தம்பதிகளுக்கு உடல்பருமன் கருவுறுவதைத் தாமதமாக்கும்: நோவா ஃபெர்டிலிட்டி சென்டரின் ஆலோசகர்
கோயம்புத்தூர், இந்தியா, July 29, 2017 /PRNewswire/ --
திரு. ராமன் (34), அவரது மனைவி சங்கீதா (30) இருவரும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெறுவது குறித்து திட்டமிட்டனர். ஆறு மாதம் தாம்பத்தியத்திற்குப் பிறகும் கருத்தரிக்காதது குறித்து வியப்படைந்தனர். சங்கீதாவின் நெருங்கிய தோழி கருத்தரிப்பு சிகிச்சை நிபுணரைக் கலந்து ஆலோசிக்கும்படி யோசனை கூறினார். அதன்படி நோவா ஐவிஐ ஃபெர்டிலி சென்டரின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் லதாவிடம் சென்று ஆலோசனை கேட்டனர். ராமனின் உடலில் கொழுமியம் (lipid) அளவு பரிசோதிக்கப்பட்டது. அவர் ராமனும், சங்கீதாவும் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். அதையடுத்து சங்கீதாவின் உடல் சாதாரண நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால், ராமனின் விந்தணு எண்ணிக்கையும் அதன் திறனும் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதற்கு அவரது உடல் பருமன் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. ராமன், சங்கீதா ஆகியோரைப் போல பல பேருக்கு இந்த சிக்கல் கோயம்புத்தூரிலும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இந்தக் காலத்தில் பரவலாக இருக்கிறது. 2014-15 ஆம் ஆண்டுக்கான நான்காவது தேசிய குடும்பநல புள்ளிவிவரத்தின்படி உடல் பருமன் அளவு ஆண்கள், தமிழ்நாட்டில் பெண்களிடம் கடந்த பத்தாண்டுகளில் 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அந்தப் புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் 15 முதல் 49 வயது வரையிலானோரில் 30.9 சதவீதம் பெண்களும் 28.2 சதவீதம் பெண்களும் உடல் பருமன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது 2005-06 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 3ஆவது புள்ளி விவரத்தை விட மிகவும் அதிகமாகும். பெண்களிடையே 20.9 சதவீதமும் ஆண்களிடையே 14.5 சதவீதமும் அதிகம் காணப்படுகிறது.
கோவையில் உள்ள நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மையத்தின் (IVF) கருத்தரிப்பு ஆலோசகர் டாக்டர் வி. லதா கூறுகிறார்: "நோவா ஐவிஐ ஃபெர்டிலிடி மையத்திற்கு சிகிச்சைக்காக கடந்த ஓராண்டில் வந்தவர்களில் 30 முதல் 35 வயது வரையிலான இளம் தம்பதியரிடையே ஆண்களிடமோ பெண்களிடமோ அல்லது இருவரிடமோ உடல்பருமன் நிலை 22% இருப்பது தெரியவந்துள்ளது. உடல் நிறை குறியீட்டு (BMI) அளவு 25 என்பதை விட அதிகமாக இருக்கிறது. இது கருவுறும் வாய்ப்பைக் குறைக்கிறது. மறு உற்பத்திக்கான உதவிகளின் மூலம் அது சரிசெய்யப்படுகிறது.
உடல் பருமனும் கருவுற இயலாத தன்மையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. உடல் பருமனுள்ள பெண்களிடம், அதிக எடையுள்ள பெண்களிடமும் சினைமுட்டை வளர்ச்சி வெளியேற்றுவது முறையாக நடைபெறாது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதனால், கருவுறும் வாய்ப்புள்ள பருவத்திலேயே குழந்தைப் பேறு இயலாமல் போகிறது. உடல் பருமன் ஹார்மோன் பிரச்சினைகளையும்ஏற்படுத்தும், இதனால் கருவுறுதல் பாதிக்கப்படும். ஹார்மோன் பிரச்சினை கருப்பையில் இருந்து முட்டையை வெளியேற்றுவதையும் பாதிக்கும். அத்தகைய சமயத்தில் இன்சுலின் சுரப்பதையும் பாலிசிஸ்டிக் சினைப்பை நோய்க்குறியையும் (PCOS) பாதிக்கும். ஆண்களுக்கு உடல் பருமன் விந்தணு எண்ணிக்கை குறைய வழி வகுக்கும். ஆண்கள் சதை போட்டால் ஆண்மைஇயக்குநீர் எனப்படும் ஒருவித ஹார்மோனுக்கு பாதிப்பு நேரும். விதைப்பைத் தூண்டுதல், விந்தணு உற்பத்தி ஆகியவையும்குறையும்" என்றார்.
"அப்படியே கருத்தரித்தாலும், ஹார்மோன் பிரச்சினை காரணமாகவும் இதர பிரச்சினைகளாலும் கருச்சிதைவு நேரும் அபாயம் உண்டு. அதனால், எங்களது நோயாளிகள் சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிடும்படியும் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் அறிவுறுத்துகிறோம். இதனால், ஆரோக்கியமான உடல்நிலையை அவர்கள் பெறுவர். கருத்தரிப்பதும் சுமுகமாகும். எடைக் குறைப்பு எப்போதுமே நல்லது. இது கருத்தரிப்பை அதிகரிக்கும். எந்த வயதிலும் கருத்தரிக்க இயலும். IUI அல்லது ICSI போன்ற In-vitro fertilisation (IVF) சிகிச்சை முறைகளுக்கு முன்பாக எடையைக் குறைக்கும்படி ஆலோசனை கூறுகிறோம். அவர்கள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளும் அதிக எடையின்றி வளர்வதை உறுதி செய்யும்படி அறிவுறுத்துகிறோம்" என்றார் டாக்டர் லதா.
எடையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது இதர ஆபத்தான நோய்களைத் தவிர்ப்பது மட்டுமின்றி, கருத்தரிக்கும் திறனையும் பாதுக்காக்கும். எனவே, ஆண்களும் பெண்களும் சில குறிப்பிட்ட முறையான உடற்பயிர்சியுடன் சமவிகிதமான உணவை எடுத்துக் கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது அவசியம். அதுதான் ஆரோக்கியமான பெற்றோர்களாக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும்.
நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மையம் குறித்து..
கருத்தரிப்பு மருத்துவத்தில் நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மையம் (Nova IVI Fertility - NIF) மிகப்பெரிய சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஐவிஐ (IVI) மையத்தின் துணையுடன் இந்தியாவில் இனப்பெருக்க தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சேவையை (ART) அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த பங்களிப்பு மூலம் நோவா ஐவிஎப் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத்திற்குத் தேவையான சாஃப்ட்வேர், பயிற்சி, தர மேலாண்மை ஆகிய சேவைகளில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஸ்பெயின் மருத்துவ சேவை நிறுவனத்தின் தொழி்ல்நுட்பம், சர்வதேச அளவிலான நிபுணத்துவம் ஆகிய உதவிகள் கிடைத்துள்ளன. நோவா நிறுவனமும் அதே தரம், சேவைகள், நடைமுறை, கொள்கைகளை இந்தியாவில் வழங்கும் நிறுவனமாகத் திகழ்கிறது.
இது தவிர, ஐயுஐ, ஐவிஎஃப் மற்றும் நோயியியல் (Andrology) ஆகிய சேவைகளுடன் கருக்களையும் (embryos) கரு முட்டைகளையும் சேமித்துப் பாதுகாப்பதுடன் கருக்களைக் கருப்பை ஏற்பதற்கான காலத்தைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பம் கொண்டு, அனைத்து உயர்ந்த வசதிகளையும் கொண்டதாக நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டி மையம் (Nova IVI Fertility - NIF) மிகச் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டி மையம் (Nova IVI Fertility - NIF) ஆமதாபாத் (2 மையங்கள்), பெங்களூர் (3 மையங்கள்), மும்பை (2 மையங்கள்), தில்லி (2 மையங்கள்), சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், ஹிஸார், இந்தூர், ஜலந்தர், கோல்கத்தா, புனே மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் இயங்கி சேவை அளித்து வருகிறது.
Media Contact :
Raghavi R
Assistant Manager
PR, Nova IVI Fertility
[email protected]
+91-80-67680615
Share this article