மும்பை, September 4, 2015 /PRNewswire/ --
இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்து லட்சம் இளைஞர்கள், வெறும் கேமராக்களை மட்டும் வைத்துக்கொண்டு, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் தங்கள் முயற்சியில் தேசத்தையே கலக்கி இருக்கிறார்கள். யெஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய ஒரு தனித்துவமான திரைப்படம் தயாரிக்கும் சவாலான யெஸ்! ஐ ஆம் த சேஞ்ச் (ஒய்ஐஏசி), ஒவ்வொரு இந்தியனும் சமூக பிரச்சனைகளை தனிமைப்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை 3 நிமிட திரைப்படங்களில் பகிர்ந்துகொள்ள ஆற்றல் அளித்துள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150902/10129483 )
ஒய்ஐஏசி 101-மணிநேர சமூக திரைப்பட தயாரிப்பு சவாலில் பங்கேற்றவர்கள் குழந்தை உரிமைகள், மகளிருக்கு அதிகாரமளித்தல், முதியோர் பராமரிப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட முக்கிய சமூக பிரச்சனைகளை குறித்து திரைப்படங்களை தயாரித்தனர். 101 மணி நேர சவாலானது இளைஞர்கள் சமூக பிரச்சனைகளை அடிப்படையோடு தொடர்புபடுத்துவதையும் தினசரி கதாநாயகர்களோடு கலந்துரையாடி நேர்மறையான சமூக நடவடிக்கைக்கு வழிநடத்தப்பட்டதையும் கண்டது.
ஒய்ஐஏசி 2015 இன் தலைசிறந்த திரைப்படங்கள் இந்திய ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள மொத்த பரிசுகளை வெல்வார்கள் மற்றும் தேசிய மற்றும் அவை சர்வதேச தளங்களில் காட்சிப்படுத்தப்படும். லாபத்திற்காக நடத்தப்படாத அமைப்புகளுக்கு உரையாடலை தொடங்குவதற்கும் சமூக மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு இந்த குறும்படங்கள் மதிப்புமிக்க தகவல்தொடர்பு வளங்களுக்கான திறந்தநிலை களஞ்சியத்தை உருவாக்குகின்றன. கூடுதலாக அனைத்து பங்கேற்பாளர்களும் சமூக காரணங்களுக்காக எடுக்கப்படும் குறும்படங்களுக்கு மானியத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள்.
ஊடகம், கார்ப்பரேட், கல்வி மற்றும் வளர்ச்சி துறைகளில் இருந்து சிறந்த நபர்களை கொண்ட ஒரு உயர்தரமான நடுவர்குழு ஒய்ஐஏசி 2015இன் தலைசிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும்; செல்வி.அணு அகா (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் தலைவர்,தெர்மேக்ஸ்), திரு.ஷிகேரு ஆவோயாகி (இயக்குநர், யுனெஸ்கோ), திரு. விகாஸ் பாஹ்ல் (இயக்குநர், குயின்), செல்வி. ப்ரூனி புர்ரெஸ் (சன்டேன் இன்ஸ்டிடியூட், யுஎஸ்ஏ), திரு. பால் பாவெல்ஸ் (இயக்குநர், யூரோபியன் டாக்குமென்ட்ரி நெட்வொர்க், டென்மார்க்),
திரு. ஜேக்கோ சிலியர்ஸ் (தேசிய இயக்குநர், யூஎன்டிபி-இந்தியா), திரு. பிரசூன் ஜோசி (விளம்பர குரு, கவிஞர் & பாடலாசிரியர்), செல்வி. குனீத் மோங்கா (தயாரிப்பாளர், த லன்ச் பாக்ஸ் அன்ட் வாசேய்பூர்), திரு. பிரிதிஷ் நான்டி (மூத்த பத்திரிகையாளர், கவிஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்), திரு. பரத் பட்டேல் (உறுப்பினர், செயற்குழு, உலக விளம்பரதாரர்களின் கூட்டமைப்பு, ப்ருசெல்ஸ்) உள்ளிட்ட பலர்.
ஒவ்வொரு நாளும் கடந்துசெல்லும்போது, ஐபிஎம், இன்ஃபோசிஸ், கூகுள், அசோக் லேலண்ட், மஹிந்திரா & மஹிந்திரா, மேக் எ விஷ் ஃபவுன்டேஷன், ரொட்டரி, ரொட்ட்டராக்ட், மேஜிக் பஸ், எம்ஐசிஏ,ஐஐஎம்-கள், ஐஐடி-கள் உள்ளிட்ட பல்வெறு இந்திய கார்ப்பரேட், சேவை மற்றும் கல்வி அமைப்புகளில் இருந்து பல குடிமக்கள் இந்த குறிப்பிடத்தக்க சமூக இயக்கத்தில் இணைந்து வருகிறார்கள்.
திரைப்பட தயாரிப்பு சவால் - திறந்தநிலை பிரிவிற்காக (2-6 அக்டோபர், 2015) ஒய்ஐஏசி தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள் http://www.yesfoundation.in பதிவுசெய்வதற்கான கடைசி தேதி 29 செப்டம்பர்.
மேலும் தெரிந்துகொள்ள: ஒய்டி லோகோ: http://www.youtube.com/YesFoundationIndia எஃப்பி லோகோ: http://facebook.com/YesFoundationIndia டிவிட்டர் லோகோ: http://twitter.com/YesFoundationIn
ஊடக தொடர்பு:
ஜோதி கோஸ்வாமி
[email protected]
+91-9702488388
ஆட்ஃபேக்டர்ஸ் பிஆர் பிரைவேட் லிமிடெட்
Share this article