Indiaonline.in இந்தியாவின் ஐந்தாயிரம் இடங்களிலிருந்து முகவர்களை அழைக்கிறது.
புதுதில்லி, September 15, 2016 /PRNewswire/ --
Indiaonline.in Network - 475 மாநில/நகரங்களிலும், 4000 சிறிய நகரங்களிலும் இருக்கக்கூடிய இந்தியாவின் மிகப்பெரிய கூட்டமைவு ஆகும். முகவர்கள் மூலமாக சந்தையை விரிவாக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் 475 நகரங்களிலும், 4000 சிறிய நகரங்களிலும் முகவர்களை நியமிக்கும் கடுமையான அணுகுமுறையை அறிவித்திருக்கிறது. இது குறித்து Mr. Rahul Jalan, இயக்குநர், IndiaOnline.in Network, `இந்தியாவில் மெய்நிகர் சந்தையின் முன்னோடியான IndiaOnline.in Network நாடு முழுவதும் தனது பிரத்யேக முகவர்கள் மூலம் விரிவாக்கவிருக்கிறது' என்று கூறினார்.
வளர்ந்து வரும் நிலையிலும் கூட, ஃப்ரான்சைஸிங் (வணிக உரிமை துறை) தொழில் இந்தியாவில் மிகவேகமாவும் எப்போதும் மாற்றத்தைக் கொண்டிருக்கும் தொழில் துறை ஆகும். கடந்த 4-5 ஆண்டுகளில் 30-35 சதவிகித வளர்ச்சியை கண்டிருப்பதோடு இப்போது ஆன்லைன் மற்றும் இணைய துறையில் இருப்பவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது. KPMG மற்றும் Franchise Association of India (FAI) -வின் சமீபத்திய அறிக்கைப்படி, தற்சமயமிருக்கும் 13.4 பில்லியன் டாலரிலிருந்து 2017 ஆம் ஆண்டு 51 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் சாத்தியத்தை இந்திய ஃப்ரான்சைஸ் பொருளாதரம் கொண்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஃப்ரான்சைஸ் தொழிலின் பங்கு 4 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mr. Jalan, கூற்றுப் படி, `இந்தியாவில் ஒவ்வொரு பெருநகரம் மற்றும் நகரத்தின் தினசரித் தேவைக்கான கிராக்கி மிகவும் அதிகமாகும். பள்ளிக்கூடத்துக்குத் தேவையான அறைக்கலன்களிலிருந்து, வாடகைக்கு வீடு தேடுவது, நேரத்தையும் பணத்தையும் சேமிப்பது வரை ஆன்லைனில் தேடுவதைத் தவிர மக்களுக்குச் சிறந்த தெரிவு வேறு எதுவுமில்லை". அவர் மேலும், `எங்களுடையது இந்திய இணையவாசல் ஆகும். இது எதிர்தரப்பினரை விட இந்தியாவையும் அதனுடைய மக்களையும் நன்கு அறிந்தது. IndiaOnline.in முகவர் மாதிரியானது நகரம் சார்ந்த இணையத்தள தீர்வுகளையும், பட்டியலிடும் வாய்ப்புகளையும், மற்றும் பல சேவைகளையும் IndiaOnline.in தளத்தில் வழங்குவதன் மூலம் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் செழித்து வளர உதவும்" எனக் கூறினார்.
IndiaOnline.in Network - ன் கீழ் இருக்கும் ஒவ்வொரு நகரம் சார்ந்த இணையத்தளமும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டாளர்களுக்கான வெவ்வேறு சேவைகளை நாளுக்குநாள் வழங்கக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு இணையத் தளமும் அந்தந்தப் பெருநகரம்/நகரம் குறித்த விரிவான பொதுத் தகவல்களைக் கொண்டிருப்பதோடு கூடுதல் சேவைகளாக உள்ளூர்ச் செய்திகள், வரி விளமபரங்கள், நிகழ்வுகள் போன்றவற்றையும் கொண்டிருக்கும். IndiaOnline.in Network அதனுடைய தனித்துவமான ஒருங்கிணைப்பட்ட இணையத்தளம் மற்றும் அடைவுப் பட்டியல் சேவையையும் தனது கூட்டமைவு இணையத்தளங்கள் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வணிகத்துக்கும் வழங்கக்கூடிய நோக்கத்திலிருக்கிறது.
IndiaOnline.in Network பற்றி
IndiaOnline.in Network, Pan India Internet Private Limited - ன் முயற்சியாகும். இந்தியாவை மையப்படுத்தும் 475 இணையவாசல்களைக் கொண்ட தனித்துவமான கூட்டமைவு ஆகும். இந்த வகையில் இது மிகவும் பெரியது. ஆன்லைனில் கிடைக்கக்கூடிய வகையில் சாத்தியமான அனைத்து வளங்கள் மற்றும் சேவைகளையும் கொடுக்கும் கூட்டமைவை அவர்கள் வேய்ந்து (தளமிட்டுக்) கொண்டிருக்கிறார்கள். அனைத்து இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மெட்ரோக்கள் மற்றும் சுமார் 475 பெரிய நகரங்கள் என ஒவ்வொன்றும் பிரத்யேகமான இணையவாசல் வழி கவர் செய்யப்பட்டிருக்கும் அதே நேரத்தில் ஒவ்வொரு மாநில இணையவாசலிலும் துணைத் தளங்களாக ஏறக்குறைய மற்ற 4000 நகரங்களும் கவர் செய்யப்பட்டிருக்கின்றன.
ஊடகத் தொடர்பு
Babita Sharma
[email protected]
தொலைபேசி 011-41406106
Pan India Internet Private Limited (புது தில்லி)
Share this article