குர்காவன், இந்தியா, September 4, 2015 /PRNewswire/ --
இப்புதிய தலைமுறை வலைவாசலானது, பணிநியமனத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் அதன் இணையற்ற புத்தமைவுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
வேலையின் எதிர்காலம் அதிவேகமாக மாறிக் கொண்டிருப்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதற்கு நிகராக, இந்தியா போன்ற மக்களியலைச் சார்ந்துள்ள பணிநியமனத் தொழிலில் காணப்படும் வளர்ச்சிக்கான வாய்ப்பும் தெளிவாகவே உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும், 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வேலைசெய்வோர் வயதுப் பிரிவில் சேர்கின்றனர். EY, UBS, ட்ராக்xn மற்றும் இதர அமைப்புகள் நடத்திய ஆய்வுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி, பணிநியமனத்தின் அனைத்து அம்சங்களின் ஒன்றுசேர்க்கப்பட்ட மொத்த வருமானம் 2020-ம் ஆண்டுக்குள் US$ 4 பில்லியனுக்கும், 2030-ம் ஆண்டுக்குள் US$ 12 பில்லியனுக்கு அதிகரிக்கின்ற வாய்ப்புள்ளது என்பது ஒரு சிறிய ஆச்சரியமாகும். இதற்குள்ளாக, திறன் மதிப்பீடு, சோர்ஸிங் மற்றும் முன்சோதனை போன்ற பிரிவுகளும், அதைப்போலவே தொடர்புடைய தொழில்களுக்குப் பணியமர்த்துவதற்கான வரிவிளம்பர அல்லது விளம்பர வருமானமும் அதிவேக வளர்ச்சி கண்டு வருகின்றன.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150903/10129555)
பல புதிய தலைமுறை நிறுவனங்கள் இப்பிரிவை இலக்கு வைக்கும் நம்பிக்கையைக் கொண்டுள்ளன. மேராஜாப் அவற்றில் ஒன்றாகும் மற்றும் இது, குறைந்த ஊதியம், நுழைவுநிலை மற்றும் முன்னணி பதவிகளில் பணியாளர்களை அமர்த்தும் பணியமர்த்துவோருக்கு அதிகத் திறன் வாய்ந்த பணிநியமன விளைவுகளை அளிப்பதற்காக, விண்ணப்பதாரர்களை முன்சோதனை செய்வதன் மீது கவனம் செலுத்துகிறது. பீப்பிள் மேட்டர்ஸ் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த டெக்HR'15 ஸ்பாட்லைட் விருதுகள், மனிதவளம் எப்படி தொழில்நுட்பத்தைத் தழுவி வருகிறது என்பதை எடுத்துக் காட்டியது. முன்சோதனை செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை வழங்கும் மேராஜாப்ன் வலைவாசல், "தொழில்நுட்பத்தில் எதிர்காலத்தன்மை"-க்காகத் தகுதிபெற்ற மூன்று இறுதித் தேர்வாளர்களில் ஒன்றாகும்.
மனிதவள தொழில்நுட்பத்தில் இணையற்ற புதுமைகளை உருவாக்கி, 'மொபைல்' ஆதிக்கம் பெற்றுள்ள மற்றும் டிஜிட்டல் உலகின் சவால்களுக்காக மனிதவளம் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளும் முறையை மாற்றுவதில், முன்னணியில் உள்ள புதிய தலைமுறை நிறுவனங்களுக்கு உதவுவதை ஸ்பாட்லைட் விருதுகள் 2015 நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்விருதுக்காக 90-க்கும் அதிகமான நிறுவனங்கள் போட்டியிட்டன. சஞ்சீவ் பிரசாத், CIO, ஜென்பாக்ட்; மனிந்தர் குலாட்டி, தலைவர், லைட்ஸ்பீட் வென்சர்ஸ்; மனீஷ் சபர்வால், இணை-நிறுவனர், டீம்லீஸ்; மற்றும் இதர புகழ்பெற்ற தொழில்துறை தலைவர்கள் அடங்கிய நடுவர் குழு ஒன்று, நிறுவனங்களை இறுதித் தேர்வு செய்தது.
மொபைல் உலகிற்கான வேலைவாய்ப்பு வலைவாசல் (போர்ட்டல்)
மேராஜாபின் நிறுவனர்களான - பல்லவ் சின்ஹா மற்றும் ராமன் தியாகராஜன் - வேலைவாய்ப்பு வலைவாசல்கள் தங்கள் சொந்த வெற்றியாலேயே அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதை உணர்ந்தனர். பணிகளுக்கான விண்ணப்பங்கள் (குறிப்பாக நுழைவு நிலைக்கானவை) மிக அதிக அளவில் இருப்பதால், அது உண்மையில் பணிநியமன செயல்முறையை பாதிப்புக்குள்ளாக்குகிறது. நுகர்வோர் நிதி சேவைகள் தொழில்துறையைப் பின்பற்றி, அவர்கள் வேலை தேடுவோருக்கான ஒரு "கிரெடிட் பீரோ"வை உருவாக்க முனைந்தனர், இங்கு சுயவிவரங்கள் எப்போதும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். தொழில்நுட்பத்தால் ஆற்றலளிக்கப்பட்ட உயர்த்தப்படக்கூடிய முன்சோதனை செயல்முறையின் மூலம், பணிக்கு மிகவும் பொருந்தும் நபர்களின் சுயவிவரங்களை வழங்குவதாக MeraJob.in உறுதியளிக்கிறது. எனவே, பணியமர்த்துவோர், பொருத்தமாக உள்ள ஸ்மார்ட்ப்ரொஃபைல்களுக்கு மட்டுமே பணம் செலுத்துகிறார்கள். வேறு விதத்தில் சொல்வதென்றால், 100 சுயவிவரங்களில் 30 மட்டுமே "பொருந்துவதாகவும்" "ஆர்வமுள்ளதாகவும்" இருக்கின்ற, 10 நேர்முகங்கள் மற்றும் 3-4 பணிக்கு சேர்தல் நடைபெறும் வழக்கமான வேலைவாய்ப்பு போர்ட்டலுடன் ஒப்பிடும்போது, மேராஜாப் உடன், பணியமர்த்துவோர் பொருத்தமாக உள்ள 30-35 நபர்களுக்கு மட்டுமே பணம் செலுத்திவிட்டு, இறுதியில் 7-8 வரை பணியமர்த்துகின்றனர்.
இணையவழி மற்றும் தனியுரிமை சார்ந்த CRM அமைப்பில் செயல்படும் பணிநியமன மையத்தின் அடிப்படையிலான செயல்முறைகள் ஆகிய இரண்டின் மூலமாகவும், சில தனித்துவமான தீர்வுகளை வழங்கி, மொபைல் ஃபோன் ஆதிக்கம் மற்றும் சமூக ஊடகம் ஏற்கப்பட்டுள்ளதன் போக்குகளை மேராஜாப் தனது இலக்குப் பிரிவுக்காக பயன்படுத்திவருகிறது:
இணை நிறுவனரும், பொருட்கள் துறையின் CIO மற்றும் தலைவராகவும் உள்ள கிரீஷ் ஃபன்சால்கர் கூறுகிறார், "இத்திறந்த கட்டமைப்பு தொழில்நுட்பத் தளமானது, மூன்றாம் நபர் தயாரிப்பு வழங்கல்கள் மற்றும் அடுத்தத் தலைமுறை கருவிகளை ஒருங்கிணைக்க உதவுவதால், வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகளையும் கடந்த ஏராளமானவற்றை இது இறுதியில் வழங்குகிறது." பணிநியமனம், திறன் உருவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு சூழியல் அமைப்பிலுள்ள அனைவருடனும் கூட்டிணைவதற்கு மேராஜாபிற்கு இது உதவுகிறது.
ராமன் தியாகராஜன் கூறுகிறார், "இணையவழி அணுகலுடன் ஒத்திசைவாக இணைந்திருக்கும் எங்களுடைய "இப்போதே நேர்காணல்" என்ற அம்சத்தை விண்ணப்பதாரர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதே நேரத்தில், பணியமர்த்துவோர் எங்கள் ஆற்றல்மிக்க இணைய டேஷ்போர்டு மற்றும் விண்ணப்பக் கண்காணிப்பு அம்சத்தை மிகவும் விரும்புகின்றனர்."
பல்லவ் சின்ஹா மேலும் கூறுகிறார், "முன்னதாக, தொலைதூரத்தில் இருப்பதனால் அல்லது சரியான சுயவிவரங்கள் இல்லாததனால் தங்கள் நிலையை பணியமர்த்துவோருக்குத் தெரிவிக்க இயலாத சூழ்நிலையில் இருந்த தகுதி வாய்ந்த வேலை தேடுவோரின் வாழ்வில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் இவ்வாய்ப்பு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது."
மேராஜாப்.இன் (MeraJob.in) - இந்தியாவின் 1வது பணி பொருத்தப் போர்ட்டல் பற்றி
பணியமர்த்துவோருக்கான நெ.1 முன்சோதனை தீர்வாக மேராஜாப் தன்னைக் குறிப்பிடுகிறது. அதன் தீர்வானது, சிறந்த தரமான பணிநியமனத்தையும், பணியமர்த்துவோர் பிராண்ட் மீது நேர்மறை தாக்கத்தையும் அடைகின்ற அதே நேரத்தில், குறைந்த செலவில், மேலும் விரைவாகப் பணியமர்த்துவதற்கும் பணியமர்த்துவோருக்கு உதவுகிறது. எனவே " 1/2 நேரத்தில், 1/2 செலவில் பணியமர்த்துங்கள்" என்பது அதன் தாரக மந்திரமாகும்.
தற்போதுள்ள வேலைவாய்ப்பு வலைவாசல்கள் வழங்கும் பணிநியமனத்திற்கான வரிவிளம்பர அணுகுமுறையையும் கடந்து, பின்வருபவை போன்ற தனித்தன்மை வாய்ந்த அம்சங்களுடன் முன்னேறிச் செல்வதே மேராஜாபின் எண்ணமாகும் -
ஏறக்குறைய 500,000 ஸ்மார்ட்ப்ரொஃபைல்கள் மற்றும் MeraJob.in-ல் பதிவு செயதுள்ள ஏறத்தாழ 1,000 பணியமர்த்துவோருடன், தனது வலைவாசலில் அதிகரித்துவரும் போக்குவரத்தின் வாயிலாக, விண்ணப்பதாரர்களின் மிக உயர்ந்த அளவிலான ஈடுபாட்டை ஏற்கனவே இவ்வலைவாசல் கண்டு வருகிறது. அதிக ஈடுபாடு மற்றும் தனது பயனர்களான வேலை தேடுவோர் மற்றும் பணியமர்த்துவோரைப் பற்றிய ஆழ்ந்த அறிவுடன், மிக அதிக ஆற்றல் பெற்ற ஒரு சந்தையை உருவாக்குவதன் மீது மேராஜாப் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஊடகத் தொடர்பு:
ஆஷு பஜாஜ்,
[email protected],
+91-9899905387,
உள்ளடக்கம் மற்றும் விண்ணப்பதாரர் ஈடுபாட்டு மேலாளர்
மேராஜாப் இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article