரஹிம் சிங் ஜி இன்சான் நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்
சிர்சா, இந்தியா, May 18, 2015 /PRNewswire/ --
இந்த ஆண்டின் மிக சோகமான சம்பவமாகிய, நேபால் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட பூகபத்தின் போது, சுவாமி குர்மீது ராம் ரஜீம் சிங் ஜி இன்சான் அவர்களுடைய வழிகாட்டுதல் மற்றும் வழிநட்த்துதலின் கீழ் தன்னார்வத் தொண்டர்கள், நேபாலில் பாதிக்கப்பட்ட இடங்களில் இயல்புநிலை திரும்புவதற்காக, அயராது சேவை அளித்தனர்.
ஷா சத்னம் ஜி கிரீன் 'எஸ்' நல படை பிரிவு தன்னார்வத்தொண்டர்கள், டேரா சச்சா சவுதாவின் ஆதரவின் கீழ் இயற்கை பேரழிவுகளினால் பாதிக்கப்பட்டோரை மீட்கவும் மறுவாழ்வு அளிக்கவும் பணிசெய்து வருகின்றனர், அவர்கள் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நலனை உறுதிசெய்ய நேபாலின் நுவகோட் மாவட்டத்தை அடைந்தனர். மே 3ஆம் தேதி 2015 அன்று 1000 ஷா சத்னம் ஜி கிரீன் 'எஸ்' தன்னார்வத்தொண்டர்களுடன், மதிப்பிற்குரிய சுவாமி குர்மீத் ராம் ரஹிம் சிங் ஜி இன்சான் அவர்கள் நேபாலின் நுவகோட் மாநிலத்தின் பீபல்தார் கிராமத்தை அடைந்து நிவாரணப் பொருட்களை வழங்கி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் நலனையும் விசாரித்தார். நேபாலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகதீஷ்வரி நர்சிங் மதிப்பிற்குரிய சுவாமி குர்மீத் ராம் ரஜிம் சிங் ஜி இன்சானுடைய சந்திப்பில் உடன் சென்றார். தன்னார்வத்தொண்டர்கள் வீடில்லாதோருக்கு கூடாரங்களை கட்டினார்கள், அதோடு பால் பவுடர், சிவப்பு மிளகாய் தூள், மெழுகுவர்த்தி, சர்க்கரை, மஞ்சள் தூள் உப்பு, அரிசி, கோதுமை மாவு, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், தட்டுகள், குக்கர்கள் உள்ளிட்டவற்றை பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினர். மற்றும் 35 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைத்து தேவையுள்ளோருக்கு மருத்துவ சேவைகளை அளித்தது. இதற்கு முன்பாக 30 ஏப்ரல் 2015 ஆம் தேதி, டேரா சச்சா சவுதா நேபாலத்திலுள்ள பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 59 வாகனங்களை அனுப்பி வைத்தார், அதில் உணவுதானியங்களும், மறுவாழ்வு பொருட்களும் நிரம்பிய 34 டிரக்குகள்,ஆம்புலென்ஸ்கள், ஒரு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரை தூக்கிச் செல்லும் வாகனங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கும். நேபாலின் உள்துறை அமைச்சகம் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள விதூர் டேஹ்சில் கிராமத்திற்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை கொடுத்தது. இந்த பணியின் ஒரு பகுதியாக சுவாமி குர்மீத் ராம் ரஹிம் சிங் ஜி இன்சான் அப்பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளை மறுசீரமைத்து மறுகட்டுமானம் செய்தார். முதல் பள்ளி நுவாகோட் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஷாஹித் ஜகத் பிரகாஷ் ஜங் ஷா சமஸ்கிருத இரண்டாம்நிலைப் பள்ளி (தேவிகாத்). 400க்கும் மேற்பட்ட தன்னார்வத்தொண்டர்களின் அயராத பணியால் ஸ்ரீ ஷாஹித் ஜகத் பிரகாஷ் ஜங் ஷா சமஸ்கிருத இரண்டாம்நிலைப் பள்ளி இரண்டு நாட்களில் நிறைவடைந்தது. பூகம்பத்தினால் தரைமட்டமான அந்த பள்ளியின் சுவர்கள் மறுகட்டுமானம் செய்யப்பட்டு, கரும்பலகைகள், மேசைகள், சோதனைக்கூட அறைகள் மற்றும் பிற அத்தியாவசியமான பொருட்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. 15 கட்டுமான தொழிலாளர்கள், 10 மரவேலை செய்பவர்கள், 10 இரும்புவேளை செய்பவர்கள் மற்றும் பிற தன்னார்வத்தொண்டர்கள் பணியை நிறைவேற்றினர். மறுகட்டமைபு செய்யப்பட்ட பள்ளி, சுவாமி குர்மீத் ராம் சிங் ஜி இன்சான் அவர்களால் மே 7, 2015 அன்று தொடங்கிவைக்கப்பட்டது இந்த தருணத்திலே, இந்த பள்ளியின் முதல்வரும், நுவாகோட்டில் வசிப்பவர்களும் சுவாமி குர்மீத் ராம் சிங் ஜி இன்சான் அவர்களிடம் ஒரு கௌரவிக்கும் கடிதத்தை அளித்து குழுவுக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள்.
இரண்டாம் பள்ளியாகிய, நேபாளத்தில் உள்ள நுவகோட் மாவட்டத்தின் ஸ்ரீ ரன்புவனேஷ்வரி இரண்டாம்நிலை உயர் பள்ளியின் மறுகட்டுமானப்பணி நிறைவுசெய்யப்பட்டு டேரா சச்சா சவுதா அவர்களால் மே 9ஆம் தேதி தேவிகாட்டின் அருகாமையில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பள்ளியில் 10 புதிய அறைகள் கட்டப்பட்டு, தரைமட்டமான அறைகள் சரிசெய்யப்படன. இதை தவிற, மாணவர்களின் பாதுகாபை உறுதிசெய்ய எல்லை சுவரும் கட்டப்பட்டது. நிர்வாக குழு மற்றும் அந்த பள்ளியின் ஊழியர்கள் அனைவரும் இந்த மனிதாபிமான செயலுக்காக தங்கள் மனம்நிறைந்த நன்றியை சுவாமி குர்மீத் ராம் சிங் ஜி இன்சான் அவர்களுக்கும் தன்னார்வத்தொண்டர்களுக்கும் தெரிவித்தனர்.
மே 9ஆம் தேதி வரை, 4224 குடும்பங்களுக்கு ரேஷன் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன, 3332 மக்களுக்கு கூடாரங்கள் ஏற்படுத்தப்பட்டன மற்றும் 7669 பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ குழுக்களால் பரிசோதிக்கப்பட்டனர்.
மதிப்பிற்குரிய சுவாமி குர்மீத் ராம் சிங் ஜி இன்சான் அவருடைய தன்னார்வத்தொண்டர்களோடு மே 12 2015 அன்று காட்மாண்டுவுக்கு கிழக்கே 76 கிமி(47 மைல்) தொலைவில் மையம்கொண்ட மற்றும் ஒரு பெரிய நிலநடுக்கத்தை அடுத்து, மீண்டும் நேபாலுக்குச் சென்று அங்கே இன்னொறு சுற்று நிவாரண செயல்பாடுகளை துவக்கிவைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைப்பைக் குறித்து:
http://derasachasauda.org/introduction/
முந்தைய பேரழிவு நிவாரண நடவடிக்கைகள்ச்:
http://www.derasachasauda.org/disaster-relief-operations
https://www.youtube.com/watch?v=1CNSl8GZwdg
படங்களுக்கான இணைப்புகள்:
https://www.facebook.com/media/set/?set=a.294366770577662.90769.126295580718116&type=3
https://www.facebook.com/media/set/?set=a.1077714505576214.1073741917.126295580718116&type=3
https://www.facebook.com/media/set/?set=a.1077325122281819.1073741916.126295580718116&type=3
https://www.facebook.com/media/set/?set=a.1076805449000453.1073741915.126295580718116&type=3
https://www.facebook.com/media/set/?set=a.1076304125717252.1073741914.126295580718116&type=3
https://www.facebook.com/media/set/?set=a.1076300575717607.1073741913.126295580718116&type=3
https://www.facebook.com/media/set/?set=a.1075568219124176.1073741912.126295580718116&type=3
ஊடக தொடர்பு:
விகாஸ் இன்சான்
+91-9810338362
[email protected]
Share this article