பெங்களூர், January 27, 2016 /PRNewswire/ --
குழந்தைகளுக்கான, அணியக்கூடிய GPS பர்சனல் டிராக்கர்
Sendmygift.com மற்றும் Total Celebrations, பெற்றோர்கள் ஒரு கிளிக்கின் மூலம் தங்கள் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கு உதவும், GPS செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வாட்ச் மற்றும் மொபைல் ஃபோனை வழங்குகின்றன. இந்த வாட்ச்சில், தங்கள் குழந்தைகள் மிகச் சரியாக எங்குள்ளனர் என்பதை அறிவதற்கும், பயனருடன் குரல்ஒலி அழைப்பில் ஈடுபடுவதற்கும் உதவும் GPS டிராக்கர் மற்றும் குரல்ஒளி அழைப்பு பயன்பாட்டு அம்சம் இடம்பெற்றுள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160127/10139005 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151221/10137151-a )
இந்த உலக அளவில் சான்றளிக்கப்பட்ட வாட்ச், நீர்புகா தன்மையும், OLED திரை காரணமாக பூஜ்ய அளவிலான கதிரியக்கமும் கொண்டது மற்றும் 340 mA பேட்டரியால் இயங்குகிறது. மிகச்சரியான அமைவிடம், அந்தக் கட்டிடம் இருக்கும் முகவரியையும் கூட அறிகின்ற அளவிற்கு அதில் 10m 2DRM-ன் விரிவான GPS துல்லியத்தன்மை உள்ளது. அதன் பாதையைப் பதிவு செய்யும் அம்சம், வரிசையான முறையில் அமைவிடத்தை அடையாளம் காண உதவுகிறது. ஜியோஃபென்சிங் அம்சத்தின் மூலம், பகுதி அல்லது மண்டலங்களுக்கான வரம்பையும் அமைத்துக் கொள்ள முடியும். பாதுகாப்புக்காக மட்டுமின்றி, நல்லநிலையை சோதிப்பதற்கும்கூட, அதன் பெடோமீட்டர் அம்சத்தினால் படிகளின் எண்ணிக்கையையும் எண்ண முடியும். அத்துடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் ஃபோன், இருவழி ஓரல்ஒளி அழைப்பு நோக்கத்திற்காக, 2G GSM SIM கார்டைக் கொண்டுள்ளது. அது 18.5 செமீ நீளம், 3.3 செமீ அகலம் மற்றும் 1.25 செமீ உயரம் கொண்டிருப்பதுடன், இளஞ்சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் வருகிறது.
தனித்துவமான இலவசங்களுடன் இந்த வாட்ச்சை வாங்கலாம். அது இரண்டு வண்ணங்களில் வருகிறது - குழந்தை பொம்மையுடன் இளஞ்சிவப்பு வாட்ச், இதனுடன் கூலிங் பை மற்றும் பரிசுக் கூப்பன்களுடன் இலவசமாக LED வாட்ச். இன்னொன்று, இளஞ்சிவப்பு வண்ணத்தில் நீல நிற டயலுடன், இலவச கூலிங் பை மற்றும் பரிசுக் கூப்பன்களுடன், GPS உள்ளமைந்த LED வாட்ச், செல் டவர் அடிப்படையிலான அமைவிடம் கண்டறியும் அமைப்பு மற்றும் SIM செயல்படுத்தப்பட்ட மொபைல் ஃபோனுடன் வருகிறது.
குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்சின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, Sendmygift மற்றும் Total Celebrations-ன் நிறுவனர் மற்றும் CEO டாக்டர் Mandeep Kaur கூறுகிறார், " பெற்றோர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் மும்முரமாக ஈடுபட வேண்டியிருப்பதால், தங்கள் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆய்வின்படி, காணாமல் போகின்ற 10,0000 குழந்தைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்படுவதே இல்லை. 'காணாமல் போன் குழந்தைகளின்" வழக்குகளில் 45% இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. இந்தியாவில், குழந்தை பாதுகாப்புப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாத ஆரம்ப நிலையிலேயே உள்ளன. குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச், கவலைப்படும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவுவதுடன், அவர்கள் வெளியே இருக்கும்போது அல்லது குழந்தை ஆபத்திலிருக்கும்போது அவர்களுடன் பேசுவதற்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும். ஒரே கிளிக்கின் மூலம், அவர்களுடைய குழந்தையால் அவர்களுடன் மறைமுகமாக எப்போதுமே இருக்க முடிகிறது."
Total Celebrations பற்றி:
Total Celebrations அனைத்துவிதமான பரிசளிப்புத் தீர்வுகளுக்கும் ஒன் ஸ்டாப் ஷாப் அங்காடியாக, இவ்வகையிலேயே முதலானதாகத் திகழ்கிறது. ஒரே கூரையின் கீழ், பிறந்தநாட்கள், ஆண்டு நிறைவுகள், மதச் சடங்குகள், புகுமனை புகு விழாக்கள் அல்லது வேடிக்கை விருந்துகள் போன்ற அனைத்துவித நிகழ்ச்சிகளுக்கும் அது ஏராளமான பொருட்களைக் கொண்டுள்ளது. கேக்குகள், பூச்செண்டுகள் மற்றும் வாழ்த்து அட்டைகளுக்கு இந்த அங்காடி தனித்தனி கவுன்டர்களைக் கொண்டிருப்பதுடன், விளையாட்டு பொம்மைகள், கைவினைப் பொருட்கள், பூச்சாடிகள், சிலைகள் மற்றும் பல்வேறு வகைகளைச் சேர்ந்த இதர பரிசளிப்புப் பொருட்களையும், ரூ.10 முதல் ரூ20,000 வரையிலான விலைகளில் கொண்டு, பரிசுப் பொருட்களைத் தேர்வு செய்வதற்கான விரிவான யோசனைகளை வழங்குகிறது.
இணையற்ற வாடிக்கையாளர் சேவையை அளிக்கின்ற இந்த அங்காடி, சுற்று வட்டாரங்களில் உள்ள சமுதாயங்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கும் ஓர் அசலான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகின்ற ஒரு விரிவாக்கப்பட்ட வாடிக்கையாளர் அடித்தளத்திற்குரிய ஒரு தனித்துவமான சூழலைக் கொண்டுள்ளது. Total Celebrations ஆனது, SEND MY GIFT PVT LTD-ன் ஒரு முயற்சியாகும். தற்போது, இதன் 2000 சதுர அடி பரப்பளவுள்ள விசாலமான அங்காடி, பெங்களூரிலுள்ள HSR லேஅவுட்டில் அமைந்துள்ளது, மற்றும் இந்த நிதியாண்டில், இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
Sendmygift.com பற்றி:
Sendmygift.com, அனைத்து வயதினருக்கும், நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் பரிசுப் பொருட்களில் சிறப்புப் பெற்றுள்ள, இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் பரிசுப் பொருள் அங்காடிகளில் ஒன்றாகும். இந்நிறுவனம், அனைவருக்கும் 'உணர்வுகளை வழங்கும்' கருப்பொருளுடன், தனது செயல்பாடுகளை 2015 நவம்பரில் தொடங்கியது. Sendmygift.com-ன் உரிமையாளரும், இயக்குபவருமான டாக்டர் Mandeep Kaur, பரிசுப்பொருட்களை அளிப்பதன் மூலமாக மட்டுமின்றி, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும் வழங்குவதன் மூலம், தனித்துவமான ஆன்லைன் பரிசுப் பொருட்கள் வழங்கும் யோசனைகளையும், அனுபவத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். பெங்களூரை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், தேசிய அளவில் பரவியுள்ளது. 1500 பரிசு வழங்கும் விருப்பத்தேர்வுகளுடன், ஒரு தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை Sendmygift.com வழங்குகிறது. sendmygift.com வசமுள்ள பொருட்களில், ஏராளமான வகைகளில் புத்தம் புதிய மலர்கள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகள், சாக்லேட்டுகள், நகைகள், பரிசுக் கூப்பன்கள் போன்றவை அடங்கும். மேற்கண்ட பரிசுகளில் ஒவ்வொன்றும், அனுப்புவோர் தங்கள் அன்புக்குரியவர்களுக்குத் தெரிவிக்க விரும்பும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் அறிவதற்கு, அணுகுங்கள்: http://www.sendmygift.com .
ஊடகத் தொடர்பு:
Monali Giri
[email protected]
+91-9108001969
PR மேலாளர்
SEND MY GIFT PVT LTD
Share this article