நொய்டா, இந்தியா, May 18, 2015 /PRNewswire/ --
ஊடக மற்றும் கேளிக்கைத் துறையின் சர்வதேச சேம்பர் (ICMEI), சர்வதேச ஒத்துழைப்பு, அமைதி மற்றும் வளமையை அடையும் நோக்கத்திற்காக, உலகின் அனைத்து நாடுகளின் ஊடக மற்றும் கேளிக்கை தொழில்துறையை ஒருங்கிணைக்கும் ஒரே குறிக்கோளுடன் நிறுவப்பட்டதாகும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150518/10122978)
"எந்தவொரு சேம்பர் ஆஃப் காமர்ஸும், உலகிலுள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி, ஊடக மற்றும் கேளிக்கை தொழில்துறையின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்," என்றார், ஐந்து முறை உலக சாதனையாளரான, மார்வா ஸ்டூடியோஸ் மற்றும் ICMEI-ன் தலைவரான திரு. சந்தீப் மார்வா.
ICMEI, 162 சர்வதேசக் குழுக்கள், மற்றும் 80 தேசியக் குழுக்களை உருவாக்கியுள்ளதுடன், 100 நாடுகளில் வலிமையுடன் கால்பதித்துள்ளது.
சமீபத்தில், இந்தியாவில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், திரைப்படங்கள், ஊடகங்கள், கலை மற்றும் கலாச்சாரத்தின் மூலம், பல்வேறு நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்த சேம்பர் மேற்கொண்டுள்ள, வலிமைமிக்க முயற்சியைப் பாராட்டினார்கள்.
"இந்த சேம்பர் சமீபத்தில், சுற்றுலா, திறன் மேம்பாடு, ஃபேஷன் மற்றும் சுற்றுச்சூழல் மீதான குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளது. ஒரு திறன் மேம்பாட்டுக் குழு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாப் பள்ளி, ஃபேஷன் மற்றும் உள்அலங்காரப் பள்ளி ஆகியவற்றைத் தொடங்குவதற்கும், ஒவ்வொரு பள்ளியிலும், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலையை மேம்படுத்துவதை ஒரு பாடமாக ஊக்குவிப்பதற்கும், எங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது," என்று "உலக ஊடக குரு" என ஏற்கனவே பட்டம் பெற்றுள்ள மார்வா தொடர்ந்து கூறினார்.
நைஜீரியா, செனகல், ஹங்கேரி, இஸ்ரேல், வேல்ஸ், போலந்து, பெரு, தென்னாப்பிரிக்கா, சூடான், எகிப்து, யூஎஸ்ஏ மற்றும் மேலும் பல நாடுகளில், தனி திரைப்பட மற்றும் கலாச்சார குழுக்களைத் தொடங்கியிருப்பதன் மூலம், ICMEI தனது நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தனது சொந்த செய்தித்தாள், வானொலி நிலையம், டிவி சேனல், திரைப்பட மற்றும் டிவி தயாரிப்பு அமைப்பு, ஆராய்ச்சி மையம், திரைப்பட ஸ்டூடியோக்கள், திரைப்படப் பள்ளி மற்றும் தொழிற்பள்ளி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரே சேம்பர் ICMEI-ஆகத்தான் இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு, அணுகுங்கள் http://www.icmei.in
ஊடகத் தொடர்பு
ஈஷா ஷர்மா
[email protected]
+91-120-4831190
உள்ளடக்க எழுத்தாளர்
ஏஷியன் சொசைட்டி ஆஃப் ஃபிலிம் அன்ட் டெலிவிஷன்
Share this article