புது டெல்லி, October 29, 2015 /PRNewswire/ --
நமது அன்புக்குரியவர்கள் மரணமடைந்துவிட்டால் நமக்கு ஏற்படக்கூடிய துக்கத்தையும், அவர்கள் நம்முடன் இனி இருக்க மாட்டார்கள் என்கிற உணர்வையும் சமாளிப்பது கடினம். சிலர் அவர்களின் வலியை சமூக ஊடகத்தில் தெரிவிப்பார்கள், ஆனால் சிலர் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவரின் உயிரிழப்பு பற்றி உலகத்திற்குத் தெரிவிப்பது சரியான வழியல்ல என்று நினைப்பார்கள். தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றிய நினைவுகளை வெளிப்படுத்தி, அஞ்சலி செலுத்துவதற்கு தனிப்பட்ட, பிரத்யேக முறையைத் தேடுபவர்களுக்கு Indiaonline.in ஒரு பிரத்யேக ஆன்லைன் சேவையான http://www.Tributes.in ஐ அறிமுகம் செய்துள்ளது. இது அவர்களின் உணர்வுகளையும், பாசமான நினைவுகளையும் மிகவும் பிரத்யேகமான முறையில் பகிர்ந்துக் கொள்ள செய்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150626/752467 )
Tributes.in என்பது ஒரு பிரத்யேக சேவை. இதில் ஒருவர் வாழ்நாள் முழுவதும் மிகக் குறைவான கட்டணத்தில் அவர்களின் அன்புக்குரியவர்கள் பற்றிய தனிப்பட்ட நினைவுக் குறிப்புகளை உருவாக்கலாம்! ஒவ்வொரு நினைவுக் குறிப்பையும் உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம். இதில் படங்கள், வீடியோக்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் குடும்ப கிளைப்படம் ஆகியவற்றையும் சேர்க்கலாம். மேலும், பயனர்கள் இந்த தகவலை யாருடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் பக்கத்தை பப்ளிக் அல்லது பிரைவேட்டாக மாற்றிக் கொள்ளலாம். இது ஃபேஸ்புக், கூகுள், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம். எஸ் .ஐ. மூலமாகக்கூட நிறைய நண்பர்களை இன்வைட் செய்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது. ஒவ்வொரு ப்ரொஃபைலும் மரணமடைந்த நபரின் புகைப்படத்தைக் கொண்டிருக்கும். அந்த புகைப்படம் ஒரு வேர்ச்சுவல் ஃப்ரேமில் பொருத்தப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் தனிப்பட்ட தகவல்களைப் போஸ்ட் செய்வது, வேர்ச்சுவல் பூக்களைக் கொட்டுவது, மாலை அணிவிப்பது, அல்லது வேர்ச்சுவல் மெழுகுவர்த்தி, அகல் விளக்கு அல்லது ஊதுவத்தியை ஏற்றுவது ஆகியவற்றின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு நபரின் பிறந்த நாள் அல்லது நினைவு நாளுக்கு 10 நாட்கள் முன்பும் பிறகும் ப்ரொஃபைலை ஹைலைட் செய்துக் காட்டுவது இந்த வலைதளத்தின் சிறப்பம்சமாகும்.
Tributes.inன் இயக்குநர் திரு. ராஹுல் ஜலான் இது குறித்து கூறுவதாவது, "Tributes.in என்பது உங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையையும் நினைவுகளையும் கொண்டாடுவதற்கான ஒரு பிரத்யேக இடம். இது மரணமடைந்த உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் அன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக இருக்கும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், இணையதள தலைமுறை தங்கள் அன்புக்குரியவர்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதற்கான ஒரு எளிதான, தனிப்பட்ட வழியை அளிப்பதற்காக இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. எங்களுடைய தாரகமந்திரம் இதுதான் - "ஒருவர் பற்றிய நினைவுகளை அவரின் மரணம் ஒருபோதும் மற்றவர்களின் மனதிலிருந்து அழித்துவிடாது" - நம் அன்புக்குரியவர்கள் பற்றிய நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஊடகம் தவிர வேறு எது சிறப்பான வழியாக இருக்க முடியும்."
இந்த வலைதளம் ஏற்கனவே மகாத்மா காந்தி, யாஷ் ராஜ் சோப்ரா, சரோஜினி நாயுடு போன்ற பிரபலமானவர்களின் ப்ரொஃபைல்களை பொதுமக்களுக்கு காட்டுகிறது. மக்கள் ஃபேஸ்புக் அல்லது மின்னஞ்சல் கணக்கில் பதிவு செய்வதன் மூலம் இந்த ப்ரொஃபைல்களில் தகவலை போஸ்ட் செய்யலாம். இந்த பக்கங்கள் விருப்பப்படி அமைக்கத்தக்க இசையுடன் பல வகையான முழுமையான தீம்களைக் கொண்டுள்ளது. இந்த பக்கங்களைப் பார்ப்பவர்களுக்கு அவர்களின் அன்புக்குரியவர்கள் பற்றி நினைவூட்டும் தனிப்பட்ட ப்ரொஃபைலை உருவாக்க செய்கிறது.
IndiaOnline.in பற்றி:
இந்தியா ஆன்லைன் நெட்வொர்க் என்பது பான் இந்தியா இன்டர்நெட் பிரைவேட் லிமிட்டடின் ஒரு முயற்சியாகும். இது இந்தியாவை மையமாகக் கொண்ட 475க்கும் அதிகமான போர்ட்டல்களைக் கொண்ட பிரத்யேகமான மிகப் பெரிய நெட்வொர்க்காகும். இவை ஆன்லைனில் கிடைக்கக்கூடிய சாத்தியமான அனைத்து வளஆதாரங்கள் மற்றும் சேவைகளின் நெட்வொர்க்கை உள்ளடக்கியுள்ளன. அனைத்து இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பெருநகரங்கள் மற்றும் கிட்டத்தட்ட 300 முக்கிய நகரங்கள் ஆகியவை ஒவ்வொன்றுக்குமென தனித்தனி போர்ட்டல் மூலம் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 4000 ஊர்கள் அதனதன் மாநில போர்ட்டல்களில் துணை வலைதளங்களாக உள்ளன.
தொடர்புத் தகவல்:
பூஜா குமாரி
PR மற்றும் ஊடக மேலாளர் - பான் இந்தியா இன்டர்நெட் பிரைவேட் லிமிட்டட்
தொலைபேசி: 011-41306106 (5 Lines)
மொபைல்: +91-7838033290
https://www.tributes.in/
Share this article