மும்பை, November 25, 2016 /PRNewswire/ --
UBM India - வின் இந்தியாவிலேயே தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய துறைக்கான பெரிய வர்த்தகக் கண்காட்சி
ஐந்தாவது தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய (OSH) இந்தியாவின் (10, 11 நவம்பர் 2016) பாதுகாப்பு கண்காட்சியை புதியதும், பெரிய இடமுமான சிட்கோ கண்காட்சி மையத்தில் (சிட்கோ எக்ஸ்பிஸன் சென்டர், நாவி வாஷி, மும்பை) UBM India இன்று தொடங்கி வைத்தது. வேலைபார்க்கும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கும் மிகவும் இன்றியமையாத சில சவால்கள் குறித்துக் கலந்துரையாடவும், தீர்வுகள் காணவும் இந்தக் கண்காட்சி உலகப் புகழ்பெற்ற கன்காட்சியாளர்களையும், ஆலோசகர்களையும், தொழில் நிபுணர்களையும், முக்கியமான அரசு அலுவலர்களையும் ஓரு பொதுவான மேடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161102/435226 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
OSH India 2016 -ன் ஆரம்பவிழா, Shri Sudhakar Sambhaji Sonawane, மதிப்பிற்குரிய மேயர், நவி மும்பை முனிசிபல் கார்ப்பொரேஷன் (என்எம்எம்சி), Shri Jayendra Motghare, தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இயக்குநரகம், மகாராஷ்ட்ரா அரசு, Shri Ajay Pandit, இயக்குநர் (டெக்னிக்கல்), டெக்ஸ்டைல் கமிஷனர் அலுவலகம், டெக்ஸ்டைல் அமைச்சகம், இந்திய அரசு, Smt. K. Hemalatha, ரீஜனல் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர், மேற்கு மண்டலம், ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இண்டியா (AAI), இந்திய அரசு, Sanjay Pathak, இயக்குநர், ஆர்டன்ஸ் ஃபாக்டரி போர்டு, ரீஜனல் கண்ட்ரோலெரேட் ஆஃப் சேஃப்டி (WR), காட்கி, புனே, பாதுகாப்பு அமைச்சகம், இந்திய அரசு மற்றும் Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India போன்ற பிரபலாமானவர்களின் மத்தியில் நடைபெற்றது.
OSH India 2016, உலகெங்கிலும் இருக்கும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு வழங்குபவர்கள், சேவை அளிப்பவர்கள் அவர்களுடைய புதுமைகளையும், ஞானத்தையும், இன்னும் பெருமளவில் ஊடுருவாமல் இருக்கும் இந்தியச் சந்தையில் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பு அளித்ததோடு உலக நடைமுறை எண்ணங்களை உருவாக்கவும், பகிர்ந்து கொள்ளவும் ஆற்றல் வாய்ந்த இரண்டு நாள் மாநாடும் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாள் : `OSH சேலன்ஜஸ் இன் இண்டியா அண்ட் தி வே அஹெட்', `உலகமயமாதலும், மாறிவரும் வேலை உலகமும்', `தொழிலாளி ஆரோக்கியத்துக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை', `எப்படி ஒரு நல்ல தலைமை செயல்முறை பாதுகாப்பில் மேம்பாடுகளை உந்தித் தள்ள முடியும், போன்ற தலைப்புகளிலும் `விஷன் ஜீரோ: தொலைநோக்கிலிருந்து நிதர்சனத்துக்கு, `நடத்தை அடிப்படையிலான பாதுகாப்பு மேலாண்மை', என்ற தலைப்புகளில் ப்ரசண்டேஷனும் நடைபெற்றது. இரண்டாம் நாள், பெண்களும், தொழில் பாதுகாப்பும் ஆரோக்கியமும், மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் தொழில் துறையின் பங்கு' என்ற தலைப்புகளில் குழு கலந்துரையாடல்கள் நடைபெற்றது.` ரிஸ்க் அசெஸ்மெண்ட் & ரிஸ்க் கவர்னென்ஸ், தீ மற்றும் மின்சார தீங்கு தடுப்பு, சிறுவணிகங்களில் பெரிய வித்தியாசங்களை உருவாக்குவது, `கட்டுமானத்தில் ஆரோக்கிய, பாதுகாப்பு நேரிடர்கள்"ஆகிய தலைப்புகளில் ப்ரசண்டேஷனும் அளிக்கப்பட்டது.
தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தொழில் பயன்பெறும் பொருட்டு காட்சிப்படுத்துபவர்கள் தங்களுடைய புதுமையான பொருட்களைப் ப்ரமோட் செய்யவும், காட்சிப்படுத்தவும் இன்னோவேஷன் மண்டலம் என்கிற ஒரு மேடையும் இந்த எக்ஸ்போவில் அடங்கும். இந்த வருடம் கண்காட்சி நடைபெறும் நாட்களில் புதிய அம்சமான இரண்டு நாள் `நேரடிக் கருத்தரங்கில்' பணியிட பாதுகாப்பு தொடர்புடைய சமீபத்திய தொழில்நுட்பங்கள், போக்குகள் மற்றும் தலைப்புகளில் முன்னணி பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியாளர்களின் கலந்துரையாடலையும், செயல் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
வெற்றிகரமாக நடந்து முடிந்த OSH India 2016ல் UBM India - ன் நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras, 'நமது நாட்டில் வளர்ந்து வருகிற தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யக்கூடிய தொழில்துறையின் பரிந்துரையை நாங்களும் எதிரொலிக்கிறோம். வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் வாழ்க்கைத்தர முழுமையாக மேம்படுவதற்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். இந்தத் துறையின் முக்கியத்துவத்தை பயன்படுத்துவது மற்றும் எடுப்பாய் காட்டுவது மிகவும் அவசியமாகும். அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள வழங்குபவர்கள் மற்றும் சேவை அளிப்பவர்கள் அவர்களுடைய பொருட்களையும், தீர்வுகளையும் காட்சிப்படுத்துவதற்கு இது பெரிய வாய்ப்பை அளிக்கிறது. இந்தத் தொழில் துறைக்கு ஒரு பூரணமான தளம் வழங்கி இந்த வாய்ப்பை உணர வைத்ததன் மூலம் OSH India - 2016 ன் 5-ம் ஆண்டுக்கான நோக்கத்தை UBM India அடைந்துவிட்டது.
OSH 2016 5ம் ஆண்டு OSH India Safety Awards ல் `Innovation' அல்லது `Hero' விருது வகைகள் பணியிட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு இணக்கமாக இந்தியாவில் செயல்பட்டுவரும் நிறுவனங்கள், அமைப்புகள், பொதுத்துறை அல்லது தனியார் நிறுவன கூட்டணிகள், தனிப்பட்ட நபர்கள் ஆகியோர் பங்குபெறவும் அனுமதிக்கப்பட்டது. Euro Safety Footwear (India) Pvt Ltd அவார்ட்ஸ் நைட்டின் ப்ரசன்ட்டிங் பார்ட்னர் ஆவார்கள். தொழில்துறையைச் சேர்ந்த பிரபலங்களும், முன்னோடிகளும் ஒன்றாகச் சேர்ந்த கொண்டாடிய இந்த இரவில் கவர்ச்சியும் பொழுதுபோக்கும் தடம்பதித்தன. விருதுவழங்கு விழாவில் கலந்து கொண்ட வெற்றி பெற்றவர்கள்:
OSH INDIA புதுமைக்கான விருதுகல் 2016
நிறுவனத்தின் பெயர் வகை வெற்றியாளர்
John Deere India Private Limited ஆட்டோமொபைல் தங்கம்
Samsung C&T India Pvt Ltd கட்டுமானம் தங்கம்
M/S Afcons Infrastructure Ltd. கட்டுமானம் வெள்ளி
L&T Construction - Omkar 1973, worli கட்டுமானம் வெண்கலம்
Godrej & Boyce Mfg. Co. Ltd. -
Aerospace Division - Workman
Orignator தொழில்சார் பொருட்கள் தங்கம்
Godrej & Boyce Mfg. Co. Ltd. -
Security Solutions - Forklift
Innovation தொழில்சார் பொருட்கள் வெள்ளி
Godrej & Boyce Mfg. Co. Ltd. - Godrej
Interio Division தொழில்சார் பொருட்கள் வெண்கலம்
ICICI Bank Ltd. - Master Switch சேவைகள் தங்கம்
WNS Global Services (P) Ltd. சேவைகள் வெள்ளி
ICICI Bank Ltd. - Report a Safety
Incident சேவைகள் வெண்கலம்
Godrej & Boyce Mfg. Co. Ltd. -
Electricals & Electronics - Shutter
Gate Innovation Electronics - Shutter
Gate Innovation எஸ்எம்இ வெள்ளி
Godrej & Boyce Mfg. Co. Ltd. -
Electricals & Electronics - Shutter
Gate Innovation Electronics - PPE
Matrix எஸ்எம்இ வெண்கலம்
Adani Ports and Special
Economic Zone Ltd.,Mundra - Crane
Hook Shift Trolley Transport & ட்ரான்ஸ்போர்ட் &
Logistics Silver லாஜிஸ்டிக்ஸ் வெள்ளி
Adani Ports and Special Economic Zone
Ltd., Mundra - Slew Room Gate ட்ரான்ஸ்போர்ட் &
Modification லாஜிஸ்டிக்ஸ் வெண்கலம்
OSH INDIA BRAVERY AWARDS 2016 Organisation
நிறுவனம் நபரின் பெயர் வகை
Adani Ports and Special Economic Zone
Ltd. Radhe Chandra Mehta தங்கம்
Adani Ports and Special Economic Zone
Ltd. Arvind Yadav வெள்ளி
M/S Afcons Infrastructure Ltd. Amit Ninawe வெண்கலம்
OSH INDIA SPECIAL JURY AWARD 2016
ICICI Bank Ltd. - Itravel Safe App இட்ராவெல் சேவைகள்
UBM India- பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM Asia நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM Asia ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubmindia.in. என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani,
[email protected]
022-61727000
UBM India
Share this article