மும்பை, August 3, 2015 /PRNewswire/ --
தலைசிறந்த ஒயர்லெஸ் பிராண்டாகக் கருதப்படும் D-லிங்க் (இந்தியா) லிமிடெட், ஸ்மார்ட் இல்லம் பிரிவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தத் தயாராக உள்ளது. தனது சமீபத்திய தயாரிப்பு வகைகளான இணைக்கப்பட்ட இல்லத் தீர்வு (கனெக்டட் ஹோம் சொல்யூஷன்) மூலம், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) அடிப்படையிலான ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தத்தை D-லிங்க் அறிமுகப்படுத்த உள்ளது. D-லிங்க் வழங்கும் இணைக்கப்பட்ட இல்லத் தீர்வில் முக்கியமாக, வை-ஃபி ஸ்மார்ட் ப்ளக், மோஷன் சென்ஸர், ஆடியோ எக்ஸ்டென்டர் மற்றும் அவற்றை இணைப்பதற்கும், அவை ஒன்றுடன் ஒன்று பேசுவதற்கும் உதவும் பயன்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150731/10127933 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150218/10116625 )
D-லிங்க் இணைக்கப்பட்ட இல்லத் தீர்வு மைடிலிங்க்கின் வசதி மற்றும் நெகிழ்தன்மையை ஒவ்வொரு குடும்பத்தின் மின்னணுசார் சாதனங்களுக்கு எடுத்துவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கச்சிதமான மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான IoT தொழில்நுட்ப அடிப்படையிலான வை-ஃபி சாதனங்கள், எங்கிருந்தும் தங்கள் வீட்டு மின்னணு சாதனங்களைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பயனர்களுக்கு உதவுகின்றன. iOS® மற்றும் ஆன்ட்ராய்டு™ ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லது டாப்லெட்களில் இலவச மைடிலிங்க்™ பயன்பாட்டை உபயோகிப்பதன் மூலம், பயனர்களால் பவர் ஆன்/ஆஃப் திட்டங்களை அமைக்க முடியும், தொலைதூரத்திலிருந்து சாதனங்களை ஆன்/ஆஃப் செய்ய முடியும், இயக்கம் கண்டறியப்படும்போது ஒரு விழிப்பூட்டலை அனுப்ப முடியும், வெளியே இருக்கும்போதும் வீட்டில் ஆற்றல பயன்பாட்டைக் கண்காணிக்க முடியும் மற்றும் பலவற்றையும் செய்ய முடியும். மொத்தத்தில், D-லிங்க் இணைக்கப்பட்ட இல்லத் தயாரிப்புகள், இல்லத்தை பேசச் செய்வதற்கு உதவும் வகையில் இணைந்து செயல்படுகின்றன.
"இயந்திரத்துடன் இயந்திரம் ஒத்திசைவுடன் செயல்படுவது நிஜத்தில் நிகழ்வதுடன் தொழில்நுட்பக் காட்சியில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று நாம் வாழ்கின்ற மற்றும் பணிபுரிகின்ற முறையை மாற்றக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளதால், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) நம்முடைய எதிர்காலத்தை மறுவிளக்கம் செய்யத் தயார்நிலையில் உள்ளது," என்றார் D-லிங்க் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் செயலதிகார இயக்குனர் மற்றும் முக்கிய செயலாதிகாரியான திரு.துஷார் சிகட்.
அவர் மேலும் கூறியதாவது, "IoT அடிப்படையிலான எங்களுடைய இணைக்கப்பட்ட இல்லத் தயாரிப்புகளைத் திறந்து வைப்பது, D-லிங்க்கில் உள்ள எங்களுக்கு ஓர் உற்சாகமான காலமாகும். மேலும் அதிக இணைப்பில் இருக்க வேண்டுமென்று, வீடு, குடியிருப்பைச் சுற்றி பொருட்களை தானியங்கு தன்மை கொண்டவையாக மாற்ற அல்லது உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்குவோர் அனைவருக்கும், D-லிங்க் இணைக்கப்பட்ட இல்லத் தயாரிப்புகளே சிறந்த தீர்வாகும்"
வை-ஃபி ஸ்மார்ட் ப்ளக்: DSP-W215 என்று மிகச் சாதாரணமாக அறியப்படும் வை-ஃபி ஸ்மார்ட் ப்ளக், சாதாரண மின்சார துளைக்குள் செருகிக் கொள்கிறது, அதில் ஒருவரால் ஒரு சாதனத்தை (இஸ்திரி பெட்டி, வாஷிங் மெஷிங், ஏர் கன்டிஷனர் போன்றவை) இணைத்து, ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டாப்லெட்களுக்குக் கிடைக்கும் மைடிலிங்க் இலவச பயன்பாட்டை உபயோகித்து, அதனைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். இதில், சாதனங்களை ஆன்/ஆஃப் செய்தல், இயக்குவதற்கான நாட்கள் மற்றும் நேரங்களைத் திட்டமிடல், மின் பயன்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் ஒரு சாதனம் அளவுக்கதிகமாக சூடாவதை உள்ளமைந்த வெப்பப் பாதுகாப்பு மூலம் பாதுகாப்பதையும்கூட உள்ளடக்கிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
மோஷன் சென்ஸர்: DCH-S150 அல்லது வை-ஃபி மோஷன் சென்ஸர் இல்லத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன் கதவு போன்ற நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு அருகில் D-லிங்க் வை-ஃபி மோஷன் சென்ஸரை வைத்தால் போதும், அதன்பின், ஏதேனும் நடமாட்டம் கண்டறியப்படும்போது, மைடிலிங்க் இலவசப் பயன்பாட்டின் மூலம், ஃபோனில் புஷ் அல்லது உரை அறிவிப்புகளைப் பெறலாம். மைடிலிங்க் வை-ஃபி கேமராவுடன் இது பிரமாதமாக வேலை செய்கிறது, ஏனென்றால் ஒருவரால் வீட்டில் என்ன நடமாடுகிறது என்பதை உடனடியாகப் பார்க்க முடியும். மேலும், வை-ஃபி ஸ்மார்ட் ப்ளக்குடன் சேர்க்கப்படும்போது வை-ஃபி மோஷன் சென்ஸரால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும்.
ஆடியோ எக்ஸ்டென்டர்: The வை-ஃபி ஆடியோ எக்ஸ்டென்டர் (DCH-M225) என்பது, சுற்றுப்புறத்தில் ஏதேனும் ஸ்பீக்கர் அல்லது ஒலி அமைப்புடன் வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு ஸ்மார்ட்ஃபோன் அல்லது டாப்லெட்டிலிருந்தும் இசை ஓட்டத்திற்கு உதவும் ஒரு போர்ட்டபிள் சாதனமாகும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் மூலம் ஸ்பீக்கர் அல்லது வீட்டு வீடியோவுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் வை-ஃபி ஆடியோ எக்ஸ்டென்டர் வேலை செய்கிறது. அதன்பின், அதே வை-ஃபி வலையமைப்பில் இணைத்துக் கொள்வதன் மூலம் அதனால் ஏர்பிளே அல்லது DLNA-இயக்கப்பட்ட மொபைல் சாதனத்திலிருந்து இசையைப் பொழியச் செய்ய முடியும்.
உங்கள் வை-ஃபி சிக்னலின் அளவை விரிவாக்குகின்ற ஓர் இரண்டாம்நிலை செயல்பாட்டையும் அது கொண்டுள்ளது. 300எம்பிபிஎஸ் வரையிலான வெளிப்பாட்டுடன், ஒயர்லெஸ்-N தொழில்நுட்பத்திற்கும் அது ஆதரவளிக்கிறது.
D-லிங்க் இணைக்கப்பட்ட வீட்டுத் தயாரிப்புகளை நிறுவுவதற்கு மிகவும் சுலபமானவை. இயந்திரமயமான ஒரு வீட்டை உருவாக்குவதிற்கான முழுமையான தீர்வினை வழங்க அவை ஒன்று சேர்ந்து இயங்குகின்றன, இதன் மூலம் அடுத்த அறையில் அல்லது உலகின் மற்றொரு கோடியில் என்ன நடக்கிறது என்பதுடன் ஒருவர் எப்போதும் இணைப்பில் இருக்கிறார்.
கிடைக்கும்நிலை, விலை விவரங்கள் மற்றும் வாரண்டி:
D-லிங்க்கின் IoT அடிப்படையிலான இணைக்கப்பட்ட இல்லத் தீர்வுகள் இந்தியா முழுவதும் அதன் தேசிய விநியோகிப்பாளர்கள், சேனல் பார்ட்னர்கள், மறுவிற்பனையாளர்கள் மற்றும் பெரிய அளவிலான சில்லறை விற்பனையாளர்கள் அடங்கிய வலையமைப்பின் மூலம் கிடைக்கிறது.
கீழ்க்கண்ட பொருட்கள் அனைத்திற்கும் 1 ஆண்டு வாரண்டி வழங்கப்படுவதுடன், அவற்றின் உத்தேசமான விலை விவரங்கள் வருமாறு:-
வை-ஃபி ஸ்மார்ட் ப்ளக் (DSP-W215) ரூ. 3749/- க்கு கிடைக்கிறது
வை-ஃபி மோஷன் சென்ஸர் (DCH-S150) ரூ. 3749/-க்கு கிடைக்கிறது
வை-ஃபி ஆடியோ எக்ஸ்டென்டர் (DCH-M225) ரூ. 2899/- க்கு கிடைக்கிறது
D-லிங்க் (இந்தியா) லிமிடெட் பற்றி:
வீடு, சிறு தொழில், நடுத்தரம் முதல் மிகப் பெரிய அளவிலான நிறுவனச் சூழல்கள் வரை இணைப்புகள் மற்றும் சேவை வழங்கும் உலக முன்னணி நிறுவனமாக D-லிங்க் உள்ளது. விருது வெல்லும் வடிவமைப்பாளர், மேம்பாட்டாளர் மற்றும் உற்பத்தியாளராக, D-லிங்க் நிறுவனம் சுவிட்ச், ஒயர்லெஸ், பிராட்பேண்ட், சேமிப்பகம், IP கண்காணிப்பு, மற்றும் கிளவுட் அடிப்படையிலான வலையமைப்பு மேலாண்மை ஆகியவற்றின் திறன்களை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த வலையமைப்பு தீர்வுகளை செயல்படுத்துகிறது மற்றும் அதற்கு உதவுகிறது.
D-லிங்க் (இந்தியா) லிமிடெட், D-லிங்க் கார்ப்பரேஷனின் ஓர் அங்கம் மட்டுமின்றி, இந்தியாவில் மிகப்பெரிய வலையமைப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம், இந்தியா மற்றும் SAARC மண்டலத்தில் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை சந்தைப்படுத்துகின்ற மற்றும் விநியோக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. D-லிங்க் (இந்தியா) லிமிடெடின் பங்குகள், NSE மற்றும் BSE பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்று, D-லிங்க் (இந்தியா) லிமிடெட், இந்தியாவில் ஏராளமான தயாரிப்பு வகைகள் மற்றும் உயர்தர சேவைகளைக் கொண்ட, நாடெங்கிலும் பரவியுள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உள்ளது. உயர் தரமுள்ள, ஆற்றல்மிக்க மற்றும் நம்பிக்கைக்குரிய நெட்வொர்க்கிங் தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கும் உறுதிமிக்க பொறுப்புறுதியை ஏற்றுள்ளது. இன்று D-லிங்க் இந்தியாவிற்கு 11 நகரங்களில் அதி நவீன D-லிங்க் சேவை மையங்களுடன்கூடிய (DSC) 17 கிளை அலுவலகங்கள் இருப்பதுடன், இந்தியா முழுவதும் பரவியுள்ள 38 D-லிங்க் சேவை பார்ட்னர்களின் (DSP) ஆதரவையும் அது பெற்றுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்காக கட்டணமில்லா உதவி சேவை ஆதரவையும் D-லிங்க் (இந்தியா) லிமிடெட் கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு அணுகவும், http://www.dlink.co.in, அல்லது ஃபேஸ்புக்கில் http://www.facebook.com/dlinkindia மூலம் மற்றும் டுவிட்டரில் http://www.twitter.com/dlink_india மூலம் இணைத்துக் கொள்ளவும்
ஊடகத் தொடர்பு:
திவ்யா ஷெட்டி,
[email protected],
+91-9004672817,
மூத்த மேலாளர் PR & மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ்,
D-லிங்க் (இந்தியா) லிமிடெட்.
Share this article