அரசின் மடிக்கணினி விநியோகமானது, இளைஞர்களின் பணிநியமனத் தகுதியிலும் தன்னம்பிக்கையிலும் அற்புத மாற்றங்களை ஏற்படுத்துகிறது: கருத்தாய்வு
புது டெல்லி, September 9, 2015 /PRNewswire/ --
தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக அரசுகள், குறிப்பாக உத்தர பிரதேச மற்றும் தமிழ் நாடு அரசுகள், மேற்கொண்டு வரும் மடிக்கணினி விநியோகச் செயல்முறையானது, இளைஞர்களிடையே திறன்கள், அறிவாற்றல், பணிநியமனத்தகுதி மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் ஒரு முக்கிய குறுக்கீடாக அமைகின்ற வாய்ப்பைக் கொண்டுள்ளது.
இது, டெல்லியில் அமைந்துள்ள இந்திய வாய்ப்பு ஆலோசகர்கள் என்ற யுக்தி அறிவுரை மற்றும் ஆலோசனை நிறுவனம் நடத்திய கருத்தாய்வு ஒன்றின் கண்டுபிடிப்பாகும். இந்நிறுவனம் மீரட், வாராணசி, கான்பூர் மற்றும் லக்னோ நகரங்களில் நடத்திய ஒரு தாக்கத்திற்கான கருத்தாய்வில், மடிக்கணினி விநியோகமானது தனது இலக்குகளை பெருமளவில் அடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்ட மாணவர்களின் அறிவாற்றல், திறன் மற்றும் தன்னம்பிக்கையில் மாபெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்தாய்வு நடத்தப்பட்ட ஒவ்வொருவரும், மடிக்கணினிகள் தங்கள் அறிவாற்றலையும், விழிப்புணர்வையும் முன்பைவிட அதிகமாக மேம்படுத்தியுள்ளதாக உணர்ந்தனர். மாணவர்களில் 80%-க்கும் அதிகமானவர்கள், முன்பைக் காட்டிலும் தங்களுடைய பணிநியமனத் தகுதி அதிகரித்துள்ளதாக ஒப்புக் கொண்டதுடன், அவர்களில் 30%-க்கும் அதிகமானவர்கள் அது முன்பைவிட மிக அதிக அளவில் அதிகரித்துள்ளதாகவும் நம்புகின்றனர். மடிக்கணினியை அணுக முடிந்திருப்பது, தொழில்முனைவு மற்றும் கணினிசார் பணிகளை மாணவர்கள் அதிகம் விரும்பும் வகையில் அவர்களுக்கு ஆற்றலளித்து, மடிக்கணினி பெறுவதற்கு முன்பு அவர்கள் ஆர்வம் கொண்டிருந்த அரசு மற்றும் வங்கிப் பணிகளிலிருந்து அவர்களை விலகிச் செல்ல வைத்துள்ளது.
மடிக்கணினி வழங்கப்பட்ட பெண்களிடையே வாழ்க்கைத்தொழில் மீதான கவனம் திடீரென்று அதிகரித்திருப்பது, பெண்களின் ஆற்றலளிப்பிற்கான ஒரு சிறந்த கருவியாக மடிக்கணினிகள் இருப்பதையும் பறைசாற்றுகிறது. இப்போது நிறைய பெண்கள் கணினி தொடர்பான வேலையைத் தேடுகின்ற ஆற்றல் பெற்றிருப்பதுடன், வாழ்க்கைத்தொழில் விருப்பத்தேர்வுகள் தொடர்பாக, முடிவுசெய்யாதவர்கள் அல்லது தெரியாதவர்களின் எண்ணிக்கையும் 90% அளவிற்குக் குறைந்துள்ளது.
கல்வி மற்றும் வலை உலாவல் மடிக்கணினிகளின் மிகவும் பயனுள்ள அம்சமாக இருப்பதால், மடிக்கணினியை பயன்படுத்தும் 70%-க்கும் அதிகமான பதிலளித்தவர்கள் மடிக்கணினியை முக்கியமாக கல்வி நோக்கங்களுக்காகவே பயன்படுத்தியுள்ளனர். தங்கள் மடிக்கணினியை ஒரு ஸ்மார்ட்ஃபோனுக்காக விட்டுக் கொடுப்பார்களா என்று கேட்கப்பட்டபோது, 60%-க்கும் அதிகமானவர்கள் முடியாது என்றே பதிலளித்தனர். மடிக்கணினியின் பயன்பாட்டிற்கான ஓர் உறுதியான நம்பிக்கை வாக்காக இது அமைந்தது.
"அரசுகள் செயல்படுத்தும் மடிக்கணினி விநியோகத் திட்டங்கள், இந்தியாவின் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான ஓர் ஆற்றல்மிக்க வழியாகும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார், ஹெச்பி இந்தியாவின் பிரிண்டிங் மற்றும் பெர்சனல் சிஸ்டம்ஸ் துணைத் தலைவரும் பொது மேலாளருமான திரு. ராஜீவ் ஸ்ரீவஸ்தவா. "மடிக்கணினி மற்றும் இணையதளத்தை அணுகும் வசதியை அளிப்பதன் மூலம், குடிமக்களின் திறன் மற்றும் பணிநியமனத்தகுதி ஆகிய இரண்டையுமே இந்தியாவால் மேம்படுத்த முடியும், இது நம்முடைய பொருளாதாரம் உயர்வதற்கும் வழிவகுக்கும். பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து, இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தனிநபர் கணினியை அணுகும் வசதியை அளிக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டுள்ளோம்."
இந்தியா ஆப்பர்சூனிட்டி அட்வைஸர்ஸ் பற்றி:
இந்தியா ஆப்பர்சூனிட்டி அட்வைஸர்ஸ் என்பது, இந்தியாவில் நுழைவதற்கும், இங்கு வளர்வதற்கும் விரும்பும் நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகின்ற ஓர் ஆலோசனை நிறுவனமாகும். யுக்திகள் மற்றும் திட்ட செயலாக்கங்களை உருவாக்குவதற்கும், நிலைத்த தன்மை கொண்ட வளர்ச்சிக்கு தடைக்கற்களாக உள்ளவற்றை நீக்குவதற்கும், நாங்கள் ஒன்றிணைந்து செயலாற்றுகிறோம்.
எங்கள் வாடிக்கையாளர்கள், எங்கள் சமுதாயம் மற்றும் எங்கள் நாட்டிற்கு சரியானதையே செய்வதன் மீது நாங்கள் மிகவும் ஈடுபாடு கொண்டிருக்கிறோம்.
வலைத்தளம்: http://www.indiaopportunity.in/
ஊடகத் தொடர்பு:
ஷீதல் சுமன்
[email protected]
+91-1143070364
இந்தியா ஆப்பர்சூனிட்டி அட்வைஸர்ஸ்
Share this article