மும்பை, July 15, 2015 /PRNewswire/ --
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலம், ப்ரெட் லீ, காக்லியர் நிறுவனத்தின் முதல் உலகளாவிய கேட்புத்திறன் தூதராக இன்று அறிவிக்கப்பட்டார்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150715/10126758-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150715/10126758-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150715/10126758-b )
உலகின் வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக, பல கிரிக்கெட் சாதனைகளை முறியடித்துள்ள ப்ரெட்டின் புதிய இலக்கு 360 மில்லியன் மக்கள் - மற்றும் கேட்புத் திறன் இழப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 360 மில்லியன் என்பது, உலகம் முழுவதும் குறைபாட்டை ஏற்படும் கேட்புத்திறன் இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கணிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையாகும். இருந்தாலும், அது தங்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும், என்னென்ன சிகிச்சைகள் கிடைக்கின்றன என்பதைப் பற்றியும் பெரும்பாலானவர்கள் அறியாத நிலையில் உள்ளனர்.
தனிநபர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் மீது காது கேளாமை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிடத்தக்க மருத்துவ, சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, காக்லியர் தூதர் என்ற முறையில், ப்ரெட் 'கிரிக்கெட்டின் ஒலிகள்' இயக்கத்தைத் தொடங்கி வைப்பார். இவ்வாண்டின் இறுதியில் தொடங்கவிருக்கும் இந்த இயக்கம், மக்களிடம், 'கிரிக்கெட்டின் ஒலிகளை உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் மட்டும் கற்பனை செய்யுங்கள்' என்று கேட்டுக் கொள்கிறது.
தி ஆஷஸ் தொடங்குவதற்குமுன் லண்டனில் உள்ள லார்ட்ஸில் பேசிய ப்ரெட் கூறியதாவது, "காது கேளாமை என்பது உலக அளவிலான பொது ஆரோக்கியப் பிரச்னையாகும். ஒலியின்றி என்னால் கிரிக்கெட்டைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது - களத்தில் கூட்டத்தின் கோரிக்கைகளைக் கேளாமல், களத்தில் இல்லாதபோது குழுத் தோழர்கள் கூறுவதைக் கேளாமல், அல்லது வீட்டில் குடும்பத்தினர் பேசுவதைக் கேளாமல், என்னால் அந்நிலையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
"ஒரு காக்லியர் இம்பிளான்ட்டினால் (காது நத்தை எலும்பு உள்ளமைவு) அனைத்தையும் மாற்றவிட முடியும் அது நடந்துள்ளதை நான் பார்த்திருக்கிறேன். இந்த உள்ளமைவு ஒருவரை அமைதியிலிருந்து ஒலியின் உலகிற்கு அழைத்துச் செல்கிறது. அது ஓர் அற்புதமான, வாழ்க்கையையே மாற்றிவிடுகின்ற தருணமாகும்.
"மேலும், உலகெங்கிலும் மூன்று பில்லியன் ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் என்ற மொழியின் மூலம், நம்மால் உள்ளமைக்கக்கூடிய கேட்புத்திறன் தொழில்நுட்பங்களை மேலும் அதிக மக்களுக்கு வெளிப்படுத்த முடியும். மேலும் அதிகமானவர்களை அமைதியிலிருந்து ஒலிக்குச் செல்வதற்கு நம்மால் உதவ முடியும்."
விரைவிலேயே வெளியாக உள்ள அன்இன்டியன் என்ற திரைப்படத்தை தான் உருவாக்கிக் கொண்டிருக்கும்போது காக்லியர் உடனான இக்கூட்டு தொடங்கியது என்று ப்ரெட் கூறினார்.
"சிட்னியிலுள்ள காக்லியரின் தலைமையகத்தில் நாங்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, அதனைப் பெற்றவர்கள் சிலரைப் பற்றி நான் அறிய நேர்ந்தது மற்றும் அவர்களில் சிலர் முதல் முறையாக 'சுவிட்ச் ஆன்' செய்வதையும் கண்டேன், மேலும் அவர்கள் திடீரென்று ஒலியைக் கேட்கும்போது, வாழ்க்கையைக் கேட்கின்ற அவர்களுடைய பேரானந்தத்தைக் கண்டேன். அது என்னை மிகவும் பாதித்தது."
"வாழ்க்கையில் ஒலி என்பது எடுத்து வருகின்ற அனைத்து வாய்ப்புகளையும் நான் மிகவும் பாராட்டுகிறேன், அதனாலேயே காக்லியரின் முதல் உலகளாவிய கேட்புத் திறன் தூதராக இருப்பதை ஒரு பெருமையாகக் கருதுகிறேன்."
காக்லியரின் CEO, டாக்டர் க்ரிஸ் ராபர்ட்ஸ் கூறியதாவது, "விளாயட்டுத் துறையின் உண்மையான ஜாம்பவான்களில் ஒருவர் காக்லியர் உடன் பணிபுரிவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. விளையாட்டு என்பது ஓர் உலக மொழியாகும் மற்றும் கிரிக்கெட், உலகின் மிகவும் அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படுகின்ற மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
"இவ்வாண்டின் சூப்பர்பவுலை 114 மில்லியன் மக்கள் கண்டு ரசித்ததன் மூலம், அது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அதிகமாகப் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஆகியுள்ளது. சுமார் 1 பில்லியன் மக்கள் அடிலெய்டிலிருந்து ஒளிபரப்பப்பட்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கண்டு களித்தனர். அது உண்மையில் பிரமிப்பூட்டுகிறது.
"இதைப்போன்றதொரு சாதனையுடன், மற்றும் ப்ரெட் போன்ற ஒரு தூதருடன், ஒலியின் உலகுடன் இயன்றவரை அதிக மக்களை இணைப்பதே எங்கள் இலக்காகும். தாங்கள் விரும்பும் வாழ்வை வாழ ஏதுவாக, "இப்போது கேட்பதற்கு, எப்போதும் கேட்பதற்கு' மக்களுக்கு உதவுவதே எங்கள் உறுதிமொழியாகும்.
காக்லியர் லிமிடெட் நிறுவனம் பற்றி (ASX: COH)
காக்லியர் என்பது, உள்ளமைக்கக்கூடிய கேட்புத் திறனுக்கான தீர்வுகளில் உலக முன்னணி நிறுவனமாகும். உலக அளவில் இந்நிறுவனம் 2,700 பணியாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆண்டுதோறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 100 மிலியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலிய டாலர்களை முதலீடு செய்து வருகிறது. காக்லியருக்கான ஹியரிங் சிஸ்டம்கள், எலும்பு கன்டக்ஷன் மற்றும் அக்கோஸ்டிக் உள்ளமைவுகள் ஆகியவை இதன் தயாரிப்புகளில் அடங்கும்.
100-க்கும் அதிகமான நாடுகளிலுள்ள, அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த 400,000 மக்கள், காக்லியர் காரணமாக இப்போது கேட்புத்திறன் பெற்றுள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு அணுகவும், http://www.cochlear.com
ஊடகத் தொடர்புகள்
தெற்கு ஆசியா
விவேகானந்தன் சோமலிங்கம்
+91-22-6112 1111
[email protected]
நிறுவனம்
பியர்ஸ் ஷெர்விங்டன்
+61 (0)2 9428 5416
[email protected]
Share this article