மும்பை, January 21, 2016 /PRNewswire/ --
இந்தியாவின் மிகப் பெரிய, உலகப் புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான், ஆசியாவின் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் நேரடி வீடியோ சமூகத் தளமான #fame-ன் மூலம், உலகெங்கிலும் உள்ள தனது ரசிகர்களுடன் நேரடியாகப் பேசி அசத்தவிருக்கிறார்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160121/324492 )
உலகின் மிகவும் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரமாகக் கருதப்படும் ஷாருக், உலகம் முழுவதும் ரசிகர்களின் பிரமாண்டமான ஆதரவைப் பெற்றிருக்கிறார். ஒரு பில்லியனுக்கும் அதிகமான உலக ரசிகர் பட்டாளத்துடன், SRK என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற அவர், #fame வாயிலாக, பல நேரடிக் காட்சிகள் மூலம் தனது ரசிகர்களுடன் நேரடிப் பரிமாற்றங்களிலும், தொடர்பிலும் ஈடுபடுவார்.
பிரமிக்கத்தக்க உலக அளிலான இந்திய தூதராகப் புகழ் பெற்றுள்ள SRK, தனது ரசிகர்களுடன் இணைத்துக் கொள்வதற்கும், பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கும் சமூக ஊடகங்களை ஏற்பதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடியாகத் திகழ்கிறார். ஷாருக்கின் iamsrk , பிரபல சமூகத் தளங்களில், 35 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களுடன், ஏற்கனவே உலகின் மிகப் புகழ்பெற்ற மற்றும் மிகவும் செல்வாக்குள்ள அலுவல்சார் சமூக ஊடகப் பயனர்பெயராகத் திகழ்கிறது. இப்போது, #fame வாயிலாக, நேரடி வீடியோ காட்சிகள் மூலம், SRK ரசிகர்களால் அவருடன் பரிமாற்றத்தில் ஈடுபட முடியும் - இதில், வினா, விடை மற்றும் வாழ்க்கைப் பாடங்கள் முதல், அவருடைய பணி மற்றும் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்ச்சிகள் வரை, மேலும் அவர் நம்பிக்கை வைத்துள்ள விஷயங்களும் அடங்கும்.
http://www.multivu.com/players/English/7741451-shah-rukh-khan-beam-live-on-fame/
இவ்வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது, திரு. ஷாருக் கான் கூறியதாவது, "உலகம் முழுவதிலிருந்தும் இத்தனை ஆண்டுகளாக, இந்த அற்புதமான மனிதர்களிடமிருந்து பாசத்தையும், நேசத்தையும் பெறுவதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன். அவர்களை 'ரசிகர்கள்' என்று மட்டும் நான் அழைக்க விரும்பவில்லை, அவர்கள் எனக்கு அன்பையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர் மற்றும் இந்த அன்பை நான் அவர்களுக்குத் திருப்பித் தருகின்ற வழிமுறைகளை எப்போதுமே தேடி வருகிறேன். அவர்களில் ஏராளமானவர்களுடன் இணைத்துக் கொள்வதற்கான ஒரு சுலபமான வழியாக சமூக ஊடகங்கள் திகழ்கின்றன. அவர்கள் அனைவருடனும் வீடியோ பரிமாற்றங்கள் செய்வதற்கும், அவர்களை நோக்கி நெருக்கமாக ஓரடி எடுத்துவைப்பதற்கும், #fame இப்போது உதவுகிறது. எனவே, அனைவரையும் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன் - #fame-ல் iamsrk-ஐ தொடருங்கள். #fame-ல் எனது நேரடிக் காட்சிகள் மற்றும் பரிமாற்றங்களை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்."
இதன் தொடர்ச்சியாக, TO THE NEW Ventures (#fame ஆனது, TO THE NEW Ventures-ன் ஒரு பகுதியாகும்)-ன் CEOஆன திரு.PuneetJohar, கூறியதாவது, "ஒரு நேரடி வீடியோ சமூகத் தளமாக, ஆசியாவில் அது அறிமுகப்படுத்தப்பட்டது முதல், ஆறு மாதங்களுக்குள் 3 மில்லியனுக்கும் அதிகமான நிறுவல்களை நாங்கள் கண்டுள்ளோம் மற்றும் இத்தளத்திற்கு ஷாருக்கை வரவேற்பது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. தங்கள் திறன்களை உலகிற்கு எடுத்துக் காட்டும் பொருட்டு #fame-ஐ ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கு, திறமைமிகுந்த பல இளம் நபர்களுக்கு ஷா ருக் ஒரு தூண்டுகோலாக இருப்பார் என்றும் நாங்கள் நம்புகிறோம்."
நினைவுகூரும்போது, கடந்த அண்டு மே மாதம் தனது நேரடி வீடியோ பயன்பாட்டை #fame அறிமுகப்படுத்தியது, மற்றும் மிகக் குறுகிய காலத்திலேயே அது ஆசியாவிலேயே அதிகவேக வளர்ச்சி காணத் தொடங்கிவிட்டது. அறிமுகப்படுத்தப்பட்டது முதல், #fame 3 மில்லியன் தரவிறக்கங்களைக் கண்டதுடன், தற்போது 1 மில்லியன் மாதாந்திர செயல்பாடுமிக்க பயனர்களையும் கவர்ந்துள்ளது. தங்கள் மொபைலில் உள்ள ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலமாகவே பயனர்களால் நேரடி நிகழ்ச்சிக்குச் சென்று, தொடர்தலை உருவாக்க முடியும், இதனை, உருவாக்குகின்ற தொல்லை ஏதுமின்றி செய்ய முடியும். தாங்கள் தொடர்கின்ற நபர்களுடன் பயனர்களயால் நேரடியாக சாட் செய்ய முடியும், ஸ்டிக்கர்களுடன் அவர்களை ஈடுபடுத்தி, கருத்துக்களை அளிக்க முடியும். இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இதர சந்தைகளில் இத்தளத்தின் உள்நாட்டு பதிப்புகளை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், ஆகியாவில் தனது விரிவாக்கத்தை #fame தொடங்கியுள்ளது.
Download #fame on iOS, Google Play and 9apps stores or visit fame.live now.
#fame-ஐ பற்றி
#fame என்பது, ஆசியாவின் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் ஒரு நேரடி வீடியோ சமூகத் தளமாகும். ஓர் ஒருங்கிணைந்த 'திறமை முதலில்' யுக்தி மூலம், மொபைலின் புத்தாயிர அம்சத்திற்கு உதவும் #fame, அடுத்த 3 ஆண்டுகளில் 6-க்கும் அதிகமான நாடுகளில் தன்னை அமைத்துக் கொள்வதன் மூலம், ஆசியாவின் முதன்மை நேரடி வீடியோ சமூகத் தளமாகப் பெருமை பெறுவதற்கான தயார்நிலையில் உள்ளது. #fame-ன் உள்ளடக்கமானது, மொபைல் சார்ந்த நேரடி வீடியோ நிரலமைப்பு மற்றும் உயர் தாக்க டிஜிட்டல் அம்சங்கள், கேளிக்கை, உணவு, ஃபேஷன், இசை, நகைச்சுவை போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் வடிவங்களின் இனங்கள் உள்ளிட்ட புத்தமைவுமிக்க கேட்பின் அடிப்படையிலான வீடியோ உள்ளடக்கத்தைச் சுற்றி அமைந்துள்ளது. விநியோகத்தில் பல்-தள அணுகுமுறையுடனும், அனைத்து டிஜிட்டல் மற்றும் சமூக தளங்களிலும் வலிமையாக அமைந்துள்ள நிலையிலும், திறன் அடிப்படையிலான உள்ளடக்கம், அம்சங்கள் மற்றும் டிஜிட்டல் வீடியோ சேவைகளை உள்ளடக்கிய தனித்துவமாக்கப்பட்ட தீர்வுகளுடன், பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும், அவர்களை ஈடுபடுத்துவதற்கும், பிராண்டுகளுக்கு #fame உதவுகிறது.
ஊடகத் தொடர்பு:
குஷ்பு ஷா
[email protected]
+91-9819045691
Fame Digital Pvt Ltd
Share this article