டெல்லி, January 22, 2016 /PRNewswire/ --
இவ்வாண்டு ஜனவரியில் நடைபெறும் டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் ஷிகாவின் இரண்டாவது புதினமான 'Logically Stupid, That's Love'-ஐ Srishti Publishers வெளியிடுகிறது
'நீங்கள் எதையாவது விரும்பாவிட்டால், நீங்களே ஒன்றை உருவாக்க வேண்டும்' என்பதற்கு ஷிகா குமார் ஒரு சிறந்த உதாரணமாகிறார். இந்த விடாமுயற்சி கொண்ட, ஒரு குழந்தைக்குக் தாயான, காதல் விரும்பி, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி உருவாக்கப்படும் சர்க்கரை தடவிய காதல் கதை கருக்களால் சலிப்புற்றார். அவர் யதார்த்தமான காதல்களை படிக்கின்ற அவசியத்தை உணர்ந்து தேடியபோது அப்படி அதிகமாக ஏதும் கிடைக்காத நிலையில், தானே ஒன்றை எழுத முடிவு செய்தார்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160121/10138646 )
அவருடைய முதல் புதினம், 'He Fixed the Match, She Fixed Him,' ஆகும், இது திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திருமணத்தைப் பற்றியது. அறிமுக எழுத்தாளர் என்ற முறையில், அவருக்கு ரசிகர்களிடமிருந்து ஏராளமான அன்பு கிடைத்தது மட்டுமின்றி, ஒரு திரைப்படமும் ஒப்பந்தம் ஆனது. இது அவரை, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டது மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களையும் கவர்ந்த ஒரே அறிமுக எழுத்தாளராக ஆக்கியது.
புத்தக அறிமுகத்தின்போது, உயர்ந்த வருகையாளர் பட்டியலில், Kumaon Litfest-ன் நிறுவனர் Sumant Batra, Fever 104-ன் Khurafati Nitin RJ, மற்றும் Srishti Publishers & Distributors-ன் வெளியீட்டாளர் Arup Bose ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியை பிரபல எழுத்தாளரான Sutapa Basu தொகுத்து வழங்கினார்.
'Logically Stupid, That's Love' -ஐ பற்றி அவர் மிகவும் நேசத்துடன் பேசுகிறார், "இது, தங்கள் கைகளில் கிடைப்பவற்றிற்கு சிறிதும் மதிப்புத் தராத நபர்களைப் பற்றிய கதை. உண்மையில், வெறும் அதிர்ஷ்டத்தினால் அல்லாது கடின உழைப்பினால் மட்டுமே கிடைக்கின்ற பொருள்சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதன் மூலம் அவர்கள் வேதனையை வரவழைத்துக் கொள்கின்றனர். காதல் என்பது மிகவும் ஒரு விடாப்பிடியான உணர்வு; நீங்கள் அதைத் தவிர்க்கலாம், ஆனால் முற்றிலுமாக ஒதுக்கித் தள்ள முடியாது என்பதைப் பற்றியதே இக்கதை. இது, தர்க்கரீதியாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ இருக்கலாம், ஆனால் நிச்சயமாக கணிப்பின் அடிப்படையிலானது அல்ல."
அவருடைய இணையற்ற கிண்டலான மற்றும் சுவாரசியமான எழுத்துப் பாணி, ஏராளமான ரசிகர்களிடமிருந்து அவருக்குப் பாராட்டுதல்களைப் பெற்றுத்தந்துள்ளது. "இப்புத்தகம் நல்ல பொழுதுபோக்கு அம்சம் கொண்டதாக இருப்பதற்கும் மேலாக, இக்கதையின் நாயகி ஒரு புதிய கோணத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பது, எல்லோரும் படிக்கின்ற வழக்கமான காதல் கதைகளிலிருந்து வரவேற்புக்குரிய ஒரு வேறுபாடாக அமைந்துள்ளது. தனது உறவைக் காத்துக் கொள்ள அந்தப் பெண் எடுக்கும் தற்காலத்திற்குப் பொருத்தமான முயற்சிகள் உண்மையில் இதுவரை கண்டறியாதவை. பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு சிறிதும் வெட்கப்படாமல், காதல் கதையைத் தொடர்கின்ற மாறிவரும் இக்காலப் போக்கினை அது மிக நன்றாகப் பிரதிபலிக்கிறது," என்றார் Nitin. மும்பையிலுள்ள Sarvashreshtha Solutions & AGENCY09 ஷிகாவிற்கு சிறப்பாபிரதிநிதித்துவத்தை வழங்கியது .
"எப்போதுமே புதிய கருத்துக்கள் மற்றும் கலந்தாலோசனைகளுக்குத் தயாராக உள்ள ஷிகா, ஊக்கம் நிறைந்த ஒரு எழுத்தாளராவார். கதைகளை வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் வழங்கும் சாதுர்யத்தை அவர் பெற்றிருக்கிறார். 'Logically Stupid, That's Love' ஒரு ஜனரஞ்சகமான கதையாகும், மேலும், அது காதல் கதைகளை விரும்புகின்ற அனைத்து வயதினரையும் உடனடியாகக் கவர்ந்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார் Arup.
'Logically Stupid, That's Love' -ல் வாசகர்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்? "நல்ல கருத்து, பணத்திற்கான மதிப்பு மற்றும் சுவாரசியமற்ற நிகழ்வுகள் இல்லாதிருத்தல் ஆகியவை நான் வாசகர்களுக்குத் தரும் உறுதிமொழியாகும்," என்று அவர் உறுதியளிக்கிறார்.
ஷிகாவை அணுகுங்கள் Twitter, Facebook & http://www.authorshikha.com/
அமேஸானில் உங்கள் பிரதியை வாங்க: http://goo.gl/E1H1mu
புத்தகத்தின் கரு
கார்த்திக் - ஆமாம், நான் வெற்றி பெற விரும்புகிறேன், அது ஒன்றும் பெரிய குற்றமல்ல. என் ஊக்கம் நிறைந்த கண்கள் தூக்கமில்லை என்று ஒருபோதும் குறைபட்டுக் கொள்வதில்லை. என்னை நம்பு, மிஸ். முட்டாளைப் போலவே நானும் விரும்பியிருக்கலாம். ஆனால் பல ஆண்டுகள் நான் மேற்கொண்ட கடின உழைப்பை ஒரு பெண்ணுக்காக என்னால் தூக்கியெறிய முடியாது. அவள் என்னுடைய முதலாளியின் பெண்ணாக இருந்திராவிட்டால், நம்முடையது ஓர் அருமையான காதல் கதையாக இருந்திருக்கும்.
சஹானா - தனது தொழிலை அவர் ரொம்பவும் நேசிக்கிறார், ஆனால் இத்தருணத்தில் தனது இதயத்தை அவர் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. நிச்சயமாக ஒருநாள், திரு.தர்க்கவாதி என் பாணியில் யோசிக்க ஆரம்பிப்பார், அதற்குப்பின் எங்கள் இருவரின் ஒன்றுசேர்ந்த வாழ்க்கையும் அற்புதமாக மாறிவிடும்.
அவளுடன் அவன் ஐந்து நாட்கள் உல்லாசமாக பொழுதைக் கழித்தான், ஆனால் ஒருநாள் மீள முடியாத துக்கத்தில் அவன் மிதக்க வேண்டியிருந்தது. தர்க்கம் வெற்றியைத் தந்து கொண்டிருந்தாலும், விதி நகர மறுத்து, அவர்களை மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தது. வாழ்க்கையின் போராட்டங்கள் மற்றும் ஆறுதல்கள், இதயம் மற்றும் மனது ஆகியவை போராட்டத்திற்காக ஒன்று சேர்கின்றன. எது சுலபமாக வந்தாலும் அதை மதிக்கத் தெரியாத தலைமுறைக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு காதல் கதை.
ஷிகா (Shikha)-வைப் பற்றி
ஷிகா ஒரு தகுதிபெற்ற IT மேனேஜர் ஆவார் மற்றும் அவர் நூல் ஆசிரியரானது ஒரு விபத்தாகும். 'He Fixed the Match, She fixed Him' என்ற அவருடைய முதல் கதை, விரைவிலேயே திரைப்படமாக உள்ளது, இது அவரை இந்தியாவின் அதிவிரைவான திரைப்பட உரிமை விற்பனையின் அறிமுக எழுத்தாளராக ஆக்குகிறது. DailyO (India Today), அவருடைய TOI-Blog, Right Nailed மற்றும் இதர பிரபலமான குழுக்களில் அவர் அவ்வப்போது பத்திகளை எழுதுவதுண்டு. அவர் பொதுத் தொடர்பு நிபுணராகவும், மனத்தளவில் பயணங்களில் விருப்பம் கொண்டவராகவும் திகழ்கிறார்.
#ShikhaKumar, #NRIAuthor, #ShristiPublishers, #DelhiWorldBookFair, #logicallystupidthatslove, #RomanceWriting, #Sarvashrestha
ஷிகா (Shikha) குமாரின் பிரதிநிதிகளாகச் செயல்படுவோர்:
Mayura Amarkant
+91-9821117300
கேப்டன்
Sarvashreshtha Solutions
Tushar Khakhar
[email protected]
முதல் செயலதிகாரி
AGENCY09
Share this article