இந்தியாவில் தயாரிப்போம் தொழில்நுட்பத்துடன் COVID-19 தனிமைப்பிரிவுகளை தொலைவிலிருந்தே கண்காணிக்க Stasis-உடன் AIIMS Rishikesh கைகோர்த்திருக்கிறது
பெங்களூரு, May 29, 2020 /PRNewswire/ -- ரிஷிகேஷில் உள்ள All India Institute of Medical Sciences (AIIMS) COVID-19 தொற்று இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் / நோயாளிகளை தொலைவிலிருந்தே கண்காணித்து நிர்வகிப்பதற்கான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு பெங்களூரில் உள்ள ஸ்டார்ட்-அப்பான Stasis-உடன் கைகோர்த்திருக்கிறது. நோயாளியின் பாதுகாப்பை அதிகரித்து, குறைவாகவே கிடைக்கும் PPE-யின் தேவையைக் குறைத்து, சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்படும் ஆபத்து வாய்ப்பைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதே இந்தத் தீர்வின் நோக்கமாக உள்ளது.
COVID-19-ஐ முறியடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்பத்தை முதன் முதலில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தும் முதலாவது தன்னாட்சி நிறுவனம்தான் AIIMS, Rishikesh. USFDA ஒப்புதல் பெற்ற, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொலைநிலை நோயாளி கண்காணிப்புத் தீர்வு தற்போது நான்கு குறிப்பிட்ட COVID தனிமைப்பிரிவுகளிலும் ICU-களிலும் உள்ள 38 படுக்கைகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. Stasis செயலியைக் கொண்டு மருத்துவர்கள் முக்கியமான ஊடுருவலற்ற நோயாளிக்கான முக்கிய தரவுகளை - இதயத்துடிப்பு வீதம், ஆக்சிஜன் சாச்சுரேஷன், எலக்ட்ரோகார்டியோகிராம், சுவாசவீதம், ஊடுருவலற்ற இரத்த அழுத்தம் மற்றும் தோல் வெப்பநிலை ஆகிய அளவுகளைக் காண முடியும்.
Stasis-ல் எல்லா நோயாளிகளையும் கண்காணிக்க ஒரு மத்திய டேஷ்போர்டும் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ் நேர வைட்டல்களையும், நோயாளியின் வைட்டல் தரவு பற்றிய ஹை-ரெசோலூஷன் டிரென்டுகளையும் தொலைநிலை மருத்துவக் குழு பார்க்க முடியும். AIIMS, Rishikesh-ன் இயக்குநரான பத்ம ஸ்ரீ பேராசிரியர் Ravi Kant இதுபற்றிப் பேசும்போது "AIIMS Rishikesh உத்தராகான்ட் மாநிலத்திலும் அருகிலுள்ள மாநிலங்களிலும் உள்ள நோயாளிகளுக்குச் சேவையாற்ற ஒதுக்கீடு பெற்ற Covid மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. இந்த பெருந்தொற்று நேரத்தில், AIIMS Rishikesh-ல் நிபுணர் குழுவின் மிகச்சிறந்த மருத்துப் பராமரிப்பை அளிக்கும் அதே சமயம், PPE-களை விவேகமாகப் பயன்படுத்துவதும், முன்னணி ஊழியர்கள் அனைவரையும் பாதுகாப்பதும் முக்கியம். Stasis தீர்வைப் பயன்படுத்தி, அவசியமற்ற விதத்தில் பணியாளர்களும் மருத்துவர்களும் பாதிக்கப்படும் வாய்ப்பைக் குறைக்க 38 Covid HDU மற்றும் ICU படுக்கைகள் இந்த தொலைநிலை கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்நேர தரவை அவர்கள் பெற்று நேரடியாக அபாய வாய்ப்பை தரப்படுத்தி விரைவாக சிகிச்சை நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்றார்.
மேலும், பேராசிரியர் ரவி காந்த் பேசும்போது, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, USFDA ஒப்புதல் பெற்ற, இந்த கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் தயாரிப்போம் முன்முயற்சிக்கும் நாங்கள் ஆதரவை அளிக்கிறோம்" என்றார். கிடைக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதையும், மருத்துவமனையில் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்தவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் குழுவை வழிநடத்திய Surgical Gastroenterology துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியரான டாக்டர் Abhishek Agrawal ஆழமாக நம்புகிறார். "ஒரு மத்திய டேஷ்போர்டைக்கொண்டு ஸ்மார்ட்போன் வழியாக நோயாளிகளைத் தொலைவிலிருந்தே கண்காணிக்க இயலுவதால், எங்களால் அதிகமான நோயாளிகளைத் தொடர்ந்து நிர்வகிக்க முடியும், குறைவாகவே கிடைக்கும் PPE-களை அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைக்க முடியும்" என்கிறார் டாக்டர் Agrawal. COVID-19 பெருந்தொற்று காரணமாக அதிகமான மருத்துவமனைகள் இந்த தொலைநிலை நோயாளி கண்காணிப்புத் தீர்வை நடைமுறைப்படுத்துவார்கள் என்று Stasis-ன் இயக்குநரான டாக்டர் Roheet Rao நம்புகிறார். "Covid-க்குப் பிந்தைய உலகில் எல்லா மருத்துவமனைகளிலும் எம்முடைய தீர்வு அவசியமானதாக ஆகிவிடும். ஏனெனில், நோயாளி கண்காணிப்பு என்பது தொழில்நுட்ப உதவி பெற்ற தொலைநிலைப் பராமரிப்பை நோக்கி வேகமாக நகர்கிறது. தெலைநிலை நோயாளி கண்காணிப்பினால் Covid தொற்றிலிருந்து மருத்துவமனைப் பணியாளர்களையும் மருத்துவர்களையும் பாதுகாப்பதை உறுதிசெய்ய முடியும், உயிர்களையும் காப்பாற்ற முடியும்" என்றார்.
Stasis Health Pvt Ltd (ஸ்டாசிஸ் ஹெல்த் பிரைவேட் லிமிடெட்) பற்றி:
2015-ல் நிறுவப்பட்ட Stasis ஒரு FDA சான்று பெற்ற ஈடுசெய்யக்கூடிய நோயாளி கண்காணிப்பு தளமாகும். மேம்பட்ட நோயாளிகளின் பராமரிப்புக்கான நுண்ணறிவைக் கொடுக்க தீர்வுகளை அளிப்பதற்கான தரவுத் திரட்டல் மற்றும் விநியோகத்தை இது ஆட்டோமேட் செய்கிறது. எம்முடைய நுண்ணறிவுகள் பொருத்தமான, சரியான நேரத்தில் வேண்டி தகவல்களை மருத்துவக் குழுக்களுக்கு அளிப்பதால், அபாயத்தில் உள்ள நோயாளிகளைப் பாதுகாப்பாக வைக்க முடியும். மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட தொலைநிலை நோயாளி கண்காணிப்புத் தீர்வுகள் என்பது பிளக்-அன்டு-பிளே கருவிகளைப்போன்று சுலபமாக நடைமுறைப்படுத்தக் கூடியவை என்பதால் குறைந்த செலவில், மேம்பட்ட மருத்துவ வெற்றிகளுடன் மருத்துவமனைகளும் சுகாதாரப் பராமரிப்பாளர்களும் உயர் அபாயமுள்ள நோயாளிக்ளை திறம்பட நிர்வகிக்க முடியும். நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக Stasis 40-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் கைகோர்த்திருக்கிறது. சுகாதாரப் பராமரிப்பினை கனெக்டட் கேர்-க்கு விரைவாக மாற்றி வருகிறது.
கூடுதலாகத் தெரிந்துகொள்ள: www.stasislabs.com
வீடியோ: https://www.youtube.com/watch?v=5OPZkQhRQts
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1173939/Stasis.jpg
Share this article