Cosmoprof India-வின் Signature Event அழகுத் துறைக்கான ஒரு தனித்துவமான B2B கண்காட்சி - 22-23 பிப்ரவரி 2021-ல் மும்பையில் நடைபெற உள்ளது
மும்பை, இந்தியா, Nov. 25, 2020 /PRNewswire/ -- அழகு மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சந்தைக்கான Cosmoprof network-ன் நிகழ்வான Cosmoprof India எனப்படும் உண்மையான மற்றும் மெய்நிகர் சேவைகளின் ஒரு தனித்துவமான சேர்க்கையான Signature Event - a b2b வர்த்தகக் கண்காட்சியை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. BolognaFiere மற்றும் Informa Markets ஒருங்கிணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள Hotel Sahara Star-ல் வரும் 22-23 பிப்ரவரி 2021-ல் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
தயாரிப்புகளை வெளிக்கொண்டு வரவும், பிராண்டுகள் மற்றும் சப்ளையர்களுடன் தொடர்பு கொள்ளவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கிணங்க இந்தியாவில் அழகுத் துறையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த 'phygital' நிகழ்வு மிகவும் பொருத்தமான தளமாக இருக்கும். சீராக்கப்பட்ட தயாரிப்புகள் தொடங்கி சப்ளை செயின்வரை அழகுத் துறையின் அனைத்துப் பிரிவுகளும் இதில் பங்கேற்பார்கள் - காஸ்மெட்டிக்ஸ் & டாய்லெட்டரீஸ், பியூட்டி சாலன், ஹேர் சாலன், நெய்ல் & அக்சஸரீஸ், நேச்சுரல் & ஆர்கானிக், கச்சாப்பொருட்கள் & உட்பொருட்கள், எந்திரங்கள் & சாதனங்கள், பேக்கேஜிங், கான்ட்ராக்ட் மேனுஃபேக்சரிங் மற்றும் தனியார் லேபிள்.
வாங்குபவர்கள், இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள், தயாரிப்பின் தயாரிப்பாளர்கள், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்கள், சில்லறை வர்த்தகர்கள் மற்றும் இ-டெய்லர்கள், மருந்து செய்ன்கள் மற்றும் சான்செப்ட் ஸ்டோர்கள் போன்றவர்களுக்கு இந்த Signature Event ஒரு அருமையான தொழில் வாய்ப்பாக அமையும். கண்காட்சியின்போது கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களுடன் தொடர்புகொள்ள சிறப்பு டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படும். Sahara Star Hotel-க்கு வந்து கண்காட்சியைப் பார்வையிட இயலாத சர்வதேச பங்குரிமையாளர்களால் கண்காட்சியாளர்களுடனும், கண்காட்சித் தளத்தில் உள்ள சந்தை நிபுணர்களுடனும் தொடர்புகொண்டு பேச முடியும். Cosmoprof India MyMatch நேரடிக் கலந்துரையாடல்களுக்கு உதவும், Connect என்பது ஆன்-சைட் ஸ்பீடு டேட் தொழில் சந்திப்புகளுக்கு உதவும்.
நிகழ்ச்சியின்போது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அமர்வுகளில் உலகின் அழகுத்துறைத் தலைவர்களின் முக்கிய அறிவிப்புகளையும், யோசனைகளையும் பெற முன்வரிசை இருக்கையை Cosmotalks அளிக்கும். நேரடி செயல்விளக்கங்களுக்கும், தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கும் Cosmo Onstage உதவும்.
இந்தியச் சந்தையில் புதியவற்றைப் பார்வையாளர்களுக்குக் காட்டுவதற்காக எல்லா கண்காட்சியாளர்களின் புதுமையான தயாரிப்புகளும் Cosmotrends அறிக்கையில் இடம் பெறும்: புதிய பாணிகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க பகுப்பாய்வாக இது இருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இது கிடைக்கும்.
இந்திய அழகுச் சந்தைக்கு அளப்பரிய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன, கடந்த ஐந்து ஆண்டுகளில் அழகுப் பொருட்களின் நுகர்வு 60% உயர்ந்திருக்கிறது. எனவே, சர்வதேச மற்றும் உள்நாட்டு பிராண்டுகள் கடுமையாகப் போட்டியிடும் இடமாகவும் வாய்ப்பாகவும் மாறியிருக்கிறது. இறுதியாக அடுத்த Cosmoprof India கண்காட்சிக்காக மும்பையில் அனைத்து பங்குரிமையாளர்களும் கூடும் வேளையில் ஆப்பரேட்டர்களும் நிறுவனங்களும் புதிய சந்தைப் பாணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த Signature event உதவும். கூடுதல் விவரங்களுக்கு https://cosmoprofindia.com/signature-event என்ற எமது வலைதளத்தைப் பார்க்கவும்
BolognaFiere Group பற்றி ( www.bolognafiere.it )
BolognaFiere Group என்பது அழகுசாதனப் பொருட்கள், அழகுநயப்புக் காட்சிகள், கட்டடக்கலை, கட்டுமானம், கலை மற்றும் கலாச்சார வர்த்தகக் கண்காட்சிகளை நடத்தும் உலகின் முன்னணி அமைப்பாகும். உலகின் மிக மேம்பட்ட கண்காட்சி மையங்களுள் ஒன்று இருப்பது இதன் பெருமையளிக்கும் அம்சமாகும். BolognaFiere Group மூன்று கண்காட்சி மையங்களை (Bologna, Modena, மற்றும் Ferrara) நடத்தி வருகிறது. இத்தாலியிலும் வெளிநாடுகளிலும் 80-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்துகிறது. BolognaFiere Group-ல் பல நிறுவனங்கள் இணைந்துள்ளன. பல நிகழ்ச்சி சேவைகளை வழங்கி வருகிறது. தன்னுடைய கண்காட்சிகளில் வெற்றிகரமாகப் பங்கேற்கத் தேவையான எல்லா சிறப்பு சேவைகளையும் விளம்பர நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
BolognaFiere Cosmoprof பற்றி ( www.cosmoprof.com )
BolognaFiere Cosmoprof என்பது BolognaFiere Group-ன் ஒரு அங்கமாக Cosmoprof Worldwide Bologna-வை நடத்திவருகிறது. Cosmoprof Worldwide Bologna என்பது 1967-ல் நிறுவப்பட்டு இத்தாலியின் Bologna-வில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் உலகின் அழகு தொழில்முறையாளர்கள் கூடும் ஒரு மிக முக்கியமான சந்திப்புத் தளமாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட Cosmoprof-ல் 265.000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உலகெங்குமிருந்து 150 நாடுகளிலிருந்து கலந்துகொண்டார்கள். முந்தைய ஆண்டுகளைவிட 10% அதிகமாக வெளிநாட்டினர் கலந்துகொண்டனர், 3,033 கண்காட்சியாளர்கள் 70 நாடுகளிலிருந்து கலந்துகொண்டனர். Cosmoprof உலகெங்கும் நடத்தப்பட்டு வருகிறது. Bologna, Las Vegas, Mumbai, மற்றும் Hong Kong, China போன்ற பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது (Cosmoprof Worldwide Bologna, Cosmoprof North America, Cosmoprof India, மற்றும் Cosmoprof Asia இவற்றை ஏற்பாடு செய்கின்றன). சமீபத்தில் நெட்வொர்க்கின் ஐந்தாவது கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது: தாய்லாந்தில் நடத்தப்படவிருக்கும் Cosmoprof CBE ASEAN தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அழகூட்டும் பொருட்கள் துறையின்மீது கவனம் செலுத்தும். Cosmoprof தளம் தென் அமெரிக்காவில் German group Health and Beauty-யினை வாங்கியிருப்பதால் ஐரோப்பாவில் தன்னுடைய தாக்கத்தை வலுப்படுத்தும். Beauty Fair -Feira Internacional De Beleza Profissional-யின் கூட்டு முயற்சிக்கு நன்றி.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு
ஆசியா: Informa Markets India Pvt Ltd
செல்வி. Roshni Mitra
தொ.பேசி: +91-7506183888
[email protected]
செல்வி. Mili Lalwani
தொ.பெசி: +91-9833279461
[email protected]
உலகளாவிய: BolognaFiere Cosmoprof Spa
திரு. Paolo Landi
தொ.பேசி: +39-02-45-47-08-320
[email protected]
செல்வி. Arianna Rizzi
தொ.பேசி: +39-02-45-47-08-253
[email protected]
எங்களைப் பின்தொடர: www.cosmoprofindia.com l Facebook l LinkedIn l Instagram
லோகோ: https://mma.prnewswire.com/media/1341683/BolognaFiere_Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1341684/Cosmoprof_India.jpg
Share this article