மும்பை, January 14, 2016 /PRNewswire/ --
விஸ்லிங் உட்ஸுக்குப்பின், முற்றிலும் ரொக்கமற்றதாக ஆகும் இரண்டாவது வளாகமாக Azam பெருமை பெறுகிறது.
MOM Wallet பிராண்டுக்கு உரிமையாளரான, இந்தியாவின் முன்னணி மொபைல் பணம் செலுத்தும் தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான My Mobile Payments Ltd (MMPL), இதுவரைக் கண்டிராத அளவிற்கு பிரமிப்பூட்டும் வகையில் புனேயிலுள்ள, Azam Campus என்றும் அழைக்கப்படுகின்ற Maharashtra Cosmopolitan Education Society (M.C.E. Society)-ல் அமைந்துள்ள பல்வேறு நிறுவனங்களில் பயிலும் 27,000 மாணவர்களை சேர்த்துள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160113/10138028 )
இந்த ஆள்சேர்ப்பானது, எந்தவொரு மொபைல் வாலெட்டாலும் எந்தவொரு இடத்திலும் செய்யப்படாத மிகப் பெரிய ஒற்றையான, நேரடியாக வாடிக்கையாளரை அணுகும் முயற்சியாகும். இச்செயல்படுத்துதல், மும்பையிலுள்ள Whistling Woods International (WWI)-ல் 2015 செப்டம்பர் மாதம் MOM Wallet மேற்கொண்ட வெற்றிகரமான முன்னோடித் திட்டத்தின் வழித்தடத்தில் வருவதாகும், இதில் WWI'ன் வருடாந்திர 'Celebrate Cinema' விழாவின்போது 700-க்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டனர், மேலும் இது மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசரியர்களுக்காக வளாகத்திலுள்ள சிற்றுண்டியகத்தில் ரொக்கமற்ற பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது. MCE Society'ன் Azam Campus முழுமையாக ரொக்கமில்லாமல் ஆகின்ற இரண்டாவது இடமாகும்.
My Mobile Payments Ltd-ன் நிர்வாக இயக்குனரான Shashank Joshi கூறியதாவது, "Azam Campus-ல் நாங்கள் செயல்படுத்தியிருப்பது, நாட்டிலுள்ள எந்தவொரு m-வாலட் பிராண்டினால் செய்யப்பட்டதையும்விட மிகப் பெரிய வாடிக்கையாளர்களை சேர்க்கின்ற ஒற்றை நிகழ்வாக இருக்கலாம். இது, இப்பத்தாண்டின் இறுதியில் முழுமையாக ரொக்கமின்றி ஆகின்ற எங்கள் இலக்கினை நோக்கி நாங்கள் எடுத்து வைக்கின்ற மேலும் ஒரு அடியாகும்."
இந்நிகழ்ச்சியில் பேசும்போது, M.C.E. Societyயின் தலைவரான, P.A. Inamdar கூறியதாவது, "1948-ல் நாங்கள் நிறுவப்பட்டது முதல், எங்கள் வளாகம் எப்போதுமே, 'walking the talk'-ல் நம்பிக்கை கொண்டதாகும், எனவே எங்கள் வளாகத்தை நாங்கள் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்தபோது, ரொக்கமில்லாத நிலைக்குச் செல்வதே அடுத்த தர்க்கரீதியான நிலையாக இருந்தது. சிற்றுண்டிசாலைகள் முழுமையாகப் பொறுப்பேற்கும் அதே நேரத்தில், பயனர்களுக்கும் வசதியாக இருப்பதை இம்முயற்சி உறுதி செய்யும். நாங்கள் MOM Wallet உடன் கூட்டிணைய முடிவு செய்தோம், ஏனென்றால் இப்பயன்பாடு உபயோகிக்க எளிதானது, அதன் திறன்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது மற்றும் அவர்களுடைய சேவை மிகச்சிறப்பாக இருக்குமென்றும் நம்புகிறோம்."
இப்போது இவ்விரு வளாகங்களிலும் உள்ள மாவணவர்கள், சிற்றுண்டிசாலை, வாகன நிறுத்தம், நகலெடுத்தல், வளாகத்திலுள்ள அல்லது அதனைச் சுற்றியுள்ள உணவகங்கள் ஆகியவற்றில், தங்களுடைய MOM wallet-களைப் பயன்படுத்தி, சிறிய டிக்கெட் பரிமாற்றங்களைச் செய்து கொள்ளலாம். விரைவிலேயே MOM wallet-களைப் பயன்படுத்தி அவர்களால் தங்கள் கல்லூரி கட்டணங்கள் நூலகச் சேவைகள் ஆகியவற்றிற்கும் பணம் செலுத்த முடிவதுடன், மொபைல் டாப் அப்கள், நுகர்பயன் சேவைக் கட்டணங்களை செலுத்த, சினிமா டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்ய மற்றும் DTH ரீசார்ஜ் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
My Mobile Payments Ltd மற்றும் MOM Wallet பற்றி
My Mobile Payments Limited (MMPL) என்பது, தனது MOM wallet பிராண்டின் மூலம் செயல்படுகின்ற, இந்தியாவின் முன்னணி மொபைல் பணம் செலுத்தும் தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும், இச்சேவை ஒவ்வொருவருக்கும் விரைவான, எளிய மற்றும் திறன்மிக்க பணம் செலுத்தும் தீர்வுகளை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. MOM Wallet-ஐ பயன்படுத்தி, ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம், நுகர்வோர் பொருட்களை வாங்கலாம், டாப் அப்கள் செய்யலாம், நுகர்பயன் கட்டணங்களை செலுத்தலாம், DTH ரீசார்ஜ்கள் மற்றும் பலவற்றையும் செய்யலாம்.
MOM Wallet தற்போது, பதிவுபெற்ற விற்பனையாளர்களிடமிருந்து நல்ல பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு பதிவுபெற்ற பயனர்களுக்கு உதவும் ஒரு பணம் செலுத்துகின்ற முறையை அமைப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. MOM Wallet, நாட்டின் இரண்டாவது மொபைல் புரட்சியை நுகர்வோரின் கரங்களில் வழங்கியுள்ள, இந்தியாவின் பிரமாண்டமான மொபைல் சார்ந்த பணம் செலுத்தும் தளமாகும். நாங்கள் வீதியில் நடமாடுகின்ற ஒவ்வொரு நபருக்கும் தொல்லையற்ற பணம் செலுத்துகின்ற திறனை அளிப்பதையே நோக்கமாகக் கொண்ட வீட்டுவாயில் சேவைகள் மற்றும் மொபைல் பயன்பாட்டு சேவைகளை வழங்குகிறோம்.
My Mobile Payments Ltd, பல பெருமைமிக்க தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. இதில், 2015-ல் 'Top 100 Red Herring Global' பட்டியலில் இடம்பெற்றிருப்பதும், வரிசையாக இரண்டு ஆண்டுகளாக (2014 மற்றும் 2015) 'Red Herring Top 100 Asia' பட்டியலில் இடம்பெற்றிருப்பதும், 2014 மற்றும் 2015-ல், உருவாகிவரும் பணம் செலுத்துதல்களுக்கான 'Best Wallet of the Year' விருதினை வென்றிருப்பதும் அடங்கும்.
மேலும் தகவல்களுக்கு அணுகவும்: http://www.money-on-mobile.com
M.C.E. Society மற்றும் Azam Campus பற்றி:
M.C.E. Society புனேயிலுள்ள மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும், இது கல்வித் துறையில் பல முன்னோடி சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தொலைநோக்குக் கல்வியாளரான P.A. Inamdar அவர்களால் வழிநடத்தப்படும் M.C.E. Society-யில் உள்ள அதனுடைய 28 நிறுவனங்களில், 27,000-க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த வளாகத்தில், நவீன நூலகம் மற்றும் படிப்பறை, பரிசோதனைக்கூடம் மற்றும் வகுப்பறைகள் உள்ளன. இவ்வனைத்து நிறுவனங்களும், விரைவான மற்றும் சிறந்த தகவல் பரிமாற்றத்திற்காக VOIP (Voice Over Internet Protocol) டெலிஃபோனி மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இயன்றவரை மிகச் சிறந்த வசதிகளை வழங்குவதே வளாகத்தின் தாரக மந்திரமாக எப்போதுமே இருந்து வருகிறது.
M.C.E. Society மற்றும் Azam Campus பெற்றுள்ள வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை இந்திய அரசு பாராட்டி, அங்கீகரித்துள்ளது. சமீபத்தில், M.C.E. Society-க்கு, இந்தியாவின் மிகச் சிறந்த சிறுபான்மையினருக்கான கல்வி வளாகத்திற்கான இந்திய அரசின் சமூக நீதி மற்றும் ஆற்றலளிப்பு அமைச்சகத்தின் Maulana Azad Education Foundation நிறுவிய முதல் "Maulana Abul Kalam Azad Literacy Award" வழங்கப்பட்டது. M.C.E. Society மற்றும் Azam Campus, மகாராஷ்டிரத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கத்தின் ஆதாரமாகவும், அவை பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறது.
மேலும் வினவல்களுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
விபுல் போன்ட
[email protected]
91-9920384555
Veriitte Consulting
Share this article