இந்தூர், இந்தியா, May 16, 2016 /PRNewswire/ --
வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குள், MSG91 SMS Extension for Magento இ-காமர்ஸ் தொழிற்துறையை கலக்கி இருக்கிறது. நூற்றுக்கணக்கான பதிவிறக்கங்களுடன் இந்த ப்ளக்-இன் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, அது இலவசமாக கிடைக்கிறது என்பதால் மட்டும் அல்ல, இதோடு போட்டியிடக்கூடிய இப்படிப்பட்ட ப்ளக்-இன்கள் அதிகமாக சந்தையில் வருவதும் இல்லை என்பதாலும் தான்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160513/10146128 )
Magento உண்மையாகவே இ-காமர்ஸ் சந்தையில் சுமார் 26% பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்துகின்றது மற்றும் இதற்கு பல வலிமையான காரணங்கள் இல்லாமல் இல்லை. எந்த ஒரு Magento வலைதளத்தையும் பல மூன்றாம் தரப்பு சேவைகளுடன் ஒருங்கிணைப்பது என்பது விரைவாகவும் துரிதமாகவும் இருக்கிறது, இதன் விளைவாக பயனர் அனுபவம் மேம்படுத்தப்படுகிறது, இது தான் Magentoவுக்கான MSG91 SMS விரிவாக்கத்தோடு பயனர்களுக்குக் கிடைக்கிறது.
ஒரு-தொடல் ஒருங்கிணைப்பிலே இத்தனை பலன்கள் கிடைக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்?
2015 ஆம் ஆண்டு இலவச தகவல்தொடர்பு செயலிகளின் மகத்தான அதிகரிப்பு ஏற்பட்டது, ஆனாலும், உரை செய்தியனுப்புதலுக்கு அருகே எவற்றாலும் வர முடியவில்லை. பயனாளிகள் நடுவே SMS இன்னமும் தனது வலிமையான பிடிப்பை அதிகமான விநியோக விகிதத்தின் மூலம் பராமரித்து வருகின்றது.
இ-காமர்ஸ் என்பது தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு கொடுக்க அதிகமாக SMSஐ சார்ந்து இருக்கும் ஒரு தொழிற்துறை மற்றும் Magentoவுக்கான MSG91 SMS விரிவாக்கமானது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு மகத்தான சாதகத்தன்மையை அளிக்கிறது. இந்த ப்ளக்-இன்னை Magento வலைதளத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், ஒவ்வொரு முக்கியமான படிநிலையிலும் அறிவிப்பை அனுப்புவது ஒரு சுலபமான காரியமாக மாறுகிறது மற்றும் இது வாடிக்கையாளர் அனுபவத்திற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கிறது.
"இந்த ப்ளக்-இன் ஒரு அனைத்தும் ஒன்றில் இருக்கும் சேவை தயாரிப்பாக வேலைசெய்து, வரவேற்பு முதல் ஆர்டர் விநியோகம் வரை அனைத்து பெரிய படிநிலையிலும் அறிவிப்புகளை அனுப்ப விற்பனையாளர்களுக்கு உதவுகிறது. SMS ஒரு அதிக நம்பகமான மற்றும் துரிதமான தகவல்தொடர்பு முறையாக இருப்பதால், எந்த ஒரு தகவலையும் கொண்டுசெல்ல இது ஒரு பாதுகாப்பான ஊடகம் ஆகும். MSG91 SMS விரிவாக்க ப்ளக்-இன் உடன், அனைத்து Magento வலைதள பயனர்களும் தங்கள் தொழில் தகவல்தொடர்பு செயல்முறையை தானியக்கமாக்கி சரியான படிநிலையில் செய்திகளை அனுப்ப முடியும்," என Aniket Jain,
இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, MSG91 பகிர்ந்துகொண்டார்.
அவர் மேலும் கூறியதாவது, "பயனர்கள் இந்த ப்ளக்-இன்னால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஏனெனில் ட்ரிகர்டு மெசேஜிங் அவர்களுடைய கொள்முதலின் மிகவும் முக்கியமான படிநிலைகளில் அறிவிப்புகளை அனுப்ப உதவுவதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவம் மேம்படுகிறது மற்றும் அதோடு அவர்களுடைய விற்பனையும் அதிகரிக்கிறது" என்றார்.
MSG91 குறித்து:
MSG91 என்பது Walkover Web Solutions Pvt. Ltd., உடைய முதன்மையான தயாரிப்பு ஆகும், இது நிறுவன செய்தியனுப்புதல் தீர்வுகளை வழங்கி நிறுவனங்களுக்கு இடையே ஒரு தகவல்தொடர்பு பாலமாக செயல்படுகிறது. வலை பயன்பாடு தவிற, MSG91 மொத்தமான SMS அனுப்புவதற்கான பல்வேறு tools and add-ons வழங்குகிறது.
மேலும் தெரிந்துகொள்ள https://msg91.com/
Twitterஇல் எங்களை பின்தொடருங்கள் @msg91com
ஊடக தொடர்பு:
Pallavi Jaisinghani
[email protected]
+91-9424082654
Creative Content Strategist
Walkover Web Solutions Pvt. Ltd.
Share this article