அஹமதாபாத், இந்தியா, March 20, 2017 /PRNewswire/ --
மார்ச் 15, 2017 ஆண்ட்ரூ, புகழ்பெற்ற பொருளாதார வல்லுனரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான, பத்ம விபூஷன் டாக்டர். சி. ரங்கராஜன் அவர்களை தங்கள் கல்லூரி வளாகத்தில் வரவேற்கும் பெருமையை அடைந்தது. டாக்டர். ரங்கராஜன் அவர்கள், 'An Overview of the Indian Economy: A Policymaker's Perspective' என்ற தலைப்பில் நடந்த ஊடாடும் அமர்வில் MICA சமூகத்திடமும், கல்வியாளர்களிடமும் பேசினார். இந்த அமர்வு, முனைவர் ரசனந்தா பாண்டா (பேராசிரியர், எம்ஐசிஏ) மற்றும் முனைவர். அமரேஷ் சமந்தராயா (துணை பேராசிரியர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்) ஆகிய இருவராலும் நடுநிலையாக நடத்தப்பட்டது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160516/10146174 )
டாக்டர். ரங்கராஜன் அவர்கள், இந்தியாவின் கடந்தகால மற்றும் தற்போதைய பொருளாதார நிலைகளைப் பற்றிய தனது கண்ணோட்டத்தையும், ஆர்பிஐ கவர்னராகவும், கொள்கை வகுப்பாளராகவும் அவர் பதவி வகித்த காலத்தில், பல அரசாங்கங்களில் அவர் முக்கியப் பங்கு வகித்த காலங்களில் எதிர்கொண்ட அனுபவங்களையும் சவால்களையும் பகிர்ந்துகொண்டார். தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்தில் இந்தியா வெற்றிகரமாகத் தனது 25-ஆவது ஆண்டை நிறைவு செய்துவிட்டது என்று எல்லோருக்கும் நினவுப்படுத்திய டாக்டர். ரங்கராஜன் அவர்கள், நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தச் செயல்பாடு, அதை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்ட சூழ்நிலைகள் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப் பின் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி ஒரு சிறிய முன்னுரை வழங்கினார்.
இந்த ஊடாடல் அமர்வு பின்னர், ஒரு கேள்வி பதில் அமர்வாக உருவெடுத்தது, இதில் பார்வையாளர்கள், கொள்கை வகுப்பாளராக அவரது அனுபவங்கள், அவர் பதவிக் காலத்தில் எடுக்கப்பட பல்வேறு கொள்கை முடிவுகள் மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை முடிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல கேள்விகளை அவரிடம் கேட்டனர். மேலும் அவர், பெரிதும் விவாதிக்கப்படும் தலைப்பாகிய பண மதிப்புக் குறைப்பு மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி தன்னுடைய ஆய்வையும் பகிர்ந்து கொண்டார். மேலும், டாக்டர். ரங்கராஜன் அவர்கள், நமது நாட்டில் தொடங்கப் படவேண்டிய பல்வேறு சீர்திருத்தங்களைப் பற்றிய தன்னுடைய பரிந்துரைகளையும் முன்வைத்தார். டாக்டர். ரங்கராஜன் அறிவுறுத்திய ஒரு மிகவும் சுவாரசியமான சீர்திருத்தம், திட்டக் கமிஷனை கலைத்தபின் உருவாக்கப்பட்ட நிடி ஆயோக் -கின் பங்கு ஆகும். நிடி ஆயோக், நாட்டின் நீண்ட காலப் பிரச்சினைகளாகிய, குடிநீர், காட்டு வளங்கள், விவசாயத்தில் தன்னிறைவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினைகளைக் கையாள தீர்வுகளையும் உத்திகளையும் உருவாக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், டாக்டர். ரசனந்தா பாண்டா(பேராசிரியர், MICA) மற்றும் டாக்டர். பிரஷாந்த சந்த்ர பாண்டா (துணை பேராசிரியர், பிடிபியு காந்திநகர்) ஆகியோரால் தொகுக்கப்பட்ட Indian Economy in New Perspectives என்ற தலைப்புள்ள புத்தகத்தின் வெளியீடும் செய்யப்பட்டது.
MICA-வின் சார்பாக, தற்காலிக செயலாளரும் MICA-வின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினருமான டாக்டர். த்ரிதீப் சுஹ்ருத் அவர்கள், மதிப்பிற்குரிய விருந்தினரான டாக்டர். சி. ரங்கராஜன் அவர்களைப் பாராட்டிப் பேசினார், மேலும் MICA-வில் நடத்தப்பட்ட ஊடாடும் அமர்விற்கு நன்றியும் தெரிவித்தார். டாக்டர். பொருளாதார பேராசிரியரும் வர்த்தக மேம்பாட்டுப் பகுதியின் பகுதித் தலைவருமாகிய ரசனந்தா பாண்டா, நன்றியுரையை வழங்கினார் இதில் அவர் MICA தலைமைக்குழு, இணை மதிப்பீட்டாளர், டாக்டர். அமரேஷ் சமந்தராயா(பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்), MICA சமூகம், MiCompass - மாணவர்களால் நடத்தப்படும் மார்கெட்டிங் கிளப் மற்றும் உற்சாகமான பார்வையாளர்களுக்கு, இந்த உள்ளார்ந்த அமர்வின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தார்.
MICA-வைப் பற்றி:
1991-இல் துவங்கப்பட்ட MICA, இந்தியாவிலேயே, பெரும்பாலும் ஏசியா-பசிஃபிக் மாகாணத்திலேயே ஸ்ட்ராடெஜிக் மார்கெட்டிங்க் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் துறையில் தலைமைத்துவத்தை உருவாக்க அற்பணிக்கப்பட்ட முதல் குடியிருப்பு கல்வி நிறுவனமாகும்.
சமகாலத்தன்மையைப் புரிந்து கொள்வதிலும், மாறிக்கொண்டே இருக்கும் சுற்றுச்சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்வாதிலுமே இதன் ஆக்கம் அமைந்துள்ளது. தொழில்துறை, அரசாங்கம் மற்றும் சமூகத்திற்கு ஸ்ட்ராடெஜிக் மார்கெட்டிங்க் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் தீர்வை சிறந்த முறையில் அளிப்பதை MICA பிராண்ட் உறுதி செய்கிறது.
இன்று, இந்த கல்வி நிறுவனத்தில் பயின்ற பலர், இந்தியாவிலும் உலக அளவிலும், நன்கு அறியப்பட்ட நிறுவனங்களில், மார்கெட்டிங்க், பிராண்டு மேலாண்மை, ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு, விளம்பரம், ஊடகம், டிஜிட்டல் மற்றும் பிற மூலோபாய மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த தொழில்கள் ஆகிய துறைகளில் தலைமை பதவிகளை வகிக்கின்றனர்.
மேலும் விவரமறிய, தயவு செய்து: http://www.mica.ac.in-ஐப் பார்க்கவும்
ஊடகத் தொடர்பு:
கிரண் மகாசுயர்
மேலாளர் - மார்கெட்டிங், மீடியா & பிஆர், MICA
[email protected]
+91-9007530007
Share this article