புதுடெல்லி, July 15, 2015 /PRNewswire/ --
பேடன்ட் பென்டிங் சர்வர்லெஸ் செக்யூர்™ கட்டமைப்பானது, உலகின் வேறு எந்த மெஸேஜிங் ஆப்-ஐக் காட்டிலும் மெஸேஜ்கள் அதிகமாக பாதுகாக்கப்படுவதையும், தரவின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
உலகின் மிகப் பாதுகாப்பான குறுக்குத் தள மொபைல் செய்தியனுப்பும் பயன்பாடான RakEM-ஐ உருவாக்கியுள்ள, ராக்கேட்டூ கம்யூனிகேஷன்ஸ், இன்று அலுவல்சார் முறையில் தனது செய்தியனுப்பும் பயன்பாட்டுச் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. RakEM-ன் காப்புரிமை-நிலுவையிலுள்ள சர்வர்லெஸ் செக்யூர்™ மொபைல் மெஸேஜிங் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் மூலம் ஆற்றலளிக்கப்படும் RakEM, நோ டாக்ஸ் ரிக்ரெட் [வீடியோவைப் பார்க்கவும்] மற்றும் டோட்டல் ரீகால் போன்ற தனித்துவமான அம்சங்களை வழங்கி, பயனரின் செய்திகள் மேலும் அந்தரங்கமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதையும், இன்று உலகில் வேறு எந்தவொரு மெஸேஜிங் பயன்பாட்டைவிடவும் பயனர் தரவு மேலும் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150714/10126730)
"இந்தியாவில், 95 சதவீத்த்திற்கும் அதிகமான மொபைல் பயனர்கள், ஒரு நாளில் பலமுறை மெஸேஜிங் ஆப்களை அணுகுகின்றனர், மிகவும் தனிப்பட்ட மற்றும் சில சமயங்களில் அந்தரங்கமான தகவல்களையும் பரிமாறிக் கொள்கின்றனர்," என்றார் ராக்கேட்டூ-வின் முக்கிய செயலதிகாரியான க்ரெக் பார்க்கர். "இந்தியாவிலுள்ள நுகர்வோருக்கு, தங்கள் மொபைல் சாதனத்தில் தற்போதுள்ள மேஸேஜிங் பயன்பாட்டை அவர்கள் பயன்படுத்தினாலும்கூட, உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தைப் உபயோகித்து, தங்கள் அந்தரங்கத் தகவல்களை அணுகுவதும், பாதுகாத்துக் கொள்வதும் அத்தியாவசியமான ஒன்றாகும்."
RakEM-ஐ உலகின் மிக பாதுகாப்பான மெஸேஜிங் ஆப்-ஆக ஆக்குவது எது
சந்தையிலுள்ள மற்ற ஒவ்வொரு மெஸேஜிங் பயன்பாடும், பயனர்-மெஸேஜிங் தரவைப் பார்த்து மற்றும்/அல்லது சேமித்து வைக்கின்ற சேவையகங்களைச் சார்ந்திருப்பதால், இப்போட்டித் தளங்களில் பயனரின் அந்தரங்கம் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதற்கு ஒருபோதும் சாத்தியமில்லை. RakEM -ன் சர்வர்லெஸ் செக்யூர் கட்டமைப்பானது, பயனரின் மெஸேஜிங் தரவு என்க்ரிப்ட் செய்யப்படுவதையும், பயன்பாட்டிற்குள்ளேயே முழுமையாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதால், பயனர் மெஸேஜ்களை எந்த சர்வரும் ஒருபோதும் பார்ப்பதில்லை அல்லது அவற்றை சேமித்து வைப்பதில்லை.
கூடுதலாக, மென்பொருள் படல என்க்ரிப்ஷனை வழங்காத பெரும்பாலான மெஸேஜிங் பயன்பாடுகள், வெறும் அனுப்பும்போதுள்ள என்க்ரிப்ஷனை மட்டுமே வழங்கும் https என்க்ரிப்ஷன் நெறிமுறையை சார்நதிருப்பதால், பயனர் ஒரு நண்பருக்கு, குடும்ப உறுப்பினருக்கு அல்லது தொழில் சக பணியாளருக்கு அனுப்பும் உள்ளடக்கங்கள் (மெஸேஜ்கள்) என்க்ரிப்ட் செய்யப்படுவதில்லை. RakEM மட்டுமே காப்புரிமை-நிலுவையிலுள்ள, சுய - சிதைவு என்க்ரிப்ஷன் திறவுகோல் உருவாக்கம் மற்றும் மேலாண்மை மூலம், பரிமாற்ற அளவிலான உள்ளடக்க என்க்ரிப்ஷனை வழங்குகிறது. இது செய்திகளை உருவாக்கும் பயனர்களை, தொடக்கம் முதல் முடிவு வரை தங்கள் உள்ளடக்கம் முழுவதையும் "கட்டுப்படுத்த" உதவுவதால், உள்ளடக்கத்தை எவ்வித்த்திலும் மேலனுப்பவோ, பகிரவோ அல்லது பிரதியெடுக்கவோ இயலாது - மேலும் அதனை முழுமையாக நீக்கவோ அல்லது எடுத்துவிடவோ முடிவதால், செய்தியின் பதிவு அல்லது செய்திகளின் தொகுதி ஏதும், எங்குமே இராது.
உங்கள் குறுக்குத் தள மொபைல் செய்தியனுப்பும் தேவைகள் அனைத்திற்கும் ஆற்றலளிப்பதற்குப் போதுமான பாதுகாப்பை RakEM கொண்டுள்ளதா என்பதைக் கண்டறிய RakEM ஆப்-ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
ராக்கேட்டூ கம்யூனிகேஷன்ஸ் இன்க். பற்றி
ராக்கேட்டூ கம்யூனிகேஷன்ஸ் இன்க்., நுகர்வோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்காக, அனைத்து மொபைல் சாதனங்கள், டாப்லெட்டுகள், டெஸ்க்டாப்கள் மற்றும் லாப்டாப்களுக்கான முன்னணி, அதிநவீன, சாதனத்திலிருந்து சாதனத்திற்கு நேரடியான இணையதள நெறிமுறை பயன்பாடுகளை உருவாக்குவதன் மூலம், மிக உயர் பாதுகாப்பு கொண்ட, குறுக்குத் தள செய்தியனுப்புதல் மற்றும் தகவல் பரிமாற்றத்தைக் குதூகலம் நிறைந்ததாக ஆக்கி வருகிறது. ராக்கேட்டூ-வின் RakEM -ன் காப்புரிமை-நிலுவையிலுள்ள சர்வர்லெஸ் செக்யூர்™ என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் மற்றும் சிஸ்டம் கட்டமைப்பினால் ஆற்றலளிக்கப்படுகின்ற ராக்கேட்டூ-வின் RakEM மொபைல் மெஸேஜிங் தளமானது, உரை, குரல்ஒலி, வீடியோ, புகைப்படம் மற்றும் இதர தனிப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட செய்தியனுப்பும் ஊடகங்களுக்கு ஆதரவளிக்கிறது. நியூ யார்க், NY (யூஎஸ்ஏ)-ஐ தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், தற்போது உலகம் முழுவதும் 150-க்கும் அதிகமான நாடுகளில் பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு, நிறுவனத்தின் பின்வரும் வலைத்தளத்தை அணுகுங்கள் http://www.Raketu.com.
ராக்கேட்டூ என்பது, ராக்கேட்டூ கம்யூனிகேஷன்ஸ் இன்க்.-ன் பதிவுபெற்ற வர்த்தகக்குறியாகும்.
ஊடகத் தொடர்பு
மாயா குடாபாடி
[email protected]
91-7043739901
G8வே மீடியா குரூப்
Share this article