டிஜிட்டல் யுகத்தில், நிபுணர்களுக்கான மேம்பட்ட மேலாண்மை கணக்கியல் தகுதி கட்டமைப்பை IMA வெளியிடுகிறது
பெங்களூரு மற்றும் MONTVALE, New Jersey, February 12, 2019 /PRNewswire/ --
IMA® (Institute of Management Accountants) தனது மேம்படுத்தப்பட்ட Management Accounting Competency Frameworkஐ வெளியிட்டுள்ளது. மேலாண்மை கணக்கியலாளர்களுக்கு பொருத்தமானதாகவும் எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதற்கும் தேவைப்படும் திறன்களை புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு பிரதிபலிக்கிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு, விரைவாக மாறும் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப சூழல் ஆகியவற்றுடன் இணைந்து செல்கிறது மேலும் திறன் மதிப்பீடு, தொழில்வளர்ச்சி, மற்றும் செயல்திறன் மேலாண்மை ஆகியவற்றுக்கான தொழில் வழிகாட்டியாக செயல்படுகிறது. மேலாண்மை கணக்கியலாளர்களின் பங்கை மறுவரையறை செய்யும் தொழில்நுட்பத்துடன், குறிப்பாக மாறிவரும் வர்த்தக எல்லைகள் மற்றும் கணிக்க இயலாத வேகத்தில் இருக்கும் மேலாண்மை கணக்கியல் தொழிலுடனும் இணையும்படி IMA கட்டமைப்பை இந்த மாற்றங்களுடன் புதுப்பித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளால் இயக்கப்படும் IMA யின் உள்ளடக்க உரிமையாளர்களிடையே குறிப்பிட்ட விதத்தில் உள்ள கூட்டிணைவால் இந்த கட்டமைப்பு உருவானது.
'IMAல், நிதியியல் மற்றும் கணக்கியல் தொழிலுக்கான கடினமான போட்டிகளை கண்டறிந்து வெளியிடுவதில் தொழில்துறையில் முன்னணியில் இருப்பதற்கு நாங்கள் மகிழ்கிறோம்' , இவ்வாறு CMA, CSCA, CAE, தலைவர் மற்றும் IMA யின் CEO, Jeff Thomson கூறினார். 'தகுதி கட்டமைப்பை புதுப்பிப்பதற்காக நாங்கள் இன்றைய மேலாண்மை கணக்கியலாளர்களுக்கு தேவைப்படும் பழைய மற்றும் புதிய தகுதிகளை ஆராய்ந்தோம். இந்த வேலை துல்லியமாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த தொழில் நிபுணர்களால் முற்றிலும் சரிபார்க்கப்பட்டது.'
டிஜிட்டல் யுகத்தில் நீடித்திருக்க நிதியியல் மற்றும் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தேவையான மூல அறிவு , திறன்கள் மற்றும் திறமைகளின் ஆறு தளங்களை கட்டமைப்பு கண்டறிந்துள்ளது மேலும் CMA® (Certified Management Accountant) நற்சான்று பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள தற்போதைய மற்றும் எதிர்கால பாத்திரங்களை திறம்பட செய்யும் பல்வேறு திறன்களையும் கண்டறிந்துள்ளது. தகுதிகளை விரிவான அளவில் பிரதிபலிக்கும் வகையில் சில தளங்களுக்கு மறுபெயரளிக்கப்பட்டுள்ளது:
- மூலோபாயம், திட்டமிடல் மற்றும் செயல்திறன் - மூலோபாய திட்டமிடல் செயல்திறன், வியாபாரத்தின் தற்போதைய நிலையை மதிப்பிடுதல் மற்றும் எதிர்காலத்திற்காக திட்டமிடுதல் ஆகியவற்றில் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தளத்தின் எட்டு தகுதிகள் வழிகாட்டுகின்றன.
- அறிக்கையிடல் மற்றும் கட்டுப்பாடு - சம்பந்தப்பட்ட தரநிலைகள் மற்றும் கடமைகளுடன் இணக்கமான விதத்தில் தங்கள் நிறுவனத்தின் செயல்திறனை அளவிட மற்றும் அறிக்கையிட தளத்தின் ஏழு தகுதிகள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு கருவிகளை வழங்குகிறது.
- தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வு - நிறுவனத்தின் பகுப்பாய்தலை விரிவு செய்ய மற்றும் நிறுவனத்தை முன்னேற்ற தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை காட்ட, எவ்வாறு தரவு வேலை செய்யலாம் என்பதை தளத்தின் நான்கு தகுதிகள் காட்டுகின்றன.
- வியாபார புத்திக்கூர்மை மற்றும் செயல்பாடுகள் - நிறுவனம் முழுவதும் செயல்பாடுகளை மாற்றுவதற்காக குறுக்கு-செயல்பாட்டுடன் வணிகத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை தளத்தின் நான்கு திறமைகள் காண்பிக்கின்றனதலைமை - தொழில்நுட்ப வல்லுநர்கள் ,தலைவர்களாக மாறுவதற்கும் தங்கள் குழுக்கள் அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிறுவன குறிக்கோள்களை அடைய வழிகாட்டவும் தளத்தின் ஏழு தகுதிகள் உதவுகின்றன.
- தொழில்நுட்ப நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள் - புதிய டொமைன் மற்றும் அதன் மூன்று தகுதிகள் தனிநபர்கள் தங்கள் வேலைவாய்ப்புகள் மற்றும் தங்கள் வியாபாரம் நெறிமுறைக்கு உட்பட்டதாகவும் நிலையானதாகவும் இருக்க , தங்கள் தொழில்நுட்ப மதிப்புகள், நெறிமுறை பழக்க வழக்கங்கள் மற்றும் சட்டரீதியான இணக்கம் ஆகியவற்றை செயல்படுத்திட கூறுகிறது.
'மேலாண்மை கணக்கியலாளர்களுக்கு தங்களது பணிகளை செய்ய முறையான திறன்கள் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அவர்கள் முக்கிய மதிப்புகளுடன் நெறிமுறை வழிகளில் தங்கள் பணிகளை செய்ய வேண்டியதும் கூட மிகவும் முக்கியமானது எனவே தான் தொழில்துறை நெறிமுறை மற்றும் மதிப்புகள் தளம், தகுதி கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது,' என்று CAE, CPLP, IMA இல் கல்வி மற்றும் தொழில் சேவைகள் துணை தலைவர், Debbie Warner கூறினார்.
மேலாண்மை கணக்கியலாளர்களுக்கு தேவைப்படும் தகுதிகளை IMA ஆராய்ந்தது மேலும் விரிவுபடுத்தப்பட்ட மேலாண்மை கணக்கியல் தகுதி கட்டமைப்பின் வரைவு அறிக்கையை மேம்படுத்தியது. மேம்படுத்தப்பட்ட தகுதி கட்டமைப்பு ஜூன் முதல் செப்டம்பர் 2018 வரை பொது விமர்சனத்திற்கு கிடைத்தது மேலும் அனைத்து பின்னூட்டங்களையும் மறுமதிப்பீடு செய்த பிறகு, IMA புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பின் முழு பதிப்பை வெளியிட்டது. தொழிலில்- திறன்கள் மதிப்பீடு,தொழில்துறை மேம்பாடு மற்றும் திறன் மேலாண்மை ஆகியவற்றுக்கான வழிகாட்டியாக கட்டமைப்பு அதன் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகம் தெரிந்து கொள்ள தயவுசெய்து வருகை தரவும் http://www.imanet.org/framework.
IMA® (Institute of Management Accountants) பற்றி
Accountant/International Accounting Bulletin ஆல் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் Professional Body of the Year ஆக பெயரிடப்பட்ட IMA®, மேலாண்மை கணக்கியல் தொழிலின் முன்னேற்றத்தின் மீது பிரத்தியேக கவனம் கொண்டுள்ள மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். உலகளவில் IMA, ஆராய்ச்சி, the CMA® (Certified Management Accountant) புரோகிராம், தொடர்கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் உயர்ந்த நெறிமுறை வணிக பயிற்சிகளுக்கு துணை வலிமை கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் தொழிலுக்கு ஆதரவு தருகிறது. 140 நாடுகளில் 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர் சேப்டர்கள் கொண்ட உலகளாவிய நெட்வொர்க்கை IMA கொண்டுள்ளது. IMA தனது நான்கு உலக பிராந்தியங்களின் மூலமாக உள்ளூர் மயமாக்கப்பட்ட சேவைகளை அளிக்கும் அதன் தலைமையகம் Montvale, N.J., USA ல் உள்ளது. நான்கு பிராந்தியங்கள்- The Americas, Asia/Pacific, Europe, and Middle East/India ஆகும். IMA பற்றிய கூடுதல் தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் http://www.imanet.org.
Share this article