குர்கான், இந்தியா, July 22, 2016 /PRNewswire/ --
Potter ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நாளுக்காக உங்கள் நாள்காட்டியை குறித்து வையுங்கள்: 31 ஜூலை 2016
Harry Potter And The Cursed Child பகுதிகள் 1 மற்றும்2 வெளியீட்டுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், Harry Potter காய்ச்சல் நாட்டை பற்றிக்கொண்டு இருக்கிறது. இப்புத்தகத்தின் வெளியீட்டிற்காக அலங்கரிக்கப்பட்ட புத்தகக்கடைகள் முதல், இந்திய மெட்ரோவில் புத்தகக்கடைகளில் மற்றும் பிற பிரபலமான கேந்திரங்களில் ரசிகர்களின் நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியை வேறெதற்கும் ஒப்பிடமுடியாத அனுபவம் ஆகும். Hachette Indiaவிடம் J.K. Rowling's Wizarding Worldயின் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கான அற்புதமான போட்டி இருக்கிறது: இரண்டு அதிஷ்டசாலி ரசிகர்கள் இருவருக்கும் அங்கீகாரம்பெற்ற குறைந்த வெளியீடு கையெழுத்திடப்பட்ட Harry Potter And The Cursed Child Parts 1 மற்றும் 2. நகல் கிடைக்கும். இப்போட்டி 22 ஜூலை 2016 மதியம் 2:00 மணிக்குத் தொடங்கி 5 ஆகஸ்டு 2016 அன்று முடிவடையும். போட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு வருகைதாருங்கள் Hachette India on Facebook.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160721/10150969-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160721/10150969-a )
J.K. Rowling, John Tiffany மற்றும் Jack Thorneஆகியோரால் உண்மையில் எழுதப்பட்ட புதிய கதை, Harry Potter And The Cursed Childயைச் சார்ந்த Jack Thorneஉடைய நாடகம் தான், மேடையில் வழங்கப்படும் முதல் அதிகாரபூர்வமான Harry Potter கதை ஆகும். இது லண்டனின் Palace Theatreயில் முதல் முறையாக 30 ஜூலை 2016இல் திரையிடப்படும். இதன் வசனப்புத்தகம் இந்தியா முழுவதும் புத்தகக்கடைகளில் காலை 11:30 மணிக்கு (IST) ஜூலை 30ஆம் தேதி விற்பனைசெய்யப்படும்.
வெளியீட்டைப் பற்றி பேசும்போது, Thomas Abraham, Hachette Indiaவின் மேலாண்மை இயக்குநர், இவ்வாறு கூறினார், 'மீண்டும் இது ஒரு உணர்ச்சிமிக்க பிரசுரிப்பாக இருக்கப்போகிறது, புத்தகம் 7இல் இருந்து இதன் மந்திரம் தொடரப்போகிறது. லண்டன் முன்னோட்டங்களைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு தெளிவாக இது ஒரு Harry Potterஇன் மறு வருகை என்பதை குறிப்பிடுகின்றது.'
ஏழாம் புத்தகம் நிறைவடைந்த இடத்தில் இருந்து எட்டாம் கதை தொடங்குகின்றது. Harry Potterஆக இருப்பது எப்போதுமே சிரமம் தான், Ministry of Magixஇன் அதிகமாக உழைத்த பணியாளராகவும், ஒரு கணவராகவும், மூன்று பள்ளி செல்லும் வயது குழந்தைகளின் தந்தையாகவும், அது இப்போது சுலபமானதாக மாறவில்லை. தன்னுடைய இடத்திலே இருக்க மறுக்கும் கடந்தகாலத்தை Harry பற்றிப்பிடித்துக்கொள்கையில், அவருடைய கடைசி மகன் Albus தனக்கு பிடிக்காத குடும்ப வரலாற்றின் பாரத்தோடு போராடுகிறார். கடந்த காலமும் எதிர்காலமும் அச்சுறுத்தும்வகையில் ஒன்றோடு ஒன்று பிணையும்போது, தகப்பனும் மகனும் ஒரு கசப்பான உண்மையைக் கற்றுக்கொள்கிறார்கள்: சில நேரங்களில் இருள் நாம் எதிர்பாராத இடங்களில் இருந்து வருகிறது.
1997 மற்றும் 2007க்கு இடையே வெளியிடப்பட்ட, J.K. Rowling உடைய சிறப்பான விற்பனையாகிய ஏழு புத்தக Harry Potter தொடர், 450 மில்லியன் நகல்களுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளது, மற்றும் 200 மாகாணங்களில் விநியோகிக்கப்பட்டு, 79 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது, மற்றும் எட்டு சூப்பர் ஹிட் திரப்படங்களாகவும் உருமாறி இருக்கிறது.
புத்தகத்தைப் பற்றி:
K. Rowling, John Tiffany மற்றும் Jack Thorne ஆகியோரால் உண்மையில் எழுதப்பட்ட புதிய கதை, Harry Potter And The Cursed Child யைச் சார்ந்த Jack Thorne உடைய நாடகம் தான், Harry Potter தொடரின் எட்டாவது கதையும், மேடையில் வழங்கப்படும் முதல் அதிகாரபூர்வமான Harry Potter கதையும் ஆகும்
ISBN: 9780751565355 | தலைப்பு: குழந்தைகள் மற்றும் YA கற்பனைக்கதை - கனவுலகம் | அட்டை: HB | வடிவம்: ராயல் | அச்சு: சிறிய, பழுப்பு
பக்க வரம்பு: 352 | உரிமைகள்: இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே விற்பனைசெய்ய வேண்டும்.
Hachette India குறித்து:
Hachette India என்பது Hachette UKயின் இந்திய கிளை மற்றும் இது உள்நாட்டு பிரசுரிக்கும் நிகழ்ச்சியை 2009ஆம் ஆண்டு தொடங்கியது.
ஊடக தொடர்பு:
Avanija Sundaramurti
[email protected]
+91-124-4195000
தலைவர்-மார்கெட்டிங் மற்றும் நுகர்வோர் உள்நிலை
Hachette Book Publishing India
Share this article