மும்பை, July 17, 2015 /PRNewswire/ --
ஸ்மார்ட்லிங்க் நெட்வொர்க் சிஸ்டம்ஸின் கணினி வலையமைப்பு பிராண்டான டிஜிஸால், டிஜிஸால் வகை ஒயர்லெஸ் மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளுக்கான தேசிய பிராண்ட் தூதராக முன்னணி பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா தோன்றுவார் என்று அறிவித்துள்ளது. சோனாக்ஷி நியமிப்பது, நுகர்வோர் பிரிவில் தனது நிலையை மேம்படுத்திக் கொள்வதற்காக டிஜிஸால் திட்டமிடும் சமயத்தில் வந்துள்ளது மற்றும் இக்கூட்டானது, இந்தியாவில் இப்பிராண்டின் காணத்தக்க நிலையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150716/10126888)
டிஜிஸாலின் COO, மிஸ். ஆரத்தி நாயக் கூறியதாவது, "டிஜிஸால் மட்டுமின்றி எங்கள் இலக்கு நுகர்வோரும் இளமையானவர்கள். இளம் இந்திய ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுகின்றவராக சோனாக்ஷி இருப்பதால், அவரை ஒரு நல்ல தேர்வாக நாங்கள் நம்புகிறோம். நவநாகரீகமான, குதூகலமான, இணையதள அறிவுடன்கூடிய அவருடைய கவர்ந்திழுக்கும் தோற்றம், இப்பிராண்டுடன் இலகுவாக அவரைப் பொருந்தச் செய்கிறது."
தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியபடி சோனாக்ஷி சின்ஹா கூறினார், "டிஜிட்டல் இந்தியாவை நிஜமாக்குவதில் ஒரு முக்கிய பங்கினை ஆற்றிவரும் டிஜிஸால் போன்ற ஒரு பிராண்டின் பிரதிநிதியாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்போது டிஜிஸாலுடன் நான் இணைந்திருப்பதால், அவர்களுடைய முயற்சியின் ஓர் அங்கமாக இருப்பதை எதிர்நோக்குகிறேன்."
'இந்தியாவில் தயார் செய்யுங்கள்' என்ற அரசின் அழைப்பிற்கு பொறுப்புறுதி ஏற்று, டிஜிஸால் சமீபத்தில், கோவாவிலுள்ள தனது உற்பத்தித் தொழிற்சாலையில், அடுத்தத் தலைமுறை DG-HR3400 ஒயர்லெஸ் பிராட்பேண்ட் ஹோம் ரூட்டர் மற்றும் DG-BG4300Nu ஒயர்லெஸ் பிராட்பேண்ட் ADSL ரூட்டர் ஆகிய இரண்டு ஒயர்லெஸ் பிராட்பேண்ட் ரூட்டர்களை அறிமுகப்படுத்தியது.
டிஜிஸால், தனது ஐடி வலையமைப்பு தொகுதியில், 150-க்கும் அதிகமான வகை தயாரிப்புகளைக் கொண்டுள்ளது, இவற்றில், ரூட்டர்கள், 3G பொருட்கள் மற்றும் சுவிட்ச்கள் ஆகியவையும் அடங்கும். டிஜிஸால் தயாரிப்புகள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருப்பதுடன், ஸ்மார்ட்லிங்கின் சொந்த உற்பத்தித் தொழிற்சாலை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் ஆதரவுடன், இந்தியா முழுவதற்குமான விநியோக வலையமைப்பு மற்றும் வலிமை பொருந்திய உள் சேவைக் குழுவின் ஆதரவுடன்கூடிய அழைப்பு அடிப்படையிலான தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
சோனாக்ஷி சின்ஹா புகழ்பெற்ற இந்திய பாலிவுட் நடிகையாவார். இந்தி திரைப்படத் தொழில்துறையில் அவர் தனது பாலிவுட் சாதனையை 2010-ம் ஆண்டின் மெகா ஹிட்டான 'தபாங்' என்ற திரைப்படத்தின் மூலம் நிகழ்த்தினார், இப்படம் அந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாகப் புகழ் பெற்றது. 'சிறந்த நடிகைக்கான' ஃபிலிம்ஃபேர் விருதை அவர் வென்றார். பின்னர், 'ரவுடி ராத்தோர்', 'சன் ஆஃப் சர்தார்', 'தபாங் 2' ஆகியவை உள்ளிட்ட பாலிவுட்டின் சில மிகப்பெரிய வெற்றிப் படங்களிலும், மேலும் பல திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
ஸ்மார்ட்லிங்க் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் லிமிடெட் (SNSL) பற்றி:
1993-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்மார்ட்லிங்க் நெட்வொர்க்கிங் சிஸ்டம்ஸ் லிமிடெட். (BSE: 532419 | NSE: SMARTLINK) வலையமைப்பு உள்கட்டமைப்புத் துறையில் ஒரு முன்னோடி நிறுவனமாகும். நேர்மை, ஒழுக்கம் மற்றும் வாய்மை ஆகியவை இணைந்து இந்நிறுவனத்தின் அடிப்படை நெறிகளாக அமைந்துள்ளதால், இந்தியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் மதிக்கப்படுகின்ற ஐடி நிறுவனமாக இது ஆகியுள்ளது. இந்தியாவிற்கு ஐடி வலையமைப்புத் தயாரிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் எடுத்து வந்த முன்னோடியாக ஸ்மார்ட்லிங்க் இருப்பதுடன், ஐடி வலையமைப்புத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாகவும் இது பெருமை பெற்றுள்ளது. தயாரிப்பு வடிவமைப்பு, உருவாக்கம், உற்பத்தி, சந்தைப்படுத்துதல் விற்பனை மற்றும் சேவை ஆகியவற்றிலும் இருபது ஆண்டுகள் அனுபவமுள்ள பெருமையை ஸ்மார்ட்லிங்க் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வழங்குபவை, நிறுவங்கள் முதல் SME/SMB வரை மற்றும் SOHO முதல் வீட்டுப் பயனர்கள் வரை மட்டுமின்றி, அரசு, BFSI, கல்வி, உற்பத்தி, விருந்தோம்பல், உடல்நலப் பராமரிப்பு, சில்லறை வர்த்தகம் மற்றும் பல வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கும் கச்சிதமாகப் பொருந்துபவையாக அமைந்துள்ளன. ஸ்மார்ட்லிங்க்கின் பிராண்ட் வகைகளில் டிஜிஸால் மற்றும் டிஜிகேர் ஆகியவையும் அடங்கும்.
மேலும் தகவல்களுக்கு, அணுகவும்: http://www.smartlink.co.in
ஊடகத் தொடர்பு:
ராம் கனோஜியா
[email protected]
+91-9867322755
மேலாளர் - கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்
ஸ்மார்ட்லிங்க் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் லிமிடெட்
Share this article