Cosmoprof India 2020 கண்காட்சி வரும் 29 - 31 அக்டோபர் 2020-க்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது
MUMBAI, March 25, 2020 /PRNewswire/ -- Cosmoprof India Show-வின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான BolognaFiere Group S.p.A மற்றும் Informa Markets ஆகியவை இணைந்து 2020-கான கண்காட்சியை Bombay Convention and Exhibition Centre-ல் வரும் அக்டோபர் 29-31, 2020-ல் நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்தக் கண்காட்சி ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 2 முதல் 4-வரை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
BolognaFiere Group-ன் பிரசிடென்ட்டான Mr Gianpiero Calzolari இதுபற்றிப் பேசும்போது, "கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுப் பரவல் காரணமாக உலகளாவிய அளவில் அனைத்து முக்கிய வர்த்தகக் கண்காட்சிகளுமே வேறு தேதிகளுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன என்பதால் எங்களுடைய கண்காட்சி நடைபெறும் நாட்களையும் மாற்றியமைக்க வேண்டியதாயிற்று. Informa Markets-உடன் சேர்ந்து எம்முடைய கண்காட்சியாளர்கள் மற்றும் வாங்குபவர்களின் தொழில் தேவைகளைக் கவனத்தில் கொள்ளுவதற்காக சூழலை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றார்.
Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras பேசும்போது, "இந்த நிகழ்ச்சியை தள்ளிப்போடும் முடிவு கடினமானதாக இருந்தாலும் அசியவமானது. COVID-19 உலக அளவில் கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு குழப்பமான மற்றும் தொடர்ந்து மாறிவரும் சூழலை ஏற்படுத்தி வருகிறது. எம்முடைய வாடிக்கையாளர்கள், கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனில் நாங்கள் சளைக்காமல் கவனம் செலுத்தி வருவதால், சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பி நம்பிக்கை ஏற்படுவதற்கு இந்த புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தேதிகள் உதவும் என்றும், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கண்காட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல உகந்த சூழல் கிடைக்கும் என்றும் பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதிக்கும் என்றும் நம்புகிறோம். கடந்த காலங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அழகுக்கலை சமூகத்திற்கு 360° பிளாட்ஃபார்மாக இருந்துவந்த Cosmoprof India கண்காட்சியிலிருந்து நம்முடைய பங்குரிமையாளர்கள் பெற்ற அதே சிறந்த அனுபவத்தையும் தொழிலையும் இப்போதும் பெறுவதை இது உறுதி செய்யும்" என்றார்.
மாறிவரும் சூழலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள், உரிய உள்ளூர் அரசு அமைப்புகள், தொழில்துறை மற்றும் பிற முக்கிய பங்குரிமையாளர்களிடம் நெருக்கமாகத் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வட்டாரத்தில் அழகுக்கலை சமூகத்திற்கு ஒரு மேம்பட்ட வர்த்தக அனுபவத்தை அளிப்பதுதான் எமது இலக்காக உள்ளது.
2018-ல் ஒரு சிறப்பு 'முன்னோட்டமாக' தொடங்கப்பட்ட இந்த Cosmoprof India கண்காட்சி 2019-ல் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுத்தந்தது. இதில் 23 நாடுகளிலிருந்து 237 நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொண்டனர், 48 நாடுகளிலிருந்து 7,429 பார்வையாளர்கள் கண்காட்சியைக் கண்டு களித்தனர். Cosmoprof India கண்காட்சியுடன் அக்டோபரில் நடத்தப்படவிருக்கும் Personal Care Ingredients & Lab இந்தத் துறைக்கு ஒரு மிக புதுமையான விஷயமாக அமையும். வாசனைதிரவியங்கள் மற்றும் காஸ்மெட்டிக்ஸ், அத்தியாவசிய ஆயில்கள், ஆய்வக பொருட்கள், சாதனங்கள், ஃபர்னிச்சர்கள், பரிசோதனை கரைசல்கள் என பல இத்துறைக்கு உதவியாக அமையும். இந்த கூட்டு நிகழ்வு காரணமாக, Cosmoprof India கண்காட்சியில் கலந்துகொள்ளும் கண்காட்சியாளர்களும் ஆப்பரேட்டர்களும் தங்களுடைய தொழிலை மேம்படுத்த புதிய கருவிகளைக் கண்டறியும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு https://cosmoprofindia.com/ என்ற எமது வலைதளத்தைப் பார்க்கவும்
Cosmoprof India பற்றி(https://cosmoprofindia.com/)
Cosmoprof India என்பது மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் உள்ள அழகுச் சந்தைக்கான பிஸனஸ் டு பிஸினஸ் நிகழ்ச்சியாகும். சர்வதேச அழகுசார் சமூகத்திற்கான 360° உலகளாவிய தளமான Cosmoprof-ன் நான்காவது முக்கிய தளரமாக உள்ளது. Bologna, Las Vegas, Hong Kong மற்றும் Bangkok ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து 500,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்களையும் 10,000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களையும் இணைக்கிறது. உலகளாவிய Cosmoprof பிராண்டிலிருந்து தழுவி அமைக்கப்பட்ட Cosmoprof India தன்னுடைய தனித்த அடையாளத்தைக் கொண்டுள்ளது. Cosmoprof India கண்காட்சியானது Informa Markets in India மற்றும் BolognaFiere Group S.p.A-வினால் இணைந்து நடத்தப்படுகிறது.
BolognaFiere Cosmoprof SpA பற்றி
BolognaFiere group-ன் ஒரு துணை அமைப்பான BolognaFiere Cosmoprof உலகம் முழுவதற்குமே Cosmoprof ஃபார்மாட்டை அறிமுகம் செய்திருக்கிறது. Bologna, Las Vegas, Mumbai, மற்றும் Hong Kong ஆகிய இடங்களில் நடத்தப்படும் Cosmoprof பிராண்டு நிகழ்வுகளோடு (Cosmoprof Worldwide Bologna, Cosmoprof North America, Cosmoprof India, மற்றும் Cosmoprof Asia ஆகிய அமைப்புகளின் துணையோடு நடத்தப்படுகின்றன) தென்-கிழக்கு ஆசியாவில் உள்ள அழகுக்கலைத் துறையின்மீது கவனம் செலுத்தும் விதத்தில் Thailand-ல் உள்ள Bangkok-ல் BolognaFiere group தனது முதலாவது Cosmoprof CBE ASEAN 2020-ஐ நடத்த இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. 2020-ல், சீனாவில் உள்ள தொழில்முறை துறையின்மீது கவனம் செலுத்தும் விதத்தில் முதலாவது South China Beauty Expo-வை நடத்தவிருக்கிறது.
அழகுத் துறையின் வளர்ச்சிக்கு யுத்திசார் சந்தைகளில் அழகுசார் உலகிற்கான நிகழ்ச்சிகளை நடத்துவதில் சர்வதேச விற்பனை முகவராக BolognaFiere Cosmoprof செயலாற்றி வருகிறது. குறிப்பாக South America மற்றும் Asia-வின்மீது கவனம் செலுத்துகிறது அவற்றுள், Colombia-வில் Belleza y Salud, Corferias, மற்றும் Brazil-ல் உள்ள முடிகள் துறையில் தொழில்முறை ஆப்பரேட்டர்களாகவும் உள்ளூர் விநியோகிப்பாளர்களாகவும் உள்ள Beauty Fair - Feira International de Beleza Profissional Sao Paulo ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றுகிறது.
வளர்ந்து வரும் சந்தைகளில் குறிப்பாக கவனம் செலுத்தி வரும் மாதங்களில் புதிய திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
ஊடகத் தொடர்பு:
ஆசியா: Informa Markets
Ms. Roshni Mitra
தொ.பேசி: +91-7506183888
[email protected]
Ms. Mili Lalwani
தொ.பேசி: +91-9833279461
+91- 22-61727000
[email protected]
உலகளாவிய: BolognaFiere Cosmoprof Spa:
Mr. Paolo Landi
தொ.பேசி: +39-02-45-47-08-320
[email protected]
Ms. Arianna Rizzi
தொ.பேசி: +39-02-45-47-08-253
[email protected]
எங்களைப் பின்தொடர! www.cosmoprofindia.com l Facebook l LinkedIn l Instagram
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1136559/BolognaFiere.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1136560/Cosmoprof_India.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article