மொழிபெயர்ப்பு பணி: CarDekho.com மூன்று உள்நாட்டு மொழி இணையதளங்களை வெளியிடுகிறது
ஜெய்பூர், இந்தியா, May 21, 2015 /PRNewswire/ --
தனது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை வெளியிடும் முதல் ஆட்டோ போர்டல்
CarDekho.com தனது போர்டலை இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ளது: ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு. கிர்னார் மென்பொருளின் ஒரு பகுதியாக, Gaadi.com மற்றும் பையிங்ஐக்யூ ஆகியவற்றை வாங்கியதற்காகவும், தன்னுடைய தொடர் பி நிதிதிரட்டலில் 300 கோடி ரூபாய் திரட்டியதற்காகவும் CarDekho.com செய்திகளில் இடம்பெற்று வருகின்றது.
கீழ்காணும் இணைப்புகள் மூலமாக இந்த உள்நாட்டு மொழி இணையதளங்களை அணுக முடியும்:
இந்த மொழி இணையதளங்கள் வெளியீட்டின் மூலமாக முதன்மையான ஆட்டோ போர்டல் என்கிற அதன் நிலை மேலும் வலுப்படும். இதை குறித்து கருத்து தெரிவிக்கும்போது, அமித் ஜெயின், சிஇஒ & துணை-நிருவனர் கிர்னார் மென்பொருள் இவ்வாறு கூறினார், "கார்களுக்கான அவர்களுடைய தேடலில் மகத்தான வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருகிறோம். கடந்த நிதியாண்டில் 152 மில்லியன் வருகைகளை கடந்து சாதனைபடைத்தோம். அதிகமான தனித்துவப்படுத்தப்பட்ட அனுபவத்தின் மூலம், CarDekho.com மொழி இணையதளங்களின் மூலமாக புதிய நேயர்களின் தொகுப்பை குறிவைக்கிறது, ஆகவே இதன் மூலம் இந்த நிதியாண்டிற்குள் எங்களால் எங்கள் போக்குவரத்தை இரட்டிப்பாக மாற்ற முடியும்."
இந்த நிறுவனம் ஒரு எளிமயான கூகுள் மொழிபெயர்ப்பு வழிமுறையை பயன்படுத்தி ஒரு உரைநடையை பல மொழிகளுக்கு மாற்றுவதை தாண்டி சென்றதன் மூலம் அது CarDekho.com அனுபவத்தை இனிமையானதாக பராமரித்து உள்ளது.
ராஹுல் யாதவ், தயாரிப்பு தலைவர், CarDekho.com, இவ்வாறு கூறுகிறார், "இணையதளத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக மொழிபெயர்ப்பது கட்டாயமாக மாறிவிட்டது. முந்தைய CarDekho.com இணையதளம் பல மொழி மற்றும் பல பிராந்திய திறன்களை ஆதரிக்கவில்லை என்பதால், இதை அடைவதற்கு நாங்கள் தொடகத்தில் இருந்தே ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளோம். ஒரு பயனர் செய்ய வேண்டியது எல்லாம், CarDekho.com இணையதளத்திற்கு வந்ததும் தன்னுடைய விருப்ப மொழியை தேர்ந்தெடுப்பது தான்."
CarDekho.com குறித்து
CarDekho.com என்பது மார்ச் 2008-இல் நிருவப்பட்ட கிர்னார் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மையான போர்டல். CarDekho.com இன்று இந்தியாவின் மிகப்பிரபலமான மற்றும் விருப்பமுள்ள வாங்குநர்கள், பெருமைமிகும் உரிமையாளர்கள், தானியங்கி அபிமானிகள் மற்றும் தீவிர ரசிகர்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள கார் டீலர்களின் முன்னணி ஆட்டோ போர்டலாகவும் இருக்கிறது. கார்தேகோ தர்போது ஒவ்வொரு மாதமும் 10 மில்லியன் தனித்துவமான வருகையினருடன் மாதந்தோறும் 17 மில்லியன் வருகையினரைப் பெற்று வருகின்றது. இந்நிறுவனம் சமீபத்தில் மற்றும் ஒரு முன்னணி தானியங்கி போர்டலான Gaadi.com மற்றும் பையிங்ஐக்யூ என்னும் ஒபீட்டு ஷாப்பிங் போர்டலையும் வாங்கி தனது தொகுப்புடன் இணைத்துள்ளது. கௌரவம் மிக்க, '2014 ஆம் ஆண்டின் இணையதளம்' விடுதை சமீபத்தில் பெற்ற CarDekho.com பல்வேறு மரியாதைக்குரிய நிறுவன்ங்களின் பாரட்டுதல்களை பெற்றுள்ளது, அதில் 'சிறந்த கார் இணையதளம் 2014', 'சிறந்த பிரபலமான இணையதளம் 2012' மற்றும் 'ஆண்டின் இணையதளம் இந்தியா' தொடர்ச்சியாக இரண்டு முறை வழங்கப்பட்ட்து 2011 மற்றும் 2012 ஆண்டுகளில்.
பயணத்தின் தொடக்கத்தில் இந்த போர்டல் '2009-இன் சிறந்த ஆட்டோமோடிவ் இணையதளம்' விருதை வென்றது. மேலும் விவரங்களுக்கு, வருகைதாருங்கள்: www.CarDekho.com
கிர்னார் மென்பொருள் குறித்து
கிர்னார் மென்பொருள் என்பது ஒரு தகவல்தொழில்நுட்ப நிறுவனம் இது கடல்கடந்த தயாரிப்புகள் மற்றும் அயலாக்கம் செய்யப்பட்ட மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் பணிசெய்கிறது. இது இரண்டாம் சுற்று நிதிதிரட்டலில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்று, 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்னும் மதிப்பீட்டை தற்போது பெற்றுள்ளது. இந்த நிறுவன குழுமம் சமீபத்தில் போற்றுதற்குரிய திரு.ரடன் டாடாவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது மற்றும் இந்தியாவின் ஆட்டோ விளம்பர பிரிவை உலக அளவில் கொண்டு செல்வதற்கான அடுத்தகட்ட வர்த்தக மேம்படுத்தலுக்கான ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளும். BikeDekho.com மற்றும் PriceDekho.com உள்ளிட்ட வேறு சில வெற்றிகரமான போர்டல்களையும் இந்த குழுமம் இயக்கிவருகின்றது. 2020 ஆம் ஆண்டில் ஒரு பல-பில்லியன் டாலர் நிறுவனமாக மாறி புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலமாக உலகளவில் கால்தடம் பதிக்க வேண்டும் என்பதே இந்த குழுமத்தின் தரிசனம்.
ஊடக தொடர்பு:
சாரு கிஷ்னானி,
[email protected],
+91-9001599555,
விபி டிஜிட்டல் மார்கெட்டிங்,
கிர்னார் சாஃப்ட்வேர் பிரைவேட். லிமிடட்.
Share this article