மும்பையில் 12-13 மே நடைபெற்ற Fintech Storm India Summit வெற்றிகரமாக நிறைவடைந்தது, Blockchain மீது வங்கிகள், FI-கள் மற்றும் ரெகுலேட்டரின் ஆர்வத்தைத் தூண்டியது
மும்பை, May 18, 2016 /PRNewswire/ --
Fintech Storm India Summit - 12-13 மே 2016, மும்பை, Hotel St. Regis
மும்பையிலுள்ள St. Regis ஓட்டலில் 12-13 மே நடத்தப்பட்ட Fintech Storm India Summit, Mumbai, RBI, வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்கநிலை நிறுவனங்கள், VC-க்கள் மற்றும் Blockchain ஆர்வலர்களில் 200-க்கும் மேற்பட்ட தொடர்புடையவர்களை கவர்ந்திழுத்தது. இந்த உச்சிமாநாட்டை நடத்தியவர்கள் Genius Incubator Ltd., UK, வழிநடத்தியவர் CEO மிஸ். Arifa Khan. இந்த உச்சிமாநாடு, தொடர்ந்து நடைபெற்றுவரும் ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாகவும், இந்திய வங்கிச் செயல்பாடு, பணம் செலுத்துதல்கள் மற்றும் நிதி தொழில் நுட்பப் பிரிவிற்குள் இந்நிறுவனத்தின் யுக்திசார் பிரவேசத்தின் ஒரு பகுதியாகவும் அமைகிறது. Blockchain அடுத்த மிகப் பெரிய வாய்ப்பாக இருப்பதாக மிஸ் Khan நம்புவதுடன், இந்தியாவில் வங்கி மற்றும் நிதிசார் சேவைகளை வழங்குவதை புதியதாக்குவதற்காக, சர்வதேச blockchain திறன்களை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ள தனது புதிய முயற்சியில் நிறுவனம்சார் முதலீடுகளையும் அவர் வரவேற்கிறார்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160517/10146299 )
இந்த உச்சி மாநாட்டை திரு. A.P. Hota, CEO, NPCI தொடங்கி வைத்தார். அறிமுகப்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் உள்நாட்டு பணம் செலுத்தும் அட்டையான Rupay மூலம் 35% மார்க்கெட் ஷேரைப் பெற்று, Jan Dhan Yojana-வில் NPCI ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, மற்றும் பணம் செலுத்துவதை துரிதமாகவும், சுலபமாகவும் மேற்கொள்வதற்காக அது சமீபத்தில் Unified Payments Interface (UPI)-யை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய வங்கிகளுக்கான Blockchain ஆராய்ச்சியில், Fintech Storm உடன் NPCI ஒரு பார்ட்னராக இணைந்து செயல்படும் என்று உச்சிமாநாட்டில் A.P.Hota அறிவித்தார்.
பேமென்ட் வங்கிகளான Reliance Jio மற்றும் Fino Paytech உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். tap&go-விற்கு உரிமம் வழங்குவதில் RBI அதிக சுறுசுறுப்பான அணுகுமுறையை வெளிப்படுத்துவதுடன், புதிய Fintech கண்டுபிடிப்புகளுக்கு வெளிப்படைத்தன்மையையும் காட்டி வருகிறது.
RBI-ன் அதிகாரிகளில் பலர், இரண்டு தினங்களிலும் உச்சிமாநாட்டில் பங்கேற்று, Blockchain கருத்தரங்கத்தை வெகுவாகப் பாராட்டினர்.
உச்சிமாநாட்டில், பேமென்ட் வங்களின் வேறுபாடு குறித்த Narayan Madhavan உடனான நேர்காணல் ஒன்றில் பேசிய Reliance Jio Payments Bank-ன் CEO, திரு.H. Srikrishnan, கூறியதாவது, "புதிய பேமென்ட் வங்கிகள் வசதி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தையே இலக்காகக் கொண்டுள்ளன, ஆனால் பின்நிலையானது, மற்ற வங்கிகளுடனான கூட்டினால் ஆற்றலளிக்கப்படும். கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், ஒப்பந்தங்களுடன் கூட்டிணைந்து, உரிம ஒத்திசைவாக இருப்பதன் மூலம், இசை கேட்பதை Apple மியூசிக் சுலபமாக்கியுள்ளது. அதைப்போலவே, நிதிச் சேவைகளை சுலபமாக அணுக முடிவதும் அவசியமாகும்."
Blockchain தொடங்கிவைத்துள்ள உலகளாவிய குறுக்கீட்டைப் பற்றி உச்சிமாநாட்டில் உரையாற்றிய Arifa Khan கூறியதாவது, "இந்த அளவிற்கு வாய்ப்பு வளம் கொண்ட தொழில்நுட்பங்கள் மனித வரலாற்றில் தோன்றுவது அரிதாகும், மேலும் ஸ்மார்ட் ஃபோன், IOT, Blockchain போன்றவற்றின் பிரமிப்பூட்டும் காலகட்டத்தில் வாழ்வது நமது அதிர்ஷ்டமே. வங்கி மற்றும் நிதித்துறையின் முகம், அடையாளம் தெரியாத வகையில் மாறப்போகிறது. இதிலிருந்து விடுபட்டுப் போவதற்கு Wall Street விரும்பவில்லை மற்றும் அது தனக்கென ஓரிடத்தைப் பெற தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
டெல்லியில், 17 டிசம்பர் 2016 அன்று, Shri Nitin Gadkari. தலைமையில் நடைபெற்ற ஐரோப்பா - இந்தியா கான்கிளேவில், Blockchain வல்லுனராக மிஸ் Arifa Khan கௌரவிக்கப்பட்டார். சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ECB குறித்த ஆலோசகராகவும் மிஸ் Khan செயல்படுகிறார்.
நம்பிக்கையின்மை நிறைந்துள்ள உலகில், இடைத்தரகர்களுக்கான தேவையின்றி, ஒரு பரிமாற்றத்தில் எதிர்தரப்பினரிடையே நம்பிக்கையை Blockchain உருவாக்குகிறது. விநியோகிக்கப்படும் லெட்ஜர், பன்முகமாக்கப்பட்ட, தவறாகக் கையாள முடியாத, மாற்ற முடியாத மற்றும் கருத்திசைவு அடிப்படையிலான தரளவுதளமாகும். நாடு முழுவதிலும் பல பயன்பாட்டு அம்சங்கள் உள்ளன - இவை p2p பணம் செலுத்துதல்கள், நோட்டரி மற்றும் முத்திரையிடுதல், சான்றின் உரிமை, மின்னணுசார் உடல்நலப் பராமரிப்பு, பங்குச் சந்தைகள், சோதனை மற்றும் சான்றளிப்பு, மின்னணுசார் வாக்களிப்பு போன்றவையாகும். பேரளவிலான இந்திய மக்களுக்கு Blockchain-ஐ எடுத்து வருவதில் ஒரு முன்னணி பங்கு வகிப்பதற்கான தனது திட்டங்களை மிஸ் Khan அறிவித்தார். "நிதித்தொழில்நுட்பத் தளங்களில் மேம்பாட்டை எட்டுவதற்கு, கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் அவசியமாகும், எனவே ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இச்சூழலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் பொருட்டு, மற்ற வங்கிகள், கொள்கை உருவாக்குவோர், கட்டுப்பாட்டாளர்கள், NPCI, புத்தமைவாளர்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை நாங்கள் ஒன்று சேர்ப்போம். இவை உண்மையில் மிகவும் உற்சாகமான காலகட்டங்களாகும்!" என்று மிஸ் Khan தொடர்ந்து கூறினார்.
Narayanan Madhavan மேடையில் மிஸ் Arifa Khan-னிடம், எதனால் VC சமுதாயம் Blockchain-ல் ஆர்வம் காட்டுகிறது மற்றும் அது பெருமளவில் ஏற்கப்பட்டுள்ளதில் உள்ள குறைபாடுகள் என்ன என்று கேள்வி எழுப்பினார். Blockchain கொண்டுள்ள தொழில்நுட்ப வரம்புகள் மட்டுமின்றி, தற்போதுள்ள பரிசோதனை காலத்தைப் பற்றியும் மிஸ் Khan விளக்கிக் கூறினார். அதன்பின், 'Blockchain புரட்சிகரமானது' என்று அவர் தனது தீர்ப்பை வழங்கினார்!
ISBM தலைவர் Pramod Kumar கூறினார் - "தொழில்துறை பயிற்சிக்கான வாய்ப்புகளுடன், புதிய கல்விசார் களத்தை Blockchain தொடங்கும். பயிற்சிபெற்ற Blockchain திறனுக்கான வள ஆதாரமாக இந்தியாவால் மாற முடியும். Fintech Storm உடன் இணைந்து நாங்கள் வாய்ப்புகளை ஆராய்வோம்."
Blockchain பயிலரங்கத்தை மிஸ் Khan உடன் இணைந்து நடத்திய பிரெஞ்சு கல்வியாளரான Marc Pilkington, ஃபிரான்ஸையும், இந்தியாவையும் இணைப்பது தனக்கு உற்சாகமாக உள்ளது என்று கூறி, ஆராய்ச்சி பார்ட்னராக தனக்கு ஒரு வாய்ப்பை அளித்த Fintech Storm-க்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கடைசி மைல் சேவையை ஆற்றலுடன் வழங்குவது குறித்துப் பேசிய FINO Paytech-ன் Shailesh Pandey கூறியதாவது, "தரவு மற்றும் குரல் போக்குவரத்தானது, தொலைதொடர்பு சேவை வழங்குனர் குறித்த அறியாநிலையில் இருப்பதைப்போன்று, UPI மூலம் அடையக்கூடிய வங்கிகளிடையேயான உள்செயல்பாடுகள், பணமாற்றங்களில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. DBS-ன் Digibank, e-KYC-யை செயல்படுத்தும் மொபைல் மட்டும் வங்கிக்கு ஓர் உதாரணமாகும்."
SBI, ICICI, HDFC, Axis, Kotak ஆகிய இந்தியாவிலுள்ள ஐந்து மிகப் பெரிய வங்கிகள் இன்று மொத்தப் பரிமாற்றங்களில் 92% அளவு மேற்கொள்கின்றன.
நாணயப் பிரிவின் Mr.Tamal Bandhopadhyaya, திரு. A.P. Hota மற்றும் Religare-ன் Subhrangshu Neogi-யை பேட்டி கண்டார். நிதிசார் உட்சேர்ப்பு மற்றும் வாடிக்கையாளருக்கு ஆற்றலளிப்பு குறித்து பேசிய, இந்திய பணம்செலுத்தல் தொழில்துறையின் உறுதிப்பாடுமிக்க அதிகாரியான Mr. A.P.Hota கூறியதாவது, "சேமித்தல், செலுத்துதல், கடன் வாங்குதல், ஈட்டுதல், காப்பீடு செய்தல் மற்றும் முதலீடு செய்தல் போன்ற அடிப்படை நிதிசார் சேவைகள் நிலை 2 மற்றும் 3 நகரங்களில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. வாடிக்கையாளரின் முடிவெடுக்கும் பயணம் முழுவதும் மாறுகிறது மற்றும் மொபைலும், சமூகமும் அதன் ஒருங்கிணைந்த பகுதியாக ஆகியுள்ளன. IMPS, NEFT போன்ற முந்தைய நெறிமுறைகளால் இயலாத நிகழ் நேர சேகரிப்பிற்கு UPI உதவுகிறது. நில உரிமையாளர் குடியிருப்போரிடமிருந்து பணத்தை வசூலிப்பதற்கான கோரிக்கையை வழங்குதல், பெற்றோர்கள் குழந்தைகளின் செலவுக்குப் பணம் அனுப்புதல், புலம்பெயர் தொழிலாளர்கள் வீட்டிற்குப் பணம் அனுப்புதல் போன்ற UPI-ன் பல பயன்பாட்டு நிகழ்வுகள் உள்ளன."
இதர குறிப்பிடத்தக்க உரைகளை வழங்கியோர், Imrana Khera - USAID, Arun Diaz, Avishkaar- நிதிசார் உட்சேர்ப்பு மற்றும் IDG-ன் TCM Sundaram - 2-பக்கம் கொண்ட சந்தைகள், ISPRIT-ன் Venky Hariharan - இந்தியாவில் மென் உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
மிஸ் Khan, 2016 நவம்பரில் புது டெல்லியில் ஐரோப்பா - இந்தியா கான்கிளேவ்-ஐயும், 2016 ஜூலை 14-ல் லண்டன் உச்சிமாநாட்டையும் அறிவித்தார். Blockchain கருத்தரங்கம், RBI உள்ளிட்ட பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான ஆர்வத்தைப் பெற்றது. இந்த உச்சிமாநாடு, NPCI, வங்கிகள், FI-கள், RBI மற்றும் தொழில்துறையுடன் ஆலோசனைகளை வரவேற்றது. Fintech Storm உடன் இப்புதிய பிரிவில் ஒன்றாக இணைந்து முன்னேறிச் செல்வதை NPCI ஆவலுடன் எதிர்நோக்குகிறது.
இந்த உச்சிமாநாட்டிற்கு, பின்வரும் உதவி பார்ட்னர்கள் ஆதரவளித்துள்ளனர்: NPCI, Network18, PR Newswire, Money Control, Majestic MRSS, Nasscom 10000 Startups, 91Springboard, Indian Startups, e-cell IIT Mumbai, Innov8, 91 Springboard, Banking Frontiers.
Genius Incubator Ltd. பற்றிய தகவல்கள்
யூகே-யிலுள்ள Genius Incubator Ltd, முதலீடு திரட்டுதல் குறித்து இந்திய அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கும் ஓர் ஆலோசனை நிறவனமாகும் மற்றும் இது சொந்தமாக "Fintech Storm" பிராண்டையும் கொண்டுள்ளது - இது, fintech குறுக்கீட்டிற்கான வட்டமேஜைகள் மற்றும் விவாதங்களுக்கான ஒரு தளமாகும்.
இவற்றில் எங்களைத் தொடருங்கள்:
http://fintechstormindia.com
http://FintechStorm.com
http://Facebook.com/fintechstorm
http://meetup.com/mobile-payments
http://meetup.com/destinationindia
Twitter: @fintechstorm
ஊடகத் தொடர்பு:
மிஸ் Arifa Khan, நிர்வாக இயக்குனர்
+44-7920030807 ,+91-9619703635
Genius Incubator Ltd.
[email protected]
[email protected]
Share this article