மும்பை, February 17, 2016 /PRNewswire/ --
2016-ஆம் ஆண்டு, D-Link -ன் சிறப்புமிக்க வலையமைப்பு மற்றும் புத்தமைவின் முப்பதாண்டுக் கால நிறைவைக் குறிக்கிறது
உலக அளவிலான வலையமைப்புத் தீர்வுகள் வழங்குனரான D-Link, இவ்வாண்டு தனது 30 ஆண்டு கால சேவையை நிறைவு செய்வதுடன், 65 நாடுகளில் 'மக்களுக்காக வலையமைப்புகளை உருவாக்கியுள்ள' தனது முப்பதாண்டு காலத்தையும் கொண்டாடுகிறது. "புதுமையைப் புகுத்தும் பெருவிருப்பினை" தனது தாரக மந்திரமாகக் கொண்ட D-Link, மிகச் சமீபத்திய மற்றும் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பொறுப்புறுதியை ஏற்றுள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160216/10140252-a )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160216/10140252 )
1986-ஆம் ஆண்டில், ஏழு நண்பர்கள் அடங்கிய குழு ஒன்றினால் உருவாக்கப்பட்ட D-Link, ஹப்கள்/ விசைகளைப் பயன்படுத்தி மேசைக் கணினிகளை இணைப்பதற்கான தயாரிப்புகளை உருவாக்கத் தொடங்கியது. அதைப்போன்றே, மடிக்கணினியின் காலகட்டத்திலும், ஒயர்லெஸ் அணுக்க பாயின்ட்களைக் கொண்டு உலகை D-Link இணைத்தது, இப்போது, இப்புதிய ஸ்மார்ட்ஃபோன்களின் யுகத்தில், கையில் எடுத்துச் செல்வதற்கு மிகவும் வசதியான ஒயர்லெஸ் மொபைல் துணைச் சாதனங்கள் ஏராளமானவற்றின் மூலம், அது நெட்வொர்க்கிங் புதுமைத் தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது. D-Link-ன் கிளவுட் அடிப்படையிலான பயன்பாடுகள், ஏற்கனவே சந்தையில் முதலிடத்தில் உள்ளன மற்றும் இப்போது பெரும்பாலான D-Link-ன் சமீபத்திய தயாரிப்புகளில் பெரும்பலானவை, IoT (Internet of Things) என்ற எதிர்கால தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானவை.
புதுமைகளை உருவாக்கும் பெருவிருப்பே உலக அளவில் பன்முகமான, பில்லியன் டாலர் மதிப்புள்ள, உலகம் முழுவதும் 2,700-க்கும் அதிகமான பணியாளர்களுடன், மாபெரும் வலையமைப்பு நிறுவனமாக வளர்ச்சி பெறுவதற்கு D-Link-க்கு உதவியுள்ளது. இன்று தனது வலிமைமிக்க உள்ளூர் திறனை சாதுர்யத்துடன் பயன்படுத்தி, உள்நாட்டிற்கேற்ற தயாரிப்புகளை D-Link உருவாக்குவதால், அது உலகச் சந்தைகள் முழுவதிலும் இந்நிறுவனத்திற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நன்மையை அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு நாளும், சில 100 நாடுகளில், உயிர் காக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, மருத்துவமனை வலையமைப்புகளுக்கு D-Link ஆற்றலளிக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடையே மாபெரும் அறிவாற்றல் மையங்களை இணைப்பதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் சாதனைகளுக்கு D-Link உதவுகிறது. தனது வை-ஃபி வலையமைப்பு, IP கண்காணிப்பு போன்ற பொருட்களின் மூலம் சிறிய தொழில்கள் /நிறுவனங்கள் வளர்வதற்கும் D-Link உதவுகிறது. மேலும், உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான வீடுகளில், குடும்பங்கள் வளமான, விரைவான டிஜிட்டல் வாழ்க்கைமுறைகளை அனுபவித்து மகிழ்வதற்கும், மன அமைதியுடன் வாழ்வதற்கும் D-Link உதவுகிறது.
"2016-ம் ஆண்டானது, 'மக்களுக்காக வலையமைப்புகளை உருவாக்கியுள்ள' எங்கள் 30 ஆண்டு கால நிறைவுடன், D-Link-க்கு ஒரு சிறப்புமிக்க ஆண்டாக அமைகிறது. இது வெறும் காலகட்டமல்ல, ஆனால் முப்பது ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள பாரம்பரியம் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கின்ற ஒன்றாகும்," என்றார் D-Link (India) Ltd-ன் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ஆன திரு. TusharSighat.
அவர் மேலும் கூறியதாவது , "கடந்த 30 ஆண்டுகள், ஒயர்லெஸ் தொழில்துறையை வடிவமைக்கும் அம்சங்களுக்குள் D-Link-ஐ உறுதியாக அமைத்துள்ளன. புதுமையைப் படைக்கும் எங்கள் பெருவிருப்பினை நாங்கள் தீர்வுகளாக மாற்றியுள்ளோம் - அதில் மக்களின் வாழ்வையே மாற்றுகின்ற இணைக்கப்பட்ட வீடு வகைகள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட வலையமைப்பு கிட்கள் ஆகியவை அடங்கும். இப்பாரம்பரியத்தைத் தொடரும்போது, எங்களுடைய புதுமையைப் புகுத்தும் பெருவிருப்பினை நாங்கள் 2016-ஐயும் கடந்து எடுத்துச் செல்வோம்."
தனது 30வது ஆண்டில் D-Link தனது "புதுமையைப் புகுத்தும் பெருவிருப்பினை" கொண்டாடுகிறது, இதற்காக தனது பாரம்பரியத்தின் வலிமைகளைப் பயன்படுத்தி, அது எதிர்காலப் போக்குகளை கணிப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மேலும் பல புதுமை வலையமைப்பு தயாரிப்புகளை எடுத்து வருகிறது. வரவிருக்கும் ஆண்டுகளில், வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகிய இரண்டிற்குமே சிறந்த இணைப்புத்திறன், பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் சிக்கனமான தீர்வுகளை வழங்கக்கூடிய உயர் செயல்திறன் கொண்ட, குறைந்த செலவுள்ள தயாரிப்புகளை வழங்கும் புதுமைப் பொருட்களுடன், இத்தொழில்துறையில் D-Link முன்னணியில் இருக்கும். முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், நம்பிக்கைக்குரிய, சிக்கனமான மற்றும் பயன்படுத்துவதற்கு சுலபமான ஏராளமான தயாரிப்புகளுடன், நுகர்வோர் மற்றும் தொழில்களின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தயார் நிலையில் D-Link தயாராக உள்ளது. எதிர்காலத்திற்காக, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைசார்ந்த புத்தமைவுகளை வழங்குவதில் D-Link பெருமையடைகிறது.
புதுமையைப் புகுத்தும் பெருவிருப்பான தனது பாரம்பரியத்தையும், எங்கள் 30 ஆண்டுகளில் இணைத்துக் கொள்ள அவர்கள் உதவியுள்ள மக்களையும் D-Link கொண்டுகின்ற அதே நேரத்தில், இன்னொரு 30 ஆண்டுகால வலையமைப்பு மற்றும் வளர்ச்சியை அந்நிறுவனம் இப்போது எதிர்நோக்குகிறது.
D-Link (India) Limited பற்றி:
D-Link வீடு, சிறு தொழில், நடுத்தரம் முதல் பெரிய அளவிலான நிறுவனச் சூழல்களுக்கான இணைப்புகளில் ஓர் உலக முன்னணி நிறுவனமாகும். விருது வெல்லும் வடிவமைப்பாளர், மேம்பாட்டளர் மற்றும் உற்பதிதியாளராக விளங்கும் D-Link, சுவிட்ச்சிங், ஒயர்லெஸ், பிராட்பேண்ட், சேமிப்பகம், IP கண்காணிப்பு, கிளவுட் அடிப்படையிலான வலையமைப்பு மேலாண்மை மற்றும் கட்டமைப்புடன்கூடிய கேபிளிங் ஆகியவற்றின் திறன்களை ஒருங்கிணைக்கும் ஒன்றுசேர்க்கப்பட்ட வலையமைப்புத் தீர்வுகளை செயல்படுத்துகிறது மற்றும் அவற்றிற்கு ஆதரவளிக்கிறது.
D-Link (India) Limited என்பது D-Link Corporation-ன் ஓர் அங்கமாகும் மற்றும் இது இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க்கிங் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம், இந்தியா மற்றும் SAARC மண்டலத்தில் நெட்வொர்க்கிங் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. D-Link (India)-வின் ஈக்விட்டிகள், NSE & BSE Stock பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்று D-Link (India) Limited, இந்தியாவில், நாடு முழுவதும் பரவியுள்ள, வலிமைமிக்க தயாரிப்புகளைக் கொண்ட மற்றும் உயர்தர சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம், உயர்தரம், ஆற்றல்மிக்க, நம்பிக்கைக்குரிய நெட்வொர்க்கிங் தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான உறுதிமிக்க பொறுப்புறுதியை ஏற்றுள்ளது. D-Link India இன்று, 11 நகரங்களில் அதிநவீன D-Link Service Center (DSC) கொண்ட 17 கிளை அலுவலகங்களைக் கொண்டிருப்பதுடன், இந்தியா முழுவதும் பரவலாக அமைந்துள்ள 38 D-Link Service Partners (DSP)-ஆல் ஆதரவளிக்கப்படுகிறது. தனது வாடிக்கையாளர்களுக்காக, கட்டணமில்லா உதவிமையம் ஒன்றையும் D-Link (India) Limited கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு அணுகவும் http://www.dlink.co.in, அல்லது இணைத்துக் கொள்ளவும் Facebook http://www.facebook.com/dlinkindia மற்றும் Twitter http://www.twitter.com/dlink_india
ஊடகத் தொடர்பு:
DivyaShetty
[email protected]
+91-9004672817
மூத்த மேலாளர் - PR & Marketing Communication
D-Link (India) Ltd.
Share this article