MSG91 அறிவிக்கிறது Zencommerce, LeadSquared, ZipBooks மற்றும் B2BBricks உடனான திட்டம்சார்ந்த கூட்டணி
INDORE, இந்தியா, April 19, 2016 /PRNewswire/ --
MSG91, ஒரு உலகளாவிய SMS தீர்வு வழங்குநர், சமீபத்தில் முன்னணி தீர்வு வழங்குநர்களுடன் தொழில்நுட்ப கூட்டணி மற்றும் ஒருங்கிணைப்பு ஒன்றை அறிவித்தது. இந்த கூட்டணியானது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சுருக்கமான தொழில் தொடர்பு தீர்வை அழிக்கிறது, இதன் மூலம் அவர்கள் இப்போது நிகழ்-நேர அறிவிப்புகளை ஒருங்கிணைந்த தளம் மூலமாக அனுப்ப முடியும்.
"தொழில் செழிக்க, அனைத்தும் ஒத்திசைந்து இருக்க வேண்டும், குறிப்பாக அவர்களுடைய வாடிக்கையாளர் தகவல்தொடர்பு செயல்முறை. இந்த கூட்டணி வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு சேனலை வழங்குகிறது, அவர்கள் எளிமையாக பணிசெய்ய அனுமதிப்பதோடு, இதை அதிக திறன் வாய்ந்ததாகவும் பலனளிப்பதாகவும் மாற்றுகிறது," என்றார் Pushpendra Agrawal, CEO, MSG91.
Zencommerce
Zencommerce ஒரு நிறுவன தளத்தை வழங்கி தொழில்கள் தங்கள் ரீடெய்ல் ஸ்டோர்களை இணையத்தில் அமைக்க உதவுகின்றன. Zencommerce website builder மென்பொருளுடன், பயனருடைய தேவைக்கு ஏற்ப ஸ்டோரின் தோற்றத்தை உருவாக்குவதும் மாற்றுவதும் முயற்சியின்றி செய்யப்படலாம். MSG91 உடன் ஒருங்கிணைத்தலானது இ-காம் ஸ்டோர்கள் நேரடியாக வாடிக்கையாளருக்கு SMS அனுப்பி ஆர்டர் மற்றும் அதன் விவரங்களை அறிவிக்க அனுமதிக்கிறது.
LeadSquared
LeadSquared, தொடக்கநிலைகள் மற்றும் SMEக்களின் லீடுகள் மற்றும் பணி மேலாண்மை அம்சங்களை வழங்குகிறது. பல்வேறு இணைய வளங்களில் இருந்து லீட் கைப்பற்றப்படுவதை எளிமையாக்கி, இவர்கள் தொழில்கள் லீடுகளை அடையாளம் காணவும், ஈடுபடுத்தவும், அவை (வாடிக்கையாளராக) மாற்றப்படும் வரை ஊக்கப்படுத்துவதவும் உதவுகின்றன. LeadSquared ஒரு கூடுதல் SMS வசதியை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் வாடிக்கையளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பின்னூட்டம் மற்றும் லீட் நிலை குறித்த SMS அனுப்பலாம்.
ZipBooks
ZipBooks என்பது ஒரு கிளவுட் சார்ந்த கணக்கிடுதல் மற்றும் சரக்கு மேலாண்மை தீர்வு, இது SMEகள் தங்கள் நிதி செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தி, அனைத்து அத்தியாவசிய கணக்கு, சரக்கு, விற்பனை மற்றும் வாங்குதல் அம்சங்களுக்கும் அணுகல் பெறுவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது. MSG91 API உடைய ஒருங்கிணைப்பு will add more productivity for ZipBooks வாடிக்கையாளர் தளத்திற்கு அதிக உற்பத்தியை சேர்க்கும், ஏனெனில் அவர்களுடைய நிதி விவரங்கள் மற்றும் புதுப்பித்தல்கள் நிகழ்-நேரத்தில் ஒரே தளத்தில் இருந்து அனுப்பப்படலாம்.
B2BBricks
B2BBricks, தனிநபர்களுக்கும் நிறுவன அளவிலான தரகர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த மேலாண்மை மென்பொருளை வழங்குகிறது, அது ஒரு திறன்வாய்ந்த வழியில் ரியல் எஸ்டேட் சேவைகளை வழங்க அவர்களுக்கு உதவுகிறது. திட்டம் மற்றும் கையகப்படுத்துதல், நடப்பில் இருக்கும் செயல்பாடுகள் மற்றும் இட அமைப்பு ஆகியவை முதலான சொத்து பதிவுசெய்தலுக்கு உதவுகின்றது. MSG91 ஒருங்கிணைப்பானது வாடிக்கையாளர் உறவை வலிமைப்படுத்த உதவும், ஏனெனில் அவர்களுடைய சொத்து தொடர்பான தகவல்கள் மென்பொருளில் இருந்தே அனுப்பப்படலாம்.
MSG91 பங்காளர் நிகழ்ச்சி குறித்து மேலும் தெரிந்துகொள்ள
இந்த பங்காளத்துவ நிகழ்ச்சியானது பிற B2B நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். நீங்கள் இதில் பங்குவகிக்க விரும்பினால், இந்த மின்னஞ்சலில் MSG91க்கு எழுதவும் [email protected].
MSG91 குறித்து:
MSG91 என்பது Walkover Web Solutions உடைய முதன்மையான தயாரிப்பு ஆகும், இது நிறுவன செய்தியனுப்புதல் தீர்வுகளை வழங்கி நிறுவனங்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. வலை பயன்பாடு தவிற, MSG91 மொத்தமான SMS அனுப்புவதற்கான பல்வேறு tools and add-ons வழங்குகிறது.
மேலும் தெரிந்துகொள்ள https://msg91.com/
Twitterஇல் எங்களை பின்தொடருங்கள் @msg91com
ஊடக தொடர்பு:
Pallavi Jaisinghani
[email protected]
+91 94240 82654
ஆக்கப்பூர்வமான உள்ளடக்க திட்டவல்லுநர்
Walkover Web Solutions Pvt. Ltd.
Share this article