வரும் அக்டோபர் 28 முதல் 30, 2021-வரை மும்பையில் Personal Care Ingredients & Lab India நடத்தப்படவுள்ளது
மும்பை, இந்தியா, பிப் 10, 2021 /PRNewswire/ -- அழகுத் துறைக்கான கச்சாப் பொருட்கள், உட்பொருட்கள் மற்றும் ஆய்வகத்திற்காகவே நடத்தப்படும் முதலாவது Personal Care Ingredients & Lab (PCIL) கண்காட்சி வரும் அக்டோபர் 28 முதல் 30, 2021-வரை மும்பையில் உள்ள Bombay Convention and Exhibition Center-ல் நடத்தப்படவுள்ளது. மிகவும் புகழ்பெற்ற Cosmoprof India கண்காட்சியுடன் இணைந்து இந்தக் கண்காட்சியும் ஒரே இடத்தில் நடத்தப்படுகிறது. Informa Markets in India மற்றும் BolognaFiere Group-னால் நடத்தப்படும் இந்த PCIL இத்துறையைச் சார்ந்த வாங்குவோரும் விற்போரும் சந்திக்கவும், நெட்வொர்க் ஏற்படுத்தவும், நுகர்வோரின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், தங்களுடைய தொழில்களை வளர்க்கவும் நல்லதொரு தளமாக அமையும், தனிப்பட்ட பராமரிப்பு உட்பொருட்கள் துறையின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். காஸ்மட்டிக் இன்கிரேடியன்ட்ஸ், மூலப்பொருட்கள் மற்றும் ஒப்பந்த உற்பத்தி, பேக்கேஜிங் மற்றும் எந்திரம், ஆயுர்வேதா, தாவர எண்ணெய்கள், நறுமண உட்பொருட்கள், ஆய்வகச் சாதனங்கள், மற்றும் பரிசோதனை மற்றும் ஒழுங்குமுறைத் தீர்வுகள் உட்பட்டவை கண்காட்சியில் இடம்பெறும் முக்கியமான பொருட்களாகும்.
"PCIL - Personal Care Ingredients & Lab என்பது இந்தியாவில் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய ஆர்வமாக உள்ள எம்முடைய பங்குரிமையாளர்களுக்கு ஒரு புதிய தொழில் வாய்ப்பாக அமையும்," - என்றார் BolognaFiere-யின் தலைவரான Gianpiero Calzolari. - "ஆய்வகத் தொழில்நுட்பங்களில் புதிய விஷயங்களையும், மிகப் புதுமையான இரசாயனங்களையும், புதிய உட்பொருட்களைப் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளையும் அழகுசாதன உற்பத்தியாளர்களும் சப்ளையர்களும் கண்டறிவார்கள். PCIL அழகுத் துறையின் வளர்ச்சி பற்றிய தனித்துவமான, உலகளாவிய கண்ணோட்டத்தை அளிக்கும், எதிர்காலச் சவால்களையும் பாணிகளையும் சந்திக்க புதிய தீர்வுகளை முன்வைக்கும்."
PCIL-ன் முதலாவது கண்காட்சியை அறிவித்து Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr. Yogesh Mudras பேசும்போது, "COVID-19 பெருந்தொற்றின் காரணமாக நுகர்வோரின் மனதில் தெளிவான மற்றும் நிரந்தரமான ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது, அவர்களுடைய விழிப்புணர்வும், தனிப்பட்ட மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் தயாரிப்புகள் தொடர்பாக அவர்களுடைய வாங்கும் முறையும் மாறியிருக்கிறது. தனிமைப்படுத்துதலும் சமூக இடைவெளியும் 'எனக்கான நேரம்'-ம் நுகர்வோரின் சுய பராமரிப்புத் துறையில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது, இத்துறைக்கு உந்துதலைக் கொடுத்திருக்கிறது. மேலும், புத்தாக்கங்களே சந்தைத் தேவைகளைத் தூண்டுவதால், நுகர்வோர் தாங்கள் வாங்கும் தயாரிப்புகள் பற்றி அதிக கவனமாக இருப்பதால் இயற்கையான உட்பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தோல் மற்றும் கேசப் பராமரிப்புத் துறையில் குறிப்பாக தயாரிப்பாளர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. வரும் அக்டோபர் 2021-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் Cosmoprof India, Personal Care Ingredients & Lab India (PCIL)-யின் முதலாவது கண்காட்சி தனிப்பட்ட பராமரிப்பு உட்பொருட்கள், எந்திரங்கள், மற்றும் பேக்கேஜிங்கில் புதுமைகள் மற்றும் பாணிகளைக்கொண்டு வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதனோடு துறையின் நிபுணர்களின் அறிவுசார் அமர்வுகளும் உள்ளன. அக்டோபர் 2021 மாதத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதால் சந்தை இயல்புநிலையை அடையவும் சந்தையில் நம்பிக்கை உருவாகவும் அதிக நேரம் கிடைக்கும். இந்தியாவில் தடுப்பு மருந்துகள் வந்து விட்டதாக செய்திகள் வந்துள்ள நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கண்காட்சியாளர்களும் பார்வையாளர்களும் ஈடுபடுவதற்கு சிறந்த ஒட்டுமொத்த நிலையை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இத்துறை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கிறோம்."
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.pci-labexpo.com/ என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
BolognaFiere Group பற்றி (www.bolognafiere.it)
BolognaFiere Group என்பது அழகுசாதனப் பொருட்கள், அழகுநயப்புக் காட்சிகள், கட்டடக்கலை, கட்டுமானம், கலை மற்றும் கலாச்சார வர்த்தகக் கண்காட்சிகளை நடத்தும் உலகின் முன்னணி அமைப்பாகும், உலகின் மிக மேம்பட்ட கண்காட்சி மையங்களுள் ஒன்று இருப்பது இதன் பெருமையளிக்கும் அம்சமாகும். BolognaFiere Group மூன்று கண்காட்சி மையங்களை (Bologna, Modena, மற்றும் Ferrara) நடத்தி வருகிறது, இத்தாலியிலும் வெளிநாடுகளிலும் 80-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்துகிறது. BolognaFiere Group-ல் பல நிறுவனங்கள் இணைந்துள்ளன, பல நிகழ்ச்சி சேவைகளை வழங்கி வருகிறது, தன்னுடைய கண்காட்சிகளில் வெற்றிகரமாகப் பங்கேற்கத் தேவையான எல்லா சிறப்பு சேவைகளையும் விளம்பர நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
BolognaFiere Cosmoprof பற்றி(www.cosmoprof.com)
BolognaFiere Cosmoprof என்பது BolognaFiere Group-ன் ஒரு அங்கமாக Cosmoprof Worldwide Bologna-வை நடத்திவருகிறது. Cosmoprof Worldwide Bologna என்பது 1967-ல் நிறுவப்பட்டு இத்தாலியின் Bologna-வில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் உலகின் அழகு தொழில்முறையாளர்கள் கூடும் ஒரு மிக முக்கியமான சந்திப்புத் தளமாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட Cosmoprof-ல் 265.000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உலகெங்குமிருந்து 150 நாடுகளிலிருந்து கலந்துகொண்டார்கள். முந்தைய ஆண்டுகளைவிட 10% அதிகமாக வெளிநாட்டினர் கலந்துகொண்டனர், 3,033 கண்காட்சியாளர்கள் 70 நாடுகளிலிருந்து கலந்துகொண்டனர். Cosmoprof உலகெங்கும் நடத்தப்பட்டு வருகிறது, Bologna, Las Vegas, Mumbai, மற்றும் Hong Kong, China போன்ற பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது (Cosmoprof Worldwide Bologna, Cosmoprof North America, Cosmoprof India, மற்றும் Cosmoprof Asia இவற்றை ஏற்பாடு செய்கின்றன). சமீபத்தில் நெட்வொர்க்கின் ஐந்தாவது கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது: தாய்லாந்தில் நடத்தப்படவிருக்கும் Cosmoprof CBE ASEAN தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அழகூட்டும் பொருட்கள் துறையின்மீது கவனம் செலுத்தும். Cosmoprof தளம் தென் அமெரிக்காவில் German group Health and Beauty-யினை வாங்கியிருப்பதால் ஐரோப்பாவில் தன்னுடைய தாக்கத்தை வலுப்படுத்தும், Beauty Fair -Feira Internacional De Beleza Profissional மற்றும் ஆசியாவின் கூட்டு முயற்சிக்கு நன்றி.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் Informa Markets அளித்து வருகிறது. உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம், வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண Informa Markets உதவுகிறது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் அதன் தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இக்குழு 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எங்களைப் பின்தொடர! https://www.pci-labexpo.com/ l Facebook l LinkedIn l Instagram l Twitter
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1435608/PCIL.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1341683/BolognaFiere_Informa_Markets_Logo.jpg
Share this article