மும்பை, June 14, 2017 /PRNewswire/ --
இந்தியாவில் குறைந்த விலையில் வீடுகளை அளிப்பதில் முன்னணி வகிக்கும் XRBIA, 2017ன் Q4ல் முற்றிலும் வலிமையான செயல்திறனை உறுதி செய்யும் மற்றும் புதிய நிதியாண்டில் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு முதலீட்டாளர் தகவலை வெளியிட்டுள்ளது.
(Logo: http://mma.prnewswire.com/media/470753/XRBIA_Logo.jpg )
கடந்த காலாண்டில், XRBIA இந்த ஆண்டின் மொத்த விற்பனை விகிதமான 6,836 யூனிட்களில் கிட்டத்தட்ட பாதிக்கு சமமான 3,670 யூனிட்கள் விற்பனை விகிதத்தை அடைந்துள்ளது. ரூ. 900 கோடிக்கு சமமான இந்த ஆண்டு விற்பனை விகிதம், முந்தைய நிதியாண்டின் இரட்டிப்பைவிட அதிகம் என்பதை முன்னணி ரியல் எஸ்டேட் ஆய்வாளர், டேவிட் ஈடன், "இங்கு விற்பனை பாதை முற்றிலும் வலிமையாக உள்ளது" என்று குறிப்பிடுகிறார்.
XRBIAவின் வளர்ச்சி வாய்ப்பு நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிறைவு செய்யப்பட்ட மூன்று செயற்திட்டங்கள் மட்டுமல்லாமல், தற்போது 9 செயற்திட்டங்களுக்கு கட்டுமானப்பணிகள் நடந்துவருகின்றன. மேலும் 10 செயற்திட்டங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் செயற்திட்டங்கள் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற முக்கியமான இந்திய நகரங்களில் அமைந்துள்ளதால் நிறுவனம் தேசம் முழுவதும் தனது இருப்பை தக்கவைக்கும்.
கட்டுமானம், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் முழுவதிலும் செயல்திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், ஏற்படவுள்ள வளர்ச்சிகளில் எதிர்பார்க்கப்படும் லாப வரம்பு கிட்டத்தட்ட 40%ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் ரூ. 8,400 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்குமென்றும், ரூ. 5,000 கோடிக்கு மேல் மொத்த லாபம் கிடைக்குமென்றும் மதிப்பிடப்படுகிறது. மொத்தமாகப் பார்த்தால், மூலதன நெட்வொர்க், இந்தப் பகுதியில் XRBIAவின் தற்போதைய மதிப்பு ஏறக்குறைய ரூ. 2,300 கோடியாக இருக்குமென்று கூறுகிறது.
XRBIAவின் நீடித்த வளர்ச்சி என்பது நுகர்வோர் மத்தியில் அதன் வணிக முறையைப் பிரபலப்படுத்த உதவுகிறது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களை இலக்காகக் கொண்டு, குறைந்த விலையில் ஆடம்பரமான வசதிகளை அளிக்கும் காம்பாக்ட் வீடுகளைப் பிரத்யேகமாக உருவாக்குகிறது. XRBIAவின் காம்பாக்ட் வீடுகளில் வர்த்தக வசதி, பசுமையான திறந்தவெளி, ஜிம் மற்றும் நீச்சல் குளம் போன்ற பகிர்ந்தளிக்கப்பட்ட கட்டமைப்பு உள்ளது. காம்பாக்ட் என்றால் தனிமை பயத்தை ஏற்படுத்தும் என்கிற அர்த்தமில்லை என்பதை உறுதி செய்கிறது.
இந்தியாவின் மக்கள் தொகையால் வீடுகளின் தேவை அதிகரித்துள்ளது. 2030க்குள் இந்தியாவில் நகரங்களில் 70% புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவில் விலைக் குறைவான வீடுகளின் பற்றாக்குறை இனிவரும் ஆண்டுகளில் அதிகரிப்பதற்கு சாத்தியம் உள்ளது (மெக்கின்சே அண்டு கம்பெனி, 2010). இதனை வைத்து பார்த்தால், XRBIAவின் பெரிய, விலைக் குறைந்த, நிலைத்துநிற்கும் வீடுகளின் தேவை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது.
முழு அறிக்கையையும் படிக்க இதனைப் பாருங்கள்: http://www.proactiveinvestors.co.uk/PRIVATE:XRBI/Xrbia/
XRBIA டெவலப்பர்ஸ் லிமிட்டெட் பற்றி:
கட்டுமானம், மேலாண்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் அற்புதமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி '2030க்குள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் 100 நகரங்களை' உருவாக்குவதுதான் XRBIAவின் நோக்கம். XRBIA ஏற்கனவே ஒரு மாதத்திற்கு 2000 வீடுகளின் விற்பனை மற்றும் கட்டுமான விகிதத்தை அடைந்து, குறைந்த விலையில் வீடுகளை அளிக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகத் தன்னை நிலைநாட்டியுள்ளது. XRBIA அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களின் தேவைகளை நிறைவேற்ற, குறைந்த விலையில் சிறந்த வசதிகளைக் கொண்ட வீடுகளை அளிக்கிறது.
ஊடகத் தொடர்பு:
Namrata Aswani
Business Head
ITW Playworx
[email protected]
+91-9920710261
Share this article