புது தில்லி, July 29, 2016 /PRNewswire/ --
- இந்திய துணைக் கண்டத்தில் உணவு & சுகாதார உட்பொருட்கள், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் துறைக்கான மிகவும் விரிவான B2B கண்காட்சி
- புது தில்லியில் முதன் முறையாக நடைபெறும் கண்காட்சி; இந்தியாவில் Fi India & Hi உடைய 11வது நிகழ்வு
- 200க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலக கண்காட்சியாளர்கள்
- 12 பங்கேற்கும் நாடுகள்
- வருடந்தோறும் மும்பை மற்றும் புதுதில்லிக்கு இடையே சுழலும்
- முதன் முதலான Fi Pre-Connect Congress
- சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங் மற்றும் பேக்கரி தொழிற்பட்டறைகள் குறித்த தொழில்நுட்ப கருத்தரங்குகள்
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், Food ingredients India & Health ingredients (Fi India & Hi) உடைய 11வது நிகழ்வை அறிவித்தது. 2006 முதல் மேற்கு இந்தியாவில் வெற்றிகரமாக சேவைசெய்த பிறகு, Fi Indiaவின் 2016 ஆம் ஆண்டின் நிகழ்வானது புது தில்லியில் 22-24 ஆகஸ்டு 2016 வரை பிரகதி மைதானத்தில் நடைபெறும். இந்த கண்காட்சியானது தற்போது இரண்டு பிரத்தியேக நம்பிக்கைக்குரிய உணவு கேந்திரங்களான மும்பை மற்றும் புது தில்லிக்கு இடையே ஆண்டுதோறும் சுழற்சியடையும். புது தில்லியில் 2016ஆம் ஆண்டின் Fi India & Hi நிகழ்வானது வட இந்தியாவில் வளர்ந்துவரும் உணவு உற்பத்தி கேந்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ள துறைசார்ந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160728/10151487 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
11 ஆண்டு துறைசார்ந்த அனுபவத்தின் ஆற்றலைப் பெற்று, Fi India மீண்டுமாக சுகாதார உட்பொருட்கள், உணவு பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங் குறித்த 3 நாள் இலவச, ஆன் - சைட் கருத்தரங்குகளை வழங்கும். இந்த கருத்தரங்குகள் பல்வேறு வகையான இந்திய கழகங்களின் கூட்டுறவோடு நடத்தப்பட்டு தொழில்நுட்பம் மற்றும் சந்தை போக்குகள் ஆகிய இரண்டையும் போதிக்கும். நாள் 1இல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தொழில்நுட்ப அமர்வுகளை Health Foods & Dietary Supplements Association (HADSA) நடத்தும். முதல் முறையாக, Fi India மாநாட்டில் ஒமேகா 3 சார்ந்த தயாரிப்பு பயிற்சியை HADSA வழங்கும். நாள் 2இல் All India Food Processors' Association (AIFPA) நடத்தும் தேசிய கருத்தரங்கு நடைபெறும். நாள் 3இல் உணவு பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங்கில் புதுமைகள், புதிய மற்றும் வளர்ந்துவரும் போக்குகள் குறித்த அமர்வுகள் இடம்பெறும்.
ஆற்றல்மிக்க கருத்தரங்குகளோடு கூடுதலாக, இந்த கண்காட்சியில் உணவுத் தொழில்நுட்பம்-பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங் நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட Expo Foodtec Pavilionனும் இடம் பெறும், இது CCCHMPIE நடத்தும் ஒரு சீன அரங்கம் மற்றும் ஒரு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் இடம்பெறும் AIFA அரங்கமும் நடைபெறும்.
மூன்றாவது ஆண்டாக, Fi India & Hiவில் Assocom Institute of Bakery Technology & Management (AIBTM) என்னும் பேக்கிங் தொழில் நுட்பம் மற்றும் துணை பாடங்களுக்கான ஒரு விரிவான போதனை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணையோடு ஒரு இரண்டு நாள் இலவச பேக்கரி தொழிற்பட்டறை 'All about Doughnuts' நடைபெறும். இந்த தொழிற்பட்டறையிலே உணவு பாதுகாப்பு, உணவு சுகாதாரம் மற்றும் தர கட்டுப்பாடு, அலங்கரிப்பின் முக்கியத்துவம், டோனட்டுகளைக் கையாளுதல் மற்றும் பேக்கேஜிங் மற்றும் டோனட்டுகளை உண்பதற்கான செயல்முறைவிளகம் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் செயல்முறைவிளக்கம் ஆகிய இரண்டும் நடைபெறும். மூன்றாம் நாளில், பேக்கர்கள் மத்தியிலுள்ள திறன்களை ஊக்கபப்டுத்தவும் கௌரவிக்கவும் நேரலை போட்டிகள் மூலமாக பேக்கரி சாம்பியன்ஷிப் நடத்தப்படும். இக்கண்காட்சியில் துறையின் புதுமைப்புகுத்தலில் முன்சென்று வழி நடத்தும் கண்காட்சியாளர்களை சிறப்பித்துக் காட்டும் ஒரு புதுமையான தயாரிப்பு காட்சியகமும் ஒரு புதுமையான உட்பொருட்கள் சாம்பியன்ஷிப்பும் இடம்பெறும்.
கண்காட்சிக்கு முன்னோட்டமாக, UBM India மற்றும் Fi India முதன் முதலான Fi Pre-Connect Congressஐ தொடங்கி வைப்பார்கள் , இது இந்திய உணவு உற்பத்தியாளர்களின் வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை பரிமானங்களில் சந்திக்கும் சவால்கள், புதிய தொழில் நுட்பங்கள் மீதான நவீன கண்ணோட்டங்கள், புதுமையான தொழில்-விற்பனை உக்திகள் மற்றும் பிற பேசப்படும் தலைப்புகள் குறித்து விவாதிப்பதற்கும் கருத்து பரிமாறுவதற்குமான் ஒரு தளம். துறை நிபுணர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரவும், ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் அறிவுசார்ந்த முறையிலே, முதன்மையான மனதுகள் தங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைத்து இந்திய உணவு-பாண துறையின் மிக முக்கியமான பிரச்சனைகளுக்கு மூடப்பட்ட கதவுகளுக்குள் தீர்வு காணவும் Fi Pre-Connect Congress இலக்கு வைத்துள்ளது. மூடப்பட்ட கதவு விவாதங்களில் உணவு-பாணம் மற்றும் உட்பொருள் பிரிவின் தரம், பாதுகாப்பு, ஒழுங்குமுறை, விநியோக சங்கிலி, செயல் முறைகள் மற்றும் சில்லரை வர்த்தக பரிமானங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறை உக்திகள் உள்ளடங்கி இருக்கும்.
Fi India & Hi 2016 நிகழ்வின் அறிவிப்பு குறித்து பேசும்போது, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India, இவ்வாறு கூறினார், "வட இந்தியாவில் சாத்தியமுள்ள வளர்ச்சியை உணவு பதனிடும் துறை கண்டு வருவதாலும், பஞ்சாப், ஹரியானா, புது தில்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அதிக முக்கியத்துவமான பிரிவாக இருப்பதாலும், சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள இவ்வாண்டு நாங்கள் புது தில்லிக்கு நகர்ந்து இருக்கிறோம். Fi India & Hi என்பது மூன்று நாட்கள் ஒரே கூரையின் கீழ் உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் ஒன்றுகூடி தொழில்களை கண்டறித்து வளர்ப்பதற்கான ஒரு உண்மையான சர்வதேச கண்காட்சி ஆகும்."
"இக்கண்காட்சிக்கு முன்னோட்டமாக, இவ்வாண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி Fi Pre-Connect Congress தொடக்கவிழாவும் நடைபெறும், இதில் ஊடாடல் மிக்க துறைசார்ந்த பேனல் விவாதங்கள் மற்றும் புகழ்பெற்ற துறை நிபுணர்களின் முக்கிய குறிப்புகள் ஆகியவை இடம்பெறும். Pre-Connect congressயில் இந்திய உணவு உற்பத்தி தொழிற்சாலைகளின் வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை பரிமானங்களில் சந்திக்கப்படும் சவாள்கள், புதுமைகள் மற்றும் தொழில் நுட்பம், தொழில்-விற்பனை உக்திகள் மற்றும் பிற பேசப்படும் தலைப்புகளில் விவாதிக்கப்படும் நன்கு வரையறுக்கப்பட்ட அமர்வுகள் இடம்பெறும்.," என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழி நடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் ubmindia.in
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article