குர்காவன், இந்தியா, January 22, 2016 /PRNewswire/ --
திறன்கள், விருப்பங்கள் மற்றும் நடத்தையின்படி, விண்ணப்பதாரர்களை சரியான வேலைகளில் பொருத்தச் செய்து, ஆன்லைன் மற்றும் பணியமர்த்துவோர் மையம் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அமைந்த முன்சோதனையைப் பயன்படுத்தும் ஒரே பணிநியமன வலைவாசல் MeraJob.in ஆகும்.
எந்தவொரு பணியமர்த்துவோரிடம் நீங்கள் பேசினாலும், பணிநியமத்திலுள்ள மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்றைக் கண்டு நீங்கள் பிரமித்துப் போவீர்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 மில்லியன் மக்கள் பணிபுரியும் வயதுப் பிரிவில் சேர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நடுத்தர மற்றும் குறைந்த திறன் நிலை வேலைகளுக்காக பணியமர்த்திக் கொண்டிருக்கும் பெரும்பலான பணியமர்த்துவோர், காலியிடங்களை நிரப்புவதில் இதுவரை இல்லாத அளவிற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160115/10138226 )
இதற்கு, திறன் பற்றாக்குறை சிறிதளவு காரணமாக இருந்தாலும், இப்பிரச்னைக்கு மேலும் பல விஷயங்கள் பங்களிக்கின்றன. CV-க்களின் வடிவில் உள்ள மிகப் பெரிய எண்ணக்கையிலான விண்ணப்பங்களால் தீர்க்க முடியாத, ஆனால் அதை மேலும் தீவிரமாக்குகின்ற பணிநியமனத்திலுள்ள சவாலைத் தீர்க்கின்ற எளிய உள்ளுணர்வின் அடிப்படையில் MeraJob-ன் பணிநியமன முறை அமைந்துள்ளது. பணிநியமன முயற்சிகளில் 90%, விண்ணப்பதாரர்களை முன்சோதனை செய்வதிலும், திறன்கள், பயிற்சி அல்லது அந்த வேலைக்கான போதிய அனுபவம் இல்லாதவர்களை விலக்குவதிலும் செலவாகிறது. இது குறிப்பாக, முன்னிலை விற்பனை செயலதிகாரிகள், அங்காடி சார்ந்த விற்பனை, பின் அலுவலகம் மற்றும் நிர்வாகம் ஆகியவை மட்டுமின்றி, விருந்தோம்பல் தொழில்துறையின் முன்னிலை பதவிகள், BPO மற்றும் வலை உருவாக்குவோர் மற்றும் காப்பீட்டு விற்பனைகளுக்கும் பொருந்துகிறது, இவற்றிக்காக, பணியமர்த்துவோர் ஏராளமான எண்ணிக்கைகளில் விண்ணப்பங்களைப் பெறுகின்றனர்.
இப்போது, இந்த முன்சோதனையை பல்வேறு பணியமர்த்தும் நிறுவனங்கள் பலமுறை செய்யாமல், ஒரு மையமாக்கப்பட்ட நியமன அமைப்பு மேற்கொள்வதாக நினைத்துக் கொள்ளலாம். ஒரு வங்கியில், முன்னிலை விற்பனை பணிக்காக ஒருவர் விண்ணப்பத்திருந்தால், அத்தகவல் மற்றும் விண்ணப்பத்தின் விளைவானது, அத்தகைய பதவிக்கு பணியமர்த்துகின்ற இதர ஒத்த பணியமர்த்துவோருக்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். MeraJob நிறுவனர் திரு. Pallav Sinha கூறுகிறார், "MeraJob-ன் முன்சோதனை அதைத்தான் செய்கிறது. அது விண்ணப்பதாரரின் சுயவிவரங்களைத் தொடர்ந்து புதுப்பித்து, தரவு அனைத்தையும் சேமித்து வைக்கிறது, இது பணியமர்த்துவோர் மற்றும் வேலை தேடுவோருக்கு நல்ல பொருத்தமான நபர்களைக் கண்டுபிடிக்க வழிகாட்டுவதற்காக மீட்டெடுக்கப்படுகிறது." இத்தரவு, நடத்தை, விருப்பம் அல்லது திறன் சார்ந்தது என எதுவாக இருந்தாலும், அது பெறப்பட்டு, சிறப்பாகப் பொருந்தச் செய்வதற்காக சேமிக்கப்படுகிறது.
சந்தா அடிப்படையிலான புதிய தலைமுறை பணி நியமன திட்டங்களை MeraJob அறிமுகப்படுத்துகிறது
இந்தியாவின் முதன்மை பணிநியமன வலைவாசலான MeraJob.in, நடுத்தரம் முதல் குறைந்த ஊதிய மற்றும் குறைந்த திறன் பிரிவுகளில் உள்ள பணிவாய்ப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏராளமான புதுமைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சில சமயங்களில், பெருமளவில் பணிவாய்ப்பு என்றழைக்கப்படும் இப்பிரிவு, விற்பனை செயலதிகாரிகள், பின் அலுவலகம் மற்றும் நிர்வாகம், செயல்பாடுகள், கணக்கியல், லாஜிஸ்டிக்ஸ் போன்ற பதவிகள் மீது கவனம் செலுத்துவதுடன், 5 ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவம் உள்ளவர்கள் மற்றும் புதியவர்கள் மீது முக்கியமாக கவனம் செலுத்துகிறது. இத்தீர்வு அனைத்து தொழில்கள்/நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றாலும், MeraJob-ன் திட்டங்கள், BFSI, IT, BPO-க்கள், SME-க்கள், இணையதள நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களில் மிக விரைவாக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
MeraJob.in-ன் நிறுவனரான திரு. Raman Thiagarajan கூறுகிறார், "ஓர் ஆற்றல்மிக்க சந்தையானது, திறன் மற்றும் வாய்ப்புகளுக்கிடையிலான இடைவெளியை நிரப்புவது மட்டுமின்றி (பிரிவு வாரியான வேலைவாய்ப்பு தளங்கள் செய்வதைப்போல்), அது இருதரப்பினருக்கும் இடையே ஆற்றல்மிக்க பொருத்தத்திற்கும், பரிமாற்றத்திற்கும்கூட உதவ வேண்டும்." இந்தப் பிற்பகுதியானது, பணிநியமன ஆலோசனையாளர்கள் அல்லது நிறுவனங்களின் HR குழுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் தற்போது எட்டப்படுகிறது, இது பணிவாய்ப்பு வலைவாசல் தரவு மீதான முன்சோதனையைப் பூர்த்தி செய்வதாக அமைகிறது. MeraJob-ன் முன்சோதனை மற்றும் பணிவாய்ப்புப் பட்டிலிடல் தீர்வுகள், அணுகல் மற்றும் முன்சோதனை ஆகிய இரண்டையும் ஒன்றுசேர்க்கின்றன.
ஓர் ஆற்றல்மிக்க பணிவாயப்பு வலைவாசலாக இருப்பதற்காக, பணிநியமன சந்தையில், பொருந்தச் செய்வதற்கான பின்வரும் தனித்துவமான பிரிவுகளில் MeraJob கவனம் செலுத்துகிறது:
இந்த முன்சோதனை மற்றும் பட்டியலிடப்படும் பணிநியமனத் தீர்வுகள், சிறந்த மாற்றத்தக்க நெகிழ்தன்மையுடையவையாகவும், தேவையின் அடிப்படையிலும், சிக்கனமான சந்தா தொகுதிகள் கொண்டவையாகவும் இருப்பதால், ஈடிணையற்றவையாகும். இவை 2 வகைகளில் வழங்கப்படுகின்றன:
விருப்பப்படியான முன்சோதனை
MeraJob-ன் மதிப்பீடு மற்றும் முன்சோதனை விதிமுறைகள், நேர்மறையான மற்றும் எதிர்மறையான தேர்வு விதிகளையும், அறுதியிட்ட / வருவிக்கப்பட்ட விருப்பத்தேர்வுகளையும் பயன்படுத்துகின்றன. இணையத்தில் மற்றும் பணிநியமன மையத்தில் சில எளிய கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம், முன்சோதனையானது பணிக்குத் "தகுதியான" மற்றும் "விருப்பம் கொண்ட" விண்ணப்பதாரர்களை அடையாளம் காண உதவுகிறது. இத்தகவல், சம்பந்தப்பட்ட பணிநியமன முயற்சிக்கு உதவுவதற்குப் பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, எதிர்கால பணி வாய்ப்புகளில் பொருந்தச் செய்வதற்காகவும் சேமித்து வைக்கப்படுகிறது.
உதாரணமாக, PHP உருவாக்கப் பதவிக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள ஒரு விண்ணப்பதாரரிடம், வினவல்கள் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட அடிப்படையான "அதிரடி" கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதைப்போலவே, டெலிவரி பாய் பணிக்கு, அந்த விண்ணப்பதாரர் "நிச்சயம் இருக்க வேண்டிய" அனைத்து தகுதிவிதிகளையும், அதாவது ஒரு செல்லத்தக்க ஓட்டுனர் உரிமம் வைத்திருத்தல் மற்றும் அந்த இடங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருத்தல் போன்றவற்றைப் பூர்த்தி செய்கிறாரா என்பது உறுதி செய்யப்படுகிறது.
மனித கணிப்புடன் சேர்ந்த இப்பகுப்பாய்வுகள், மிகவும் பொருத்தமான மற்றும் முன்சோதனை செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை, அவர்களுடைய விருப்பம் மற்றும் திறன்களுக்குப் பொருந்தும் வேலைகளில் சேர்த்து, அதன் மூலம் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்குவதற்கு MeraJob-க்கு உதவுகின்றன. இதனால்தான், இப்போது பணியமர்த்துவோரால் 1/2 நேரத்தில், 1/2 செலவில் பணிநியமனம் செய்ய முடிகிறது.
பட்டியலிடும் தீர்வுகள்
இதில், பிராண்ட் செய்யப்பட்ட பணிநியமனத் தீர்வுகள் மற்றும் பணிப் பட்டியலிடும் தீர்வுகள் அடங்கியுள்ளன:
அனைத்துத் தீர்வுகளும் Search Plus உடன் வருகின்றன, இதன் மூலம் நேர்காணலுக்கு வருகின்ற முறைகள், குறிப்பிட்ட வேலையில் அந்த விண்ணப்பதாரருக்கு உள்ள ஆர்வம், மற்ற முன்சோதனை திட்டங்களில் வழங்கப்பட்ட பதில்கள் போன்ற நடத்தை சார்ந்த தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவோரால் வடிகட்ட முடியும்.
MeraJob.in -ன் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புத் துறைத் தலைவரும், இணை நிறுவனருமான
திரு. Girish Phansalkar, கூறுகிறார், "நாள் 1 முதல், நாங்கள் வளர்ச்சிக்கான உருவாக்கத்தில் இருந்து, விண்ணப்பதாரர் பற்றிய தரவு அனைத்தும் சேமிக்கப்பட்டு, சிறந்த பொருத்தத்திற்காக மீட்டெடுக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்."
MeraJob-ன் நிறுவனர் குழுவானது, வரவிருக்கும் முன்னேற்றங்கள் உற்சாகம் தருபவையாக இருப்பதாக உணர்கிறது, இதில், ஆங்கிலப் பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அணுகும் வசதியை வழங்குதல், வீடியோ நேர்காணல்கள் மற்றும் அழைப்புப் பதிவு ஸ்நிப்பட்களை வழங்குவதன் மூலம் தங்களுடைய வலைவாசல்களில் விண்ணப்பதாரர்களின் SmartProfiles™-ஐ அதிகரித்தல் போன்ற பல 3ம் நபர் தயாரிப்புகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணப்பும் அடங்கும்.
MeraJob.in பற்றி
இந்தியாவின் நெ.1 வேலைப் பொருத்த வலைவாசலான MeraJob, பணியமர்த்துவோருக்கு முன்சோதனை தீர்வை வழங்குகிறது. அதன தீர்வானது, சிறந்த தரமான பணிநியமனத்தையும், பணியமர்த்துவோர் பிராண்ட் மீது நேர்மறை தாக்கத்தையும் அடைகின்ற அதே நேரத்தில், குறைந்த செலவில், மேலும் விரைவாகப் பணியமர்த்துவதற்கும் பணியமர்த்துவோருக்கு உதவுகிறது. எனவே " 1/2 நேரத்தில், 1/2 செலவில் பணியமர்த்துங்கள்" என்பது அதன் தாரக மந்திரமாகும்.
தற்போதுள்ள வேலைவாய்ப்பு வலைவாசல்கள் வழங்கும் பணிநியமனத்திற்கான வரிவிளம்பர அணுகுமுறையையும் கடந்து, பின்வருபவை போன்ற தனித்தன்மை வாய்ந்த அம்சங்களுடன் முன்னேறிச் செல்வதே MeraJob-ன் எண்ணமாகும் -
ஏறக்குறைய 500,000 SmartProfiles™ மற்றும் MeraJob.in-ல் பதிவு செய்துள்ள ஏறத்தாழ 1,000 பணியமர்த்துவோருடன், இந்த வலைவாசல் ஏற்கனவே இந்தியாவின் நெ. 1 முன்சோதனை நிறுவனமாக இருப்பதுடன், விண்ணப்பதாரர்களும், பணியமர்த்துவோரும் தங்களை பரஸ்பரம் அறிந்து கொள்கின்றனர் என்பதிலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஊடகத் தொடர்பு
ஆஷு பஜாஜ்
[email protected]
+91-9899905387
உள்ளடக்கம் & விண்ணப்பதாரர் ஈடுபாட்டு மேனேஜர்
Mera Job India Pvt Ltd
Share this article