ஹைதராபாத், இந்தியா, June 1, 2017 /PRNewswire/ --
ஆசியாவின் முதல் நுகர்வோர் கடன் பாகுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு சாதனம் CREDITSEVA® ஆகும், இது Experian-உடன் இணைந்து நுகர்வோருக்கு உடனடி கடன் அறிக்கையும் கடன் மதிப்பீட்டையும் வழங்குகிறது.
CreditSeva, பயனர்களை, தங்களது கடன் அறிக்கைகளில் உள்ள தவறுகளைத் திருத்தி, கடன் அறிக்கை மற்றும் கடன் மதிப்பீட்டைக் கண்காணித்து, கண்டுகொள்ளப்பட்ட முரண்பாடுகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஒரு தானே செய்யும் செயலியாகும். திறந்துள்ள செயல்பாட்டிலுள்ள கடன் கணக்குகளுக்கும் ஒருவரின் கணக்கில் நடக்கும் தனிப்பட்ட நிதிப் பரிமாற்றங்களுக்கும் காலமுறை எச்சரிக்கைகளை அமைக்கலாம். நுகர்வோர், கடன் சம்பந்தமான பரிமாற்ற ஆவனங்களுக்கு தானியங்கு சேமிப்பு மற்றும் மீட்டெடுப்புகளையும் அமைக்கலாம். இந்தச் செயலியில் ஆசியாவிலேயே முதல் வகைகளான பல்வேறு அம்சங்களும் உள்ளன.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160607/10147787 )
2015-இல் தொடங்கப்பட்ட இது, தற்போது 100% எம்-ஓ-எம் வளர்ச்சியுடன் 350,000+ பயனர்களைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள 7 வங்கிகளுடன் இணைந்துள்ளது, மேலும் Experian-உடன் இணைந்து CREDITSEVA®-வின் நுகர்வோருக்கு எல்லோரையும்விட, கடன் தயாரிப்புகளைப் பற்றிய வேகமான முடிவுகளை எடுக்கும் சாதகத்தையும் வழங்குகிறது. இந்த நிறுவனத்திற்கு, சிங்கப்பூர் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நிதி(IIPL) மற்றும் CITIBANK & HSBC போன்ற உயர் சர்வதேச வங்கிகளின் தொழில் நிர்வாகிகளாலும் முதலீட்டுப் பங்குகளுக்கு எதிராக நிதியளிக்கப்படுகிறது.
Satya Vishnubothla, தலைமை நிர்வாகி & துணை நிறுவனர் கூறியதாவது, "CreditSeva-வில் நாங்கள் "எளிமைக்காக புதுப்புனைவு செய்வோம்" எங்களது கோட்பாடால் ஊக்குவிக்கப்படுகிறோம். சிக்கலான நிதிசார்ந்த முடிவுகளை எடுக்கும்போது பயனர் அனுபவிக்கும் வலியால் நாங்கள் எப்போதும் தூண்டப்படுகிறோம். எங்கள் தனியுரிமை வழிமுறை, நுகர்வோரின் கடன் அறிக்கையையும் மதிப்பீட்டையும் பகுப்பாய்வு செய்து, புரிந்துகொள்ளும் பணியைச் செய்து, அவர்களுக்கு எது தவறாக நடக்கிறது, அதை எப்படிச் சரி செய்வது என்று கூறுகிறது. இதற்கு மேலாக, எங்கள் ஒருங்கிணைந்த வேலை ஓட்டங்கள் நுகர்வோர் வங்கிகளுடனும் கடன் நிறுவனங்களுடனும் ஆன்லைனில் இணைந்து பல்வேறு பரிமாற்றங்களைச் செய்யவும் ஆதரவளிக்கிறது."
Satya தொடர்கிறார், "நாங்கள் அறிமுகம் செய்ததிலிருந்து CREDITSEVA®-வில் பயனர் செலவழிக்கும் நேரத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். எனினும், மிகப்பெரிய சவால் என்னவென்றால், கடன் அறிக்கை/மதிப்பீட்டைப் பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வும், கடன் சம்பந்தமான பரிமாற்றங்களை அவர்கள் எப்படிச் செய்யவேண்டும் என்ற அறிவாண்மையுமே ஆகும். இதுவே எங்களை, நுகர்வோருக்கு இவ்விஷயங்களை எளிதாக்குவதை நோக்கியும், பரிமாற்றங்களில் எளிமையைக் கொண்டு வருவதை நோக்கியும், கடன் சம்பந்தமான முடிவுகளை வேகமாக எடுப்பதை நோக்கியும் வேலை செய்யத் தூண்டியது. Experian உடனான எங்கள் உறவு எங்களையும் நுகர்வோரையும் இந்த திசையில் நிச்சயமாகச் செல்ல உதவும்."
CreditSeva-வைப் பற்றி:
CreditSeva ஒரு கடன் பகுப்பாய்வு மற்றும் கடன் தயாரிப்புகள் சந்தையாகும், இது ஆசியாவின் முதல் நுகர்வோர் கடன் பகுப்பாய்வு ஆன்லைன் கருவியாகும். இந்த நிறுவனம் - சிங்கப்பூரில் தலைமைச் செயலகம் உள்ள ஒரு FinTech தொடக்கநிலை நிறுவனமாகிய Icredizen Financial Technologies Private Limited ஆகும். இதன் மேம்பாட்டு மற்றும் ஆதரவு மையம் இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ளது. இந்த Fintech தொடக்கநிலை நிறுவனம், BSFI பிரிவிற்கு அடுத்த தலைமுறை நுகர்வோர் நிதித் தொழில்நுட்ப செயல்பாடுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது, மேலும் இது IBJ, Hindu Business line, Straits Times, Tech in Asia, Financial News & Business Times ஆகிய சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், இந்தியாவில், 2014-இல் NASSCOM-இன் 10k தொடக்கநிலை நிறுவனங்களின் முதல் தொகுப்பிலும், ஆசியாவின் முதல் 10 Fintech தொடக்கநிலை நிறுவனங்கள் 2015-யிலும் & 2017-இல் ஹாட் 100 தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்களிலும் இறுதிப்பட்டியலை அடைந்தது. இது சர்வதேச வங்கிகள், எம்என்சி-க்கள் மற்றும் Big-4 நிதி ஆலோசனை நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து கூட்டாக 50+ ஆண்டுகள் அனுபவமுள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், CA's & IIM மாணவர்கள் போன்றவர்களின் ஒரு வலுவான குழுவால் தொடங்கப்பட்ட ஒரு சிறிய தொடக்கநிலை நிறுவனமாகும்.
Media Contact:
Pankaj Thyadi
[email protected]
+91-40-64626661
CreditSeva
Share this article