சென்னை, February 16, 2016 /PRNewswire/ --
16 Feb 2016 17:24 அன்று, IST பிரகாரம் PR நியூஸ்வயர் மூலம் Pothys வெளியிட்ட "'உலக நாயகன் - Kamal Hassan'-ஐ Pothys தன்வசம் வளைத்துக் கொண்டது" என்ற செய்தி வெளியீட்டில், [பிழையின் விவரங்களை ஆபரேட்டர் இங்கு சேர்க்க வேண்டும் – உம். "...மூன்றாவது பத்தியில், இரண்டாவது வாக்கியம் .... இவ்வாறில்லாமல் ..... இவ்வாறு இருக்க வேண்டும்"] PR நியூஸ்வயர் தவறாக வெளியிட்டிருப்பதாக நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். முழுமையான, திருத்தப்பட்ட வெளியீடு வருமாறு:
TV விளம்பரங்கள் ஒன்றின் கம்பீரமான நிழற்காட்சியிலிருந்து நடிகர் Kamal Hasan-ன் கனத்த, ஆண்மைமிக்க குரல் வெளிப்பட்டபோது, மக்கள் பிரமித்துப் போனார்கள். முதுகுத் தண்டில் ஏற்பட்ட சில்லென்றி உணர்ச்சியிலிருந்து வெளிவருவதற்காக, அவர்களுடைய கைகள் TV ரிமோட்களை இறுகப் பற்றிக் கொண்டன. அது உலக நாயகனின் குரலாக இருக்கும் நிலையில், ஒரு TV விளம்பரத்திலிருந்து அது கேட்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துவது இயற்கைதான். மேலும், இதுவரை எந்தவொரு பிராண்டின் பெருமையையும் எடுத்துச் சொல்லியிராத ஒருவர், முதல் முறையாக மக்கள் முன் தோன்றுவது என்பது உண்மையில் ஒவ்வொருவருக்கும் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு தருணமாக அமைந்தது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160215/10140148-a)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160215/10140148)
திரைகளுக்குப் பின்னால் நடைபெற்ற அப்பட்டமான கதை இதுதான்.
எங்கள் விளம்பரக் குழு உறுப்பினர்கள், Pothys -க்காக உண்மையிலேயே தகுதிபெறுகின்ற ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், அது ஓராண்டு காலமாக நிலுவையிலிருந்த, இந்த பிராண்டை ஆதரிக்கின்ற ஓர் ஒப்பந்தத்திற்கும் Kamal தலையசைத்திருந்த ஒரு காலகட்டமாகவும் இருந்தது. எனவே, இந்த விளம்பரத்தின் கருப்பொருளாக உலக நாயகனை இருப்பது குறித்து நாங்கள் இரட்டிப்பு உற்சாகமடைந்தோம். "உற்சாகத்தின் உச்சத்திலிருந்த" குழுவானது, உலக நாயகனை, உலகப் புகழ்பெற்ற பிராண்டுடன் இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டது.
பட்டுச் சேலைகளை குவித்து வைத்திருந்த கடைகள் ஏராளமாக இருந்ததால், நேர்த்தியான பட்டுச் சேலைகளைக் கொண்டுள்ள ஷோரூம்களில் ஒன்றாக மட்டுமே Pothys'-ஐ காட்டுவது என்பது மக்கள் ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றுதான். அப்போதுதான், நாங்கள் பட்டுச்சேலைகள் மற்றும் பிறவற்றை ஸ்டாக் செய்துள்ள அங்காடி மட்டுமல்ல என்ற யதார்த்த நிலை எங்களைத் தாக்கியது; நாங்கள் மக்கள் மிகவும் விரும்பும் ஓர் அங்காடியாகவும் உள்ளோம். ஆம், Pothys'-ன் அசல் முகம் மக்களிடையே விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்கும் உண்மை நிலையை நாங்கள் உணர்ந்தோம். இன்னும் சொல்லப்போனால், ஈடிணையற்ற அளவிற்கு மக்களின் மனதை அது கொள்ளை கொண்டுள்ளது! எனவே, அதனை ஏன் 'மக்களின் Pothys' என்று அழைக்கக்கூடாது?
தமிழ்நாட்டிலுள்ள மக்கள் விரும்பிச் செல்கின்ற ஷாப்பிங் இடம் Pothys என்பதை கூறும்போது, "அபிமானம்" என்ற தமிழ்ச் சொல் அதற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறது. நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கியபோது, எங்களுக்கு "உலக நாயகனை" படம் பிடிப்பது குறித்து சிறிது படபடப்பு இருந்தது. ஆனால், அவரோ நூறு சதவீதத்திற்கும் மேலாகப் பங்களித்து, எங்களைத் தொடர்ந்து பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தார். அவர் கருப்பொருள் மற்றும் பிராண்டை முழுமையாக ஈர்த்துத் தன்வயமாக்கிக் கொண்டு, அதனை நொடிப் பொழுதில் தனது நடிப்பில் வெளிப்படுத்தியது அற்புதமாக இருந்தது. அவர் சரித்திரம் படைப்பவர். முழுமையான ஈடுபாட்டினை வெளிப்படுத்திய அம்மாபெரும் நடிகர், மிகச் சிறந்த விளம்பரம் ஒன்றை உருவாக்கும் வகையில் எங்கள் அனைவருக்கும் ஓர் ஊக்கமாக இருந்தார். நாங்களும் Kamal-ஐ வேறு எந்த விளம்பரமும் இதுவரை காண்பிக்காத வகையில் எடுத்துக்காட்டியுள்ளோம்.
Kamal Hasan-ன் ஆதரவுக்கும் மேலாக Pothys-க்கு மேலும் சிறந்தது எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எங்களிடையே அவர் இருந்தது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்ததுடன், பலவற்றையும் கற்றுக் கொண்டோம், என்பது மட்டுமின்றி, விளம்பரம் வெளிவந்தபோது, பார்வையாளர்களும் அவ்விதமே உணர்ந்தனர். இந்த விளம்பரத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை, சமூக நோக்கத்திற்காக அவர் நன்கொடையாக அளித்துள்ளதை மக்கள் அறிந்தபோது, இவ்விளம்பரம் அவர்களுடைய கண்கள் மற்றும் இதயங்கள் ஆகிய இரண்டையுமே தொட்டுவிட்டது எனலாம். இக்கூட்டு எங்கள், மற்றும் உங்கள் நினைவிலும்கூட என்றுமே பசுமையாக இருக்கும். மேலும் பல பிரமாத அனுபவங்களுக்காக காத்திருங்கள். நாங்கள் எப்போதுமே 'மக்களின் 'Pothys' ஆகவே இருப்போம்!
Pothys பற்றி:
தமிழ் நாட்டின் ஜவுளித் தொழில்துறையில், அனைவரின் விருப்பமான நிறுவனமாக தன்னை Pothys அமைத்துக் கொண்டுள்ளது. எங்களுடைய இணையற்ற புகழானது, உங்களுக்கு உயர்ந்தபட்ச தரம், தனித்துவமான மற்றும் வேறுபட்ட ஜவுளி வகைகள் மற்றும் ஈடில்லாத வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்க வேண்டுமென்ற எங்கள் அதீத ஈடுபாட்டிலிருந்து தோன்றியதாகும்.
எங்கள் கடின உழைப்பு, ஈடுபாடு மற்றும் விடாமுயற்சியானது, 2002-ம் ஆண்டில், SUN TV Neilson கருத்தாய்வின்படி, மிகவும் விரும்பப்படுகின்ற, சேலைகளுக்கான ஷோரூம் என்ற வாக்கினைப் பெறுகின்ற பெருமையை எங்களுக்கு ஈட்டித் தந்துள்ளது. 2003-ம் ஆண்டிலேயே ISO 9001 சான்றளிப்பைப் பெற்ற தமிழ் நாட்டின் முதல் சில்லறை விற்பனை அங்காடியாகவும் நாங்கள் பெருமை பெற்றுள்ளோம். புதுமையை அறிமுகப்படுத்தி, பட்டு உற்பத்தில் தலைசிறந்து விளங்க வேண்டுமென்ற Pothys-ன் அதீத ஆர்வமானது, உலகின் மிக நீண்ட பட்டுச் சேலையை உற்பத்தி செய்ததற்கான Guinness World Record-ஐ நாங்கள் வெல்வதற்கு வழிவகுத்தது.
தமிழ் நாட்டிலேயே எங்கள் ஷோரூம்கள் மிகப் பிரமாண்டமான அளவில் பட்டுச் சேலைகளைக் குவித்துள்ளன. Pothys-ல் ஏராளமான பட்டு வகைகள், தனித்துவமான டிசைன்கள் மற்றும் அசல் பட்டு பிராண்ட்களின் நன்மைகளை நீங்கள் பெறுகிறீர்கள். ஆம், சாமுத்ரிகா, பரம்பரா மற்றும் வஸ்திரகலா என்ற பெயருடைய தனது தனித்துவமான பிராண்ட் பட்டுச் சேலைகளை அறிமுகப்படுத்திய, தமிழ் நாட்டின் முதல் ஜவுளி ஷோரூமும் Pothysதான். இந்த பட்டு பிராண்ட்கள், தங்கள் பட்டின் வளமை, தனித்தன்மையான டிசைன் மற்றும் ஆடம்பரம், அசல் ஜரிகை வேலைப்பாடுகள் மற்றும் நெசவு கைத்திறன் ஆகியவற்றினால் இணையற்ற சிறப்புத் தோற்றம் மற்றும் நேர்த்தியைக் கொண்டு தனித்து மிளிர்கின்றன. எங்கள் பிராண்ட் பட்டுகள், தங்களுக்கே உரித்தான முறையில் வழிவழியாக வருபவை மற்றும் வரப்போகும் தலைமுறைகளிலும் நீடித்திருப்பவை.
Pothys நிறுவனம், வளமான மரபும், செழுமையான வரலாறும் கொண்டது, எங்கள் மூதாதையர்கள் கடந்த காலத்தில் மன்னர் பரம்பரைகளைச் சேர்ந்த அரச குடும்பங்களுக்கு நெசவாளர்களாக பணிபுரிந்துள்ளனர். எங்கள் நிறுவனரான திரு. K.V. Pothy Moopanar அவர்களால், அவருடைய தறியிலேயே நெய்யப்பட்ட பருத்திச் சேலைகள், வேட்டிகள் மற்றும் துவாலைகளை விற்பனை செய்வதற்காக, 90 ஆண்டுகளுக்கு முன்பே Pothy Moopanar என்ற பெயரில், Pothys நிறுவப்பட்டது. எனவே, எங்கள் முதல் ஷோரூம், ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அமைக்கப்பட்டது.
<Start_indent>
ஊடகத் தொடர்பு:
Vimalesh G
[email protected]
+91-9962582597
டீஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்தியாளர்
Prateek Technosoft India Private Limited
Share this article