புது டெல்லி, July 20, 2015 /PRNewswire/ --
அருள்மிகு அனுமான் பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி. ஈடிணையற்ற பலம் பொருந்திய இத்தெய்வத்தின் திருவுருவானது, பஜ்ரங் பலி அனுமான் கதாயுத பென்டன்ட் வடிவில் இப்போது வந்துவிட்டது. Orosilber.com-ல் பிரத்யேகமாகக் கிடைக்கும் இந்த டாலர், எல்லா நேரங்களிலும் பஜ்ரங் பலியின் அருகிலேயே இருக்க விரும்புகின்ற அவருடைய பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150717/10127004 )
கதாயுதம் என்பது, சுதந்திரம், அதிகாரத்தை அமைக்கும் திறன், எதிர்ப்பை முறியடிக்கும் ஆற்றல் மற்றும் வெற்றி மலர்வதைக் குறிக்கிறது. இந்து உடல்சார் கலாச்சாரம், மற்றும் வட இந்தியாவிலுள்ள அக்கரா போன்ற மல்யுத்தப் பயிற்சித் தளங்களில் இது முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது அனுமானின் சின்னமாகப் பெரும்பாலும் நினைவுகூரப்படுகிறது. கதாயுதம் மிகவும் பக்திக்குரியதாகக் கருதப்படுவது மட்டுமின்றி, அது வணங்கப்பட்டாலும், இத்தெய்வீக ஆயுதத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இன்னமும் பலருக்குப் புரியாத புதிராகவே உள்ளது.
புராணங்களில், கௌமோதகி என்ற பெயருடைய கதாயுதத்தை மகாவிஷ்ணு தனது கரங்களில் ஒன்றில் தரித்திருந்தது காணப்படுகிறது. இருப்பினும், தீவிரமான பக்தர்களின் இதயத்தில் கதையானது உடனடியாக வாயு குமாரனாகிய, வாயுபுத்ரன் - அனுமான் பஜ்ரங் பலியின் திருவுருவத்தையே தோன்றச் செய்கிறது. சந்தேகத்திற்கிடமில்லாத வீரத்தின் புயல் வேகத்தை தனது கண்களில் தேக்கியுள்ள பஜ்ரங் பலி, தீயவை மற்றும் தவறானவற்றிலிருந்து தனது பக்தர்களைப் பாதுகாக்கும் உறுதியைப் பூண்டுள்ளார். எனவே, அது சங்கடமோசனம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பஜ்ரங் பலி அனுமான் கதாயுத பென்டன்ட் -ஐ ஓரோஸில்பர் அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், பக்தர்களால், அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தாலும், சங்கடமோசனத்திற்கு பிரார்த்தனை செய்து தங்களை இணைத்துக் கொண்ட உணர்வைப் பெற முடியும். வெகு நேர்த்தியாக உயர்தர ஸ்டெர்லிங் வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள இப்பொருளானது, அதே பாதுகாப்பான தெய்வீகச் சூழலை அளிப்பதுடன், தெய்வத்தின் ஆசீர்வாதங்களையும் கொண்டுள்ளது. மிகவும் நுட்பமாக, கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கதையானது, எம்பாஸ் செய்த வட்டமான மேற்புறத்தைக் கொண்டு கதாயுதத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்துவதுடன், வளைந்த கோடுகள், நீண்ட கைப்பிடி மற்றும் செதுக்கிய குறுக்குக் கோடுகளுடன், இலகுவான வடிவத்துடன் தோற்றமளிக்கிறது. இந்த பஜ்ரங் பலி கதாயுத டாலரின் மிகச் சிறந்த அம்சமாக இருப்பது, அதன் அடிப்புறத்திலிருந்து திறக்கின்ற அமைப்பாகும். இக்குழிவான பகுதியில் சிந்தூரம் நிரப்பப்பட வேண்டும். எனவே, பயணம் செய்கின்ற மற்றும் கோவிலுக்குச் செல்ல முடியாத பக்தர்கள், தங்கள் நெற்றியில் திலகமிட்டுக் கொள்வதற்கு இதனைப் பயன்படுத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் புராதன ஃபினிஷ், எளிய மற்றும் நேர்த்தியான வடிவம், இதனை எவ்விதமான ஆடையலங்காரத்துடனும் கச்சிதமாகப் பொருந்தும் ஓர் ஆபரணமாக ஆக்குகிறது.
இந்த டாலரின் பல வடிவங்களை விரைவிலேயே அறிமுகப்படுத்த ஓரோஸில்பர் திட்டமிட்டுள்ளது மற்றும் இது வெள்ளி, தங்கம் மற்றும் ரோஸ் பிளேட்டிங்குடன், ஜிர்கோனியா பதிக்கப்பட்டும், பதிக்கப்படாமலும் கிடைக்கும். இந்த டாலருடன், ஜெய் பஜ்ரங் பலி என்று செதுக்கப்பட்ட மணிக்கட்டு பிரேஸ்லெட் ஒன்றும் ஒரு சிறிய அனுமான் சாலிஸாவும் விரைவிலேயே ஓர் அன்பளிப்புப் பெட்டியில், Orosilber.com -ல் கிடைக்கும். இது பஜ்ரங் பலி, அருள்மிகு அனுமானின் தீவிர பக்தர்களுக்கான ஒரு கச்சிதமான பரிசுப் பொருளாகும்!
ஓரோஸில்பர் பற்றி
2001-ல் நிறுவப்பட்ட ஓரோஸில்பர், உயர்தர நேர்த்தியான நவநாகரீக நகைகள் மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ற எழுத்து முத்திரைகள் பொறித்த துணைப்பொருட்களின் உற்பத்தியாளரும் சில்லறை விற்பனையாளருமாகும். இவர்கள் வழங்கும் ஏராளமான வகைப் பொருட்களில், ஆண்களுக்கான துணைப் பொருட்கள், விருப்பத்திற்கேற்ற தலையாட்டி பொம்மைகள், தனித்துவமான ராக்கிகள் போன்றவை அடங்கும்.
ஊடகத் தொடர்பு
அனில் கோஸ்வாமி
[email protected]
+91-8130363666
ஓரோஸில்பர்
Share this article