LeEco Le 2: இந்தியா நுகர்வோரால் மிக அதிகமாக விரும்பப்படும் சூப்பர்ஃபோன்
பெங்களூரு, November 29, 2016 /PRNewswire/ --
நேர்மறையான வாடிக்கையாளர் நற்சான்றிதழ்களே எந்தவொரு பிராண்டுக்கும் மிகவும் சக்திவாய்ந்த நம்பிக்கைச் சின்னங்களாகும், LeEco's Le 2-வுக்குக் கிடைத்துள்ள நேர்மறையான வாடிக்கையாளர் வரவேற்பு இந்த ஸ்மார்ட்ஃபோனின் பெரும் புகழை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த சூப்பர்ஃபோன் இந்தியாவில் ஒரு பிரகாசமாக அறிமுகம் செய்யப்பட்டது, அப்போதிலிருந்து அது இன்னும் வலிமையாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.
Le 2-வுக்கு LeMall மற்றும் Flipkart-ல் உயர்ந்த நுகர்வோர் மதிப்பீடு பெற்றுள்ளது, மேலும் 15,000 ரூபாய்க்கு குறைந்த ஃபோன்களின் வரிசையில் இது மிகவும் விருப்பமான சூப்பர்ஃபோனாக உருவாகியுள்ளது.
வடிவமைப்பு மற்றும் காட்சியமைப்பு - எந்தவொரு உயர் ரக ஸ்மார்ட்ஃபோனுடனும் எளிதில் போட்டியிடும் வகையிலாக அமைந்த Le 2-வின் வடிவமைப்பும் கட்டமைப்புமே அதன் சிறப்பம்சங்களாகும், அது, கண்ணைப்பறிக்கும் விதத்திலாக மட்டுமல்லாமல் திடமாகவும் இருக்கும் வகையிலான ஒரு முழு உலோக யுனிபாடி கொண்டுள்ளது. இந்த ஃபோன், ஒரு கையால் பயன்படுத்துவதற்கு எளிதான 5.5 அங்குல முழு எச்டி காட்சியமைப்பைக் அளிக்கிறது. LeEco-வின் இந்த இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோனின் எடை 153கி ஆகும், இது சராசரி 5.5 அங்குல ஸ்மார்ட் ஃபோன்களின் எடையை விட குறைந்ததாகும்.
வன்பொருள்/செயல்திறன்
Le 2 Qualcomm® Snapdragon™ 652 (MSM8976) பிராசசரால் இயக்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த பிராசசருக்கு ஆற்றலூட்ட 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உட்பொருத்தப்பட்ட சேமிப்பும் இணைந்து சீரான தடையற்ற செயல்பாட்டை உறுதிசெய்கிறது. இது ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய விரும்புபவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. இதில் இணைக்கப்பட்டிருக்கும் 3,000mAh பேட்டரி, மிதமான பயன்பாட்டாளர்களுக்கு எளிதாக ஒரு முழு நாள் நீடிக்கும்.
கேமரா
Le 2, 16MP பின்புற கேமரா மற்றும் 8எம்பி முன்புற கேமராவுடன் வருகிறது. பிடிஏஎஃப், கிலோஸ்ட் லூப் மற்றும் பல புதுமையான புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் போன்ற தொழில்நுட்பங்களால் பயனர்கள் நகர்ந்துகொண்டிருக்கும்போதும், சாதகமற்ற நிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கலாம்.
எதிர்கால பயன்பாட்டுறுதி
Le 2 எதிர்கால பயன்பாட்டுறுதி உள்ள சூப்பர்ஃபோன் ஆகும், அது இந்தியாவின் எல்லா 4ஜி பிராண்டுகளையும் ஆதரிக்கிறது. இதில் VoLTE திறனும் உள்ளது. இந்த இரண்டாம் தலைமுறை சூப்பர்ஃபோனில், LeEco 3.5 மிமீ ஆடியோ ஜேக்கை தவிர்த்து, யுஎஸ்பி டைப்-சி போர்டை வழங்கியுள்ளது. இந்த டைப்-சி போர்ட் ஒரு எதிர்கால பயன்பாட்டுறுதி தொழில்நுட்பமாகும், இதை பல பிராண்டுகள் தேர்ந்தெடுத்த உயர்தர ஃபோன்களுக்கே வழங்குகின்றன. இந்த சூப்பர்ஃபோன் நிறுவனத்தின் உரிமம், மற்றும் பயனர்கள் டிஜிட்டல் இழப்பில்லாத இசையை அனுபவிக்க உதவி செய்யும், உலகின் முதல் தொடர் டிஜிட்டல் இழப்பில்லா ஆடியோ(சிடிஎல்ஏ) தொழில்நுட்பத்தையும் பெருமையுடன் வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு/LeMall & Flipkart-ல் கிடைக்கிறது
LeEco பற்றி:
முதலில் Letv என்று அழைக்கப்பட்ட LeEco, உள்ளடக்கம், சாதனங்கள், செயலிகள் மற்றும் தளங்களில், பல இணைய அடிப்படையிலான சூழல்களைக் கொண்ட ஒரு சர்வதேச முன்னோடி இணைய மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும். நவம்பர் 2004-இல் YT Jia மற்றும் Hank Liu Hong -ஆல் நிறுவப்பட்ட LeEco, உலகெங்கிலும் 15,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த நிறுவனம், 11 மில்லியன் அமெரிக்க டாலர் பொது சந்தை முதலீடு செய்து உலகின் முதல் வீடியோ நிறுவனமாகும். பீஜிங் சைனாவிடம், சில்கான் வேலீ, யுஎஸ்-யிலும் தலைமைச் செயலகங்கள் உள்ள இந்த நிறுவனத்திற்கு, ஹாங்காங், இந்தியா மற்றும் ரஷியாவில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
'திருப்புமுனை தொழில்நுட்பம், விரிவான ஒருங்கிணைந்த சூழல் மற்றும் குறைவான விலை' என்பவற்றை வழிகாட்டும் குறிக்கோளாகக் கொண்ட LeEco, இணைய அடிப்படையிலான ஈகோடிவிக்கள் மற்றும் ஈகோஃபோன்கள், வீடியோ தயாரிப்பு மற்றும் விநியோகம், ஸ்மார்ட் சாதனங்கள்/பாகங்கள், செயலிகளிலிருந்து மின்வணிகம் மற்றும் இணைப்புள்ள சூப்பர் எலெக்ட்ரிக் கார் வரை, பல துறைகளில் வணிகம் செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனம், LeEco தயாரிப்புகளாகிய ஈகோஃபோன்கள், ஈகோடிவிக்கள் மற்றும் இன்னும் சில நாட்களில் இணைப்புள்ள எலெக்ட்ரிக் வாகனங்களிலும் வசதியாகப் பார்க்கும் வகையிலான, திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் இசை ஆகியவற்றை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய உள்ளடக்க லைப்ரரியையும் இயக்கி வருகிறது. தொழில்துறைகளின் எல்லைகளைத் தகர்த்து, LeEco, மிகக்குறைந்த விலையில், உயர்ந்த பயனர் அனுபவத்தைத் தரும் வகையில் தனிப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
ஊடகத் தொடர்பு:
Mridula Benjamin
[email protected]
+91-9886277984
Senior Executive - PR & Marcom
LeEco
Share this article