Informa Markets in India மற்றும் KDCL ஆகியவை இணைந்து INFRACONEX-ஐ தொடங்கின
- இந்திய கட்டுமானக் கருவிகள் சந்தைக்கு ஒரு விரிவான தளமானது ஆகஸ்ட் 2021-ல் நடத்தப்படவுள்ளது
காந்திநகர் மற்றும் மும்பை, இந்தியா, Sept. 18, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), ஒரு கூட்டு முயற்சியாக D Communication Ltd (KDCL)-உடன் இணைந்து இந்திய கட்டுமானக் கருவிகள் துறைக்கு உதவும் வகையில் ஒரு மிகப் புதிய கண்காட்சியான 'INFRACONEX'-ஐ நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. குஜராத்தின் காந்தி நகரில் வரும் 2021 ஆகஸ்ட் மாதம் 6 முதல் 8-ஆம் தேதிவரை நடத்தப்படவிருக்கும் இந்த மூன்று நாள் கண்காட்சி புதிய கருவிகள், கட்டுமானத்தில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின்மீது கவனம் செலுத்தவிருக்கிறது. கருததாழமிக்க மாநாடு, கருத்தரங்குகள் மற்றும் தயாரிப்பைக் காட்சிப்படுத்துதல்கள் வழியாக துறையின் முன்னணியாளர்களுக்கு தீர்வுகளை அளிக்கும் விதத்திலும், இந்தியக் கட்டுமானக் கருவிகள் சந்தையின் சவால்களை முன்னிருத்தும் வகையிலும் அமையும். Construction Equipment Rental Association (CERA)-வின் நிறுவனர் தலைவரான Shri Satin Sachdeva; Gujarat Contractors Association (GCA)-ன் தலைவரான Shri Arvind Patel; GIHED CREDAI-யின் மரியாதைக்குரிய செயலரான Shri Sanket Shah, Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Shri Yogesh Mudras மற்றும் KDCL-ன் ஹெட் பிராஜெக்ட்ஸ்-ஆன Shri Samir Kapoor ஆகியோரின் முன்னிலையில் மெய்நிகர் ஊடக மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
COVID-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட முழுஊரடங்கைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரமும் கட்டுமானத் துறையும் கடுமையான சரிவைக் கட்டிருக்கின்றன. இந்த முன்னிகழ்வற்ற நிகழ்வுகள் காரணமாக இத்துறை செயல்பாடற்ற நிலைக்கு வந்ததோடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். ஏனெனில் தனியார் தொழில்கள் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டதோடு செலவையும் மிகவும் குறைத்துக் கொண்டனர். குறிப்பாக நடப்பு பெருந்தொற்றுச் சூழ்நிலையில் தொழில்துறைகள் ஒரு மீட்சியை எதிர்நோக்கும் சூழலில் சந்தையில் உள்ள போக்குக்கு உகந்த வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படும் நாட்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. GLEEDS நடத்திய சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, தொழில் மிக மெதுவாக முன்னோக்கிச் செல்லுவதாக சந்தையில் உள்ள நிலவரம் காட்டுகிறது. எனினும், Q4 2020 மோசமானது முதல் ஓரளவு வருவாய் தருவதாக இருக்கும் என்றும் 2020-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டால் Q2 2021-ல் இயல்புநிலை திரும்பிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் Atmanirbhar Bharat மற்றும் இந்தியாவின் GDP-யில் MSME-யின் பங்களிப்பை தற்போதைய 29%-லிருந்து 50%-க்கும் அதிகமாகக் கொண்டு செல்லும் தொலைநோக்கும் உள்ள சூழலில், MSME பவிலியனில் சிறப்பு விலைகளை MSME கொண்டுவரவும் பாலிசி தயாரிப்பாளர்களும் நுகர்வோரும் சந்திக்கவும் இந்த நிகழ்ச்சி உதவும். ஆன்லைன் வர்த்தகத்தை நடத்துவதைச் சுலபமாக்குவதோடு, அந்நிய தயாரிப்பாளர்களுடன் உலகளாவிய நெட்வொர்க்கிங்குக்கான வினையூக்கியாகவும் இந்த நிகழ்ச்சி அமையும்.
INFRACONEX 2021-ஐ அறிவித்து மெய்நிகர் ஊடகச் சந்திப்பில் பேசிய Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras, "கருவிகள் மற்றும் பொருட்கள் உட்பட இந்தியச் சாலை உட்கட்டமைப்பு மற்றும் நெடுஞ்சாலை கட்டுமானத் தொழில்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் மிகப்பெரிய துறைகளாகும். விவசாயத்திற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய துறையாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த சமூக மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பை உருவாக்க அரசு வரும் 2020-25-க்குள் ₹111 டிரில்லியன் முதலீடுகளைப் பெற இலக்கு வைத்துள்ள நிலையில், கட்டுமானக் கருவிகள் சந்தை போன்ற இதர துறைகளும் வளர்ச்சயைக் காணும். கட்டுமானக் கருவிகள் நிறுவனங்கள், விநியோகிப்பாளர்கள், பாலிசி உருவாக்குவோர், அரசு, நிதி நிறுவனங்கள், சங்கங்கள், அமைப்புகள், மன்றங்கள் மற்றும் கட்டுமானக் கருவிகள் சந்தை சார்ந்த கூட்டாளித்துவங்கள் போன்ற எல்ல துறைசார்ந்தவர்களுக்கும் ஒரு அனுபதை அளிப்பதையே InfraConex நோக்கமாகக் கொண்டுள்ளது. MSME-களுக்கு நிதியளிப்பது தொடர்பான அரசின் கொள்கைகளை சிறப்பாகப் புரிந்துகொள்ளுவதற்கு நிதி நிறுவனங்களுடன் தெடர்புகொள்ள கட்டுமானத் துறையில் உள்ள MSME நிறுவனங்களுக்கு இந்தக் கண்காட்சி உதவும். இந்தியாவில் உள்ள 30 % கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குஜராத்தைச் சேர்ந்த MSMEs என்பதால் இது உதவியாக இருக்கும். MSMEs-னால் தயாரிக்கப்படும் புதுமையான தயாரிப்புளைக் காட்சிப்படுத்த சிறப்பு தயாரிப்புகள் மண்டலமும் உருவாக்கப்படும்" என்று தெரிவித்தார்.
"InfraConex-காக KDCL-உடன் கைகோர்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். அவர்களுடைய உலகளாவிய நெட்வொர்க்கிங், முன்னோக்கிய திட்டமிடல் மற்றும் செயலாக்கம் எங்களுக்கு உதவும். மேற்கத்திய பிராந்தியத்தில் ஒரு பலமான அடித்தளத்தைக் கொண்டுள்ள KDCL கட்டுமானக் கருவிகள் துறைக்கு ஒரு நல்ல தளத்தை உருவாக்கும். அவர்களுடைய ஒரு வளமான கூட்டாளித்துவத்தை எதிர்நோக்குகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர்கள், சப்ளையர்கள், விற்பனையாளர்கள், பாலிசி உருவாக்குவோர், முதலீட்டாளர்கள், கிளை முகவங்கள் மற்றும் சங்கங்களின் பல்வேறு பயனர்களுக்கிடையே அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்குவதன் மூலம் கட்டுமானக் கருவிகள் சந்தையின் வளர்ச்சிக்கு இந்தக் கண்காட்சி வினையூக்கியாக இருக்கும். அடுத்த வளர்ச்சிக் கட்டத்திற்கு முன்னேற தன்னுடைய முன்னோடியான தொழில்நுட்பங்களையும், ஆட்டோமேஷனையும் தீர்வுகளையும் துறைக்கு அளிக்கும். துறையின் பங்குரிமையாளர்கள் சமீபத்திய தயாரிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் கண்டறிய உதவுவதோடு CAPEX சார்ந்த முடிவுகளை எடுக்கவும் அவர்களுக்கு உதவும். மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக துறையின் முக்கிய நிபுணர்களின் அறிவுசார் மன்றத்தையும் இந்தக் கண்காட்சி நடத்தும். இத்துறை சந்திக்கும் சவால்கள் பற்றியும், துறையின் எதிர்கால் பற்றியும் சிந்தனையைத் தூண்டும் உரையாடல்களும் நடத்தப்படும்.
Indian Construction Equipment Manufactures Association-I-CEMA; Construction Equipment Rental Association- CERA; Crane Owners Association Of India- (COAOI); Builders Association of India- BAI; Maharashtra Chamber Of Housing Industry- CREDAI- MCHI; Confederation of Real Estate Developers' Associations of India (CREDAI); CREDAI Gujarat; National Real Estate Development Council- NAREDCO; Tunneling Association of India- TAI; Gujarat Contractors Association; Ready Mix Concrete Manufactures Association -RMCMA மற்றும் Fluid Power Society of India போன்ற சங்கங்களும் இந்த Infraconex-க்கு ஆதரவளிக்கின்றன.
எர்த்மூவிங், டிமோலிஷன் & டிரான்ஸ்போர்ட் எகியூப்மெண்ட்; சாலைகள், துறைமுகங்கள் & அடிக்கட்டுமான சாதனம், கட்ட & காங்கிரீட் துறை; லிஃப்டிங், ஹேண்ட்லிங் & ஹைட்ராலிக்; ஆட்டோமேஷன் & IT; மற்றும் பாதுகாப்புக் கருவிகள் போன்ற கட்டுமானத்தோடு தொடர்புடைய பல்வேறு துறையினர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். COVID பெருந்தொற்றுக்குப் பின்னர் கட்டுமானத் தொழில்களின் முதலாவது நேரடியான கண்காட்சியானது கட்டடக் கலைஞர்கள், பில்டர்கள் / டெவலப்பர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள், விநியோகிப்பாளர்கள் / விற்பனையாளர்கள், பெரிய EPCs, நிதி / லீசிங் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், தொழில் சங்கங்கள், சுரங்க நிறுவனங்கள், OEM தயாரிப்பாளர்கள், எண்ணெய்த் தூய்மிப்பு ஆலைகள், துறைமுக நிறுவுனங்கள், மின்நிலையங்கள், பொதுத்துறை முடிவெடுப்பாளர்கள், வாடகை நிறுவனங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள், மற்றும் உதிரி பாகங்கள் & பாகங்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோரை இந்தக் கண்காட்சி கவர்ந்திழுக்கும்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
KDCL பற்றி
K and D Communication Ltd என்பது ஒரு இருபது ஆண்டு அனுபவமுள்ள நிறுவனமாகும். தொழில்துறை கண்காட்சிகளையும் மாநாடுகளையும் நடத்துவதில் அனுபவமிக்க நிறுவனம். ஏற்பாடு செய்தல், நிர்வகித்தல் மற்றும் உருவாக்குதல் போன்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் முதலாவது குழு இது. ENGIMACH, India Machine Tools Show, Rajkot & Pune Machine Tools Show போன்ற பல்வேறு கண்காட்சிகள் வழியாக உலகளாவிய அளவில் இந்திய உற்பத்தித் தொழிலகங்களை KDCL பிரதிநிதித்துவம் செய்கிறது. India Science Congress, Credible Chattisgarh, INDIA Mobile Congress, Vibrant Gujarat Global Trade Show, Plastindia முதலான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் கண்காட்சிகளையும் மாநாடுகளையும் நடத்துவதில் அவர்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறது. குஜராத்-ல் காந்திநகரில் ஒரு மிக நவீன மிக மிக அருமையான கண்காட்சி மையத்தை உருவாக்கி KDCL தன்னையே முன்னிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.kdclglobal.com/ என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra - [email protected]
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1275376/INFRACONEX_Logo.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1275377/KDCL.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article