புதுதில்லி, June 29, 2015 /PRNewswire/ --
ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 475 நகரங்களில் இயங்கும் வலைத்தளங்களின் பிணைப்பாகிய IndiaOnline.in, VC/தனியார் ஈக்விட்டி நிதியளிப்பு வாயிலாக 10 மில்லியன் டாலர் (சுமார் 60 கோடி ரூபாய்) திரட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150626/752467)
புதுதில்லியில் அமைந்துள்ள இந்த நிறுவனம் இந்த நிதியை தனது விரிவாக்கத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் மண்டல அலுவலகங்களை அமைத்தல், கிளை வலையமைப்பை வளர்த்தல் மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியவை உள்ளடங்கும்.
"எங்களது விரிவாக்கத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக அடுத்த சில மாதங்களில் நாங்கள் சுமார் 10 மில்லியன் டாலர் திரட்ட வேண்டும் என எதிர்பார்த்துள்ளோம், மற்றும் அதன் வெற்றியைப் பொறுத்து, நாங்கள் அடுத்த தவணைக்குத் திட்டமிடுவோம். நாங்கள் ஒரு இ-காமர்ஸ் நிறுவனம் அல்ல, மேலும் எங்களது வணிகத்தில் பணப் புழக்கம் மிகச் சிறிதளவே உள்ளது. அடுத்த 12 மாதங்களில் நாங்கள் இலாபம் ஈட்டத் தொடங்குவோம்," என்றார் IndiaOnline.in நிறுவனத்தின் இயக்குனர் ராகுல் ஜலான் அவர்கள்.
மூலோபாயக் கூட்டுக்கள்
அதோடு, நிறுவனமானது மூலோபாயக் கூட்டுக்களையும் உள்ளே கொண்டுவருவதற்கு முயற்சி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிதி அடுத்த 12 முதல் 18 மாதங்களில் அதன் தொழிலாளர் எண்ணிக்கையை சுமார் 120 பேராக (தற்போது 45 உள்ளனர்) அதிகரிப்பதற்கும், சுமார் 5,000 வணிகக் கூட்டாளிகளைச் சேர்ப்பதற்கும், 500 கிளைகளாக (தற்பொழுது 15 கிளைகள் உள்ளன) அதிகரிப்பதற்கும், நான்கு மண்டல அலுவலகங்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.
இந்தியாவின் ஒவ்வொரு நகரத்துக்கும் 475க்கும் மேற்பட்ட அர்ப்பணிப்பு போர்ட்டல்களைக் கொண்டுள்ள IndiaOnline.in-இன் பக்கத்தை, எந்தவித சந்தைப்படுத்தல் முயற்சிகளும் இன்றி சராசரியாக மாதம் ஒன்றுக்கு 2 மில்லியன் மக்கள் பார்த்து வருகின்றனர். உள்ளூர் தேடுபொறி, இலவச வணிகப் பட்டியல்கள் மற்றும் சிறிய வணிகங்களுக்கான வலைத்தள உருவாக்க வசதி, நகர வழிகாட்டி, வரி விளம்பரங்கள், தினசரிச் செய்திகள் மற்றும் புதுப்பித்தல்கள் ஆகியவை உள்ளிட்ட சேவைகளை இது வழங்குகின்றது.
இதன் ஒரு சில வலைத்தளங்கள் delhionline.in, mumbaionline.in, kolkataonline.in மற்றும் chennaionline.in ஆகியவை ஆகும்.
IndiaOnline.in பற்றி:
இண்டியா ஆன்லைன் நெட்வொர்க் ஆனது பான் இந்தியா இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு முன்முயற்சி ஆகும். இது இந்தியாவை மையமாகக் கொண்ட 475-க்கும் மேற்பட்ட போர்ட்டல்களைக் கொண்ட தனித்துவமான வலையமைப்பு ஆகும், மற்றும் இதன் வகையிலேயே இது மிகப்பெரியது ஆகும். அவை இணையதளத்தில் கிடைக்குமாறு செய்வதற்குச் சாத்தியமுள்ள அனைத்து ஆதாரங்களையும் சேவைகளையும் கொண்ட ஒரு வலையமைப்பை உருவாக்கி வருகின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநகரங்கள் மற்றும் கிட்டத்தட்ட 450 முக்கிய நகரங்கள் அனைத்தும் அவற்றுக்கென அர்ப்பணிக்கப்பட்ட போட்டலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அதே சமயம், நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 4000 மற்ற நகரங்கள் தங்களுடைய மாநிலத்தின் போர்ட்டல்களில் துணைத் தளங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஊடகத் தொடர்பு:
பூஜா குமாரி
மின்னஞ்சல்: [email protected]
அலைபேசி: +91-7838033290
தரைவழித் தொலைபேசி: +91-11-41306106
வலைத்தளம்: http://www.indiaonline.in/
Share this article