IICMA தேசிய ஐஸ்-கிரீம் தினத்தன்று ஸ்கூப் நிறை மகிழச்சியைப் பெற வாழ்த்துவதோடு கட்டுக்கதைகளை ஒழித்தொழிக்க விரும்புகிறது
அகமதாபாத், இந்தியா, July 20, 2020 /PRNewswire/ -- தேசிய ஐஸ்-கிரீம் நாளில் Indian Ice cream Manufacturer's Association (IICMA) தங்களுக்கு விருப்பமான ஐஸ் கிரீமை வாங்கி சுவைத்து இந்த நாளை சிறப்பிக்க வேண்டுமென்று ஒவ்வொருவரையும் வாழ்த்தி இந்த நாளைக் கொண்டாடுகிறது.
IICMA-யின் கூற்றுப்படி ஐஸ்-கிரீம் ஒருவருடைய மன நிலையை நொடிகளில் மாற்றிவிடும். ஐஸ்-கிரீமில் எண்ணிலடங்கா ஃபிளேவர்கள் உள்ளன, அதில் பல காம்பினேஷன்களும் உள்ளன. இதில் உள்ள மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதனுடன் கேண்டி பிட்கள், சாக்கலேட்டுகள், பழங்கள், உலர் பழங்கள் போன்ற பலவற்றை அவற்றுடன் சேர்க்கலாம். இதனால் இன்னும் பல புதிய வகைகளையும் சுவைகளையும் பெறலாம் என அசோசியேஷன் குறிப்பிடுகிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளாவிய அளவில் பரவி வரும் இந்த வேளையில், ஒவ்வொரு நாளும் எங்கிருந்தோ சில புரளிகள் முளைத்து வருகின்றன என நிறுவனம் கூறுகிறது. மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என IICMA வலியுறுத்துகிறது.
IICMA-யின் கூற்றுப்படி, இணையத்தில் உலாவரும் புரளிகளுள் ஒன்று, "ஐஸ்-கிரீமினால் அல்லது வேறு எந்த ஒரு உறைநிலை உணவினாலும் கொரோனா பரவும்" என்பதாகும். இது பற்றிய விளக்கம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு ஐஸ்-கிரீமினால் COVID-19 ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
https://indianexpress.com/article/india/coronavirus-food-myths-ice-cream-junk-food-6386268/
https://www.who.int/southeastasia/outbreaks-and-emergencies/novel-coronavirus-2019/fact-or-fiction
உண்மைகள் போன்று கூறப்பட்ட அத்தகைய புரளிகளைக் கண்ட அனைவரும், அவற்றை சரிபார்த்து, அவற்றை நிரூபிக்கும் எந்த ஒரு உண்மைக் கூற்றுகள் அல்லது அதிகாரிகளின் அறிக்கைகள் உள்ளனவா எனச் சரிபார்க்கும்படி IICMA கேட்டுக்கொள்கிறது. இல்லாவிட்டால், அது ஒரு பொய்யான கூற்று என்றும் முடிந்தவரை விரைவில் அவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.
மேலும், Indian Ice cream Manufacturer's Association (IICMA) அத்தகைய புரளிகளை நம்ப வேண்டாம் என்றும், உங்களுக்கு விருப்பமான ஐஸ்-கிரீமை சுவைக்காமல் சமரசம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கும் தங்களுடைய பாசமானவர்களுக்கும் அடிக்கடி குறிப்பாக தேசிய ஐஸ்-கிரீம் நாளன்று மகிழ்ச்சியின் ஒரு கப்பை அளிப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். மக்கள் தங்களுடைய வீட்டிலேயே பாதுகாப்பாகவும், பதட்டமில்லாமல் குளிர்ச்சியாகவும் இருக்கும்படி Indian Ice cream Manufacturer's Association (IICMA) கேட்டுக்கொள்கிறது.
IICMA-யில் சேராத ஐஸ்-கிரீம் தயாரிப்பாளர்கள் இப்போது எங்களுடன் சேர்ந்து கொண்டு நம்முடைய சங்கத்தின் அங்கத்தினராகலாம்.
Indian Ice cream Manufacturer's Association (IICMA) பற்றி
Indian Ice cream Manufacturer's Association கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்களின் தேசிய சங்கமாகியுள்ளது. இது இந்தியாவில் உறைநிலை உணவுப் பண்டங்கள் மற்றும் ஐஸ்-கிரீம் தொழிலுக்கான ஒரு தொழில்முறை சார்ந்த லாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
http://iicma.in/
Samrat A Upadhyay, [email protected] , +91-73833-54764, பொதுச் செயலாளர், IICMA, Indian Ice cream Manufacturer's Association
Share this article