Whirlpool அறிமுகப்படுத்துகிறது Lapis Grandé - கண்ணாடிக் கதவு ஃப்ரிட்ஜ்களின் பிரீமிய தயாரிப்புகள்: இயற்கையால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு மூலம் நவீன வீட்டு ஃப்ரிட்ஜ்களை மாற்றியமைக்கிறது
இயற்கை & கற்களின் காலத்தால் அழியாத நேர்த்தியால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகள்
புதுடெல்லி, May 15, 2025 /PRNewswire/ -- Whirlpool Corporation நிறுவனத்தின் துணை நிறுவனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் முன்னோடி நிறுவனமான Whirlpool of India, Lapis Grandé தயாரிப்புகளை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது - இது காலத்தால் அழியாத இயற்கை அழகியலை Whirlpool நிறுவனத்தின் சிறந்த-இன்-கிளாஸ் குளிரூட்டும் தொழில்நுட்பங்களுடன் கலக்கும் ஓர் அற்புதமான புதிய கண்ணாடிக் கதவு ஃப்ரிட்ஜ்கள்.
பூமியின் இயற்கை கற்கள் மற்றும் பொருட்களின் காலத்தால் அழியாத நேர்த்தியால் ஈர்க்கப்பட்டு, Lapis Grandé தயாரிப்புகள் இரண்டு உலகின் ஆடம்பரமான கலவையாகும். அது இயற்கையின் சக்திகளை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது.
அறிமுக விழாவில் பேசிய, திரு. நகுல் திவாரி, Whirlpool of India நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையின் துணைத் தலைவர், பின்வருமாறு தெரிவித்தார்: "Lapis Grandé -இன் அறிமுகத்துடன், நாங்கள் செயல்பாட்டைத் தாண்டி, நவீன இந்தியச் சமையலறைக்கான ஒரு பாணி அறிக்கையாக ஃப்ரிட்ஜை மறு வடிவமைத்துள்ளோம். இயற்கையின் கலைத்திறனை Whirlpool நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம், இந்த தயாரிப்புகள் ஆடம்பரமான மற்றும் ஆழமான உள்ளுணர்வு அனுபவத்தை வழங்குகிறது."
இரண்டு வேறுபட்ட மேற்பூச்சுகள், இரண்டு தனித்துவமான வடிவமைப்புகள்
- கேவ்ஸ்டோன் - எரிமலை சக்திகளால் உருவாக்கப்பட்ட இந்த பூச்சு, பண்டைய கால கல்லின் கரடுமுரடான வலிமை மற்றும் அமைப்பை வழங்குகிறது. அதன் கம்பீர தோற்றம் மாற்றத்தையும் காலத்தால் அழியாத வசீகரத்தின் கதையையும் சொல்கிறது.
- ஜேட் மார்பிள் - பளிங்கின் இயற்கையான நுட்பத்திற்கும் ஜேடின் அமைதியான வண்ணங்களுக்கும் ஒரு நற்சான்று, அதன் பாயும் நரம்புகள் வலிமையையும் அமைதியையும் பிரதிபலிக்கின்றன, ஒவ்வொரு ஃப்ரிட்ஜ்ஜையும் தனித்துவமான பொருளாக மாற்றுகின்றன.
கேவ்ஸ்டோன் மற்றும் ஜேட் மார்பிள் வடிவமைப்புகள் இரண்டும் சுத்தம் செய்வதற்கு எளிதான கண்ணாடியைக் கொண்டுள்ளன, குறைந்தபட்ச பராமரிப்பில் நீடித்த அழகை வழங்குகின்றன.
Lapis Grandé தயாரிப்புகளின் கேவ்ஸ்டோன் மற்றும் ஜேட் மார்பிள் மேற்பூச்சுகள் இயற்கை கூறுகளின் மூல அழகை சமையலறைக்குள் கொண்டு வந்து, அதிநவீனத்தின் மையப் புள்ளியை உருவாக்குகின்றன. இந்த தனித்துவமான வடிவமைப்புகள் ஃப்ரிட்ஜ்ஜை உபகரணத்திலிருந்து நவீன வீட்டு உட்புறங்களை நிறைவு செய்யும் ஓர் ஆடம்பரமான ஸ்டேட்மென்ட் துண்டாக மாற்றுகின்றன.
இந்த பிரீமியம் அழகியல் அம்சங்கள் Whirlpool நிறுவனத்தின் தனியுரிம கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன, உள்ளுணர்வு வசதியுடன் சக்திவாய்ந்த செயல்திறனை வழங்குகின்றன:
Lapis Grandé தயாரிப்புகளின் சிறப்பு அம்சங்கள்:
- அழகிய கண்ணாடிக் கதவு: கீறல் ஏற்படாது, சுத்தம் செய்வதற்கு எளிதான கண்ணாடிக் கதவுகள், இயற்கையால் ஈர்க்கப்பட்ட மேற்பூச்சுகளுடன், எந்த நவீன சமையலறையையும் அழகுபடுத்துகின்றன
- இந்தியாவின் வேகமான கன்வர்டபில் ஃப்ரிட்ஜ்: ஃப்ரீசரிலிருந்து ஃப்ரிட்ஜ்ஜூக்கு 10 நிமிடத்தில் மாற்றலாம்
- 10-இன் -1 கன்வர்டபில் மோட்கள்
- மைக்ரோபிளாக் தொழில்நுட்பத்துடன் 99% வரை பாக்டீரியா உற்பத்தியைக் குறைக்கிறது
- 6வது சென்ஸ் நியூட்ரிலாக் தொழில்நுட்பத்துடன் 2x வரை வைட்டமின் பாதுகாக்கப்படுகிறது
Lapis Grandé கண்ணாடிக் கதவு ஃப்ரிட்ஜ்கள் 327L & 308L -இல் கிடைக்கும், மேலும் ஆரம்ப விலை ரூ. 40,500. இந்த தயாரிப்புகள் அனைத்து முன்னணி ரீடைல் கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கும்.
Lapis Grandé தயாரிப்புகளை www.whirlpoolindia.com -இல் பார்வையிடவும்.
Whirlpool India நிறுவனம் ஓர் அறிமுகம்:
Whirlpool of India Limited நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குருகிராமில் இருக்கிறது, இந்த நிறுவனம் இப்போது நாட்டின் முக்கிய வீட்டு உபகரணங்களின் முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்திற்கு ஃபரிதாபாத், பாண்டிச்சேரி மற்றும் புனேவில் மூன்று அதிநவீன உற்பத்தி வசதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு உற்பத்தி வசதியும் ஒரு உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது, அது Whirlpool நிறுவனத்தின் நுகர்வோருக்கு எதிர்காலத் தீர்வுகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டிற்கு சான்றாகும்.
நிறுவனத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை Twitter மற்றும் Facebook -இல் @whirlpool_india -இல் காணலாம்
Whirlpool India நிறுவனத்தை Twitter & Facebook -இல் பின்தொடரவும்: @whirlpool_india
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/2686048/Whirlpool_Image_Jewels_of_earth.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/2686049/Whirlpool__Logo.jpg

Share this article