ஜூன் 28 அன்று தொடங்க உள்ள முதல் ஃபிளாஷ் விற்பனைக்கு முன்னரே Le 2 மற்றும் Le Max2 ஆகியவற்றுக்கான பதிவுகள் 5 லட்சத்திற்கும் கூடுதலாகப் பெற்று LeEco சாதனை படைத்துள்ளது
மும்பை, June 28, 2016 /PRNewswire/ --
Le 2 அல்லது Le Max2 வாங்குபவர்களுக்கு CDLA இயர்ஃபோன்கள் இலவசம்
தன்னுடைய இரண்டாவது தலைமுறை சூப்பர்ஃபோன்களான Le 2 மற்றும் Le Max2 ஆகியவற்றை வெளியிட்ட சில வாரங்களுக்குள் இரு மொபைல்களுக்கும் சாதனை அளவாக 525,000 பேர் LeEco-வின் சொந்த ஈ-காமர்ஸ் வலைதளமான LeMall.com-லும், Flipkartடிலும் பதிவு செய்துள்ளனர். மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த சூப்பர்ஃபோன்களின் முதல் ஃபிளாஷ் விற்பனை நாளை (ஜூன் 28), தொடங்குவதால் இதுவரை பதிவு செய்யாத நுகர்வோர் இன்னும் சில மணி நேரங்களில் பதிவு செய்ய வேண்டும். Le 2 அல்லது Le Max2 வாங்கும் அனைவருக்குமே CDLA இயர்ஃபோன்களை ஜூன் 28 அன்று இலவசமாகப் பெறுவார்கள். மிகக் கவர்ச்சிகரமான விலையில் அருமையான அம்சங்களைக் கொண்ட இந்த சூப்பர்ஃபோன்கள் இந்திய ஸ்மார்ட்ஃபோன் மார்க்கெட்டை எழுச்சியடையச் செய்துள்ளது.
Le 2-வுக்கான முதல் ஃபிளாஷ் விற்பனை நாளை 12 மணிக்குத் தொடங்குகிறது. இதற்கான பதிவு நேரம் காலை 11 மணியுடன் நிறைவடையும். Le Max2-வுக்கான பதிவு நாளை பிற்பகல் 1 மணிவரை இருக்கும். இதன் விற்பனை மாலை 2. மணிக்குத் தொடங்கும். எனவே, இந்திய ஸ்மார்ட்ஃபோன் துறையில் ஏற்கனவே தனக்கான இடத்தை உருவாக்கியுள்ள சூப்பர்ஃபோன்களைப் பெறுவதற்கான இறுதி வாய்ப்பு இதோ.
தங்கள் போட்டியாளர்களைவிட வித்தியாசமாக இருப்பதாகக் கூற பிராண்டுகள் சிரமப்படும் நேரத்தில், LeEco தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எதிர்கால காப்பினை வழங்கும் கன்டென்ட் எக்கோசிஸ்டம், மெம்பர்ஷிப் புரோகிராம் ஆகியவற்றையும் கொண்டுள்ள தன்னுடைய அடுத்த தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டு ஸ்மார்ட்ஃபோன் துறையையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. Le 2 மற்றும் Le Max2 ஆகியவற்றின் தனித்துவமான சிறம்பம்சங்களின் காரணமாக இவை பெற்றுள்ள எதிர்பாராத ஆதரவு மற்ற எந்த ஸ்மார்ட்ஃபோன்களிலிருந்தும் இதை தனிச்சிறப்பானதாக்குகிறது.
பொழுதுபொக்கு நிறைந்த எக்கோசிஸ்டத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் இந்தியச் சந்தையில் ஏற்கனவே 100 நாட்களுக்குள் 5 லட்சம் சூப்பர்ஃபோன்களை விற்று தன்னுடைய திறனை வெளிப்படுத்தியுள்ளது.
பொழுதுபோக்கைப் பொருத்தவரை Le 2 மற்றும் Le Max2 பயன்படுத்துபவர்களுக்கு 2000+ மூவிகளும் 3000+ மணி நேர சீர்மிக காட்சிகளும், 150+ நேரடி TV சேனல்களும், குறைவற்ற ஆடியோ கொண்ட 1.9 மில்லியன் பாடல்களும் கிடைக்கும். மேலும் இந்த சூப்பர்ஃபோன்களோடு ஒரு ஆண்டு LeEco உறுப்பினர் திட்டமும் இணைத்து அளிக்கப்படுகிறது. மேற்கண்ட சலுகைகள் தவிர 5T க்ளவ்டு டிரைவ் ஸ்பேய்ஸும் 50+ பன்னாட்டு நேரடி கச்சேரிகளுக்கான பெரிய டிக்கெட்கள், மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய இசைக் கச்சேரிகளுக்கான தனித்துவமான லைவ் ஸ்டிரீமிங் மற்றும் 75000+ உலகத்தரத்திலான பொழுதுபோக்கு அம்சங்களும் கிடைக்கும். இந்த மிகச் சிறந்த பன்னாட்டு நேரடி கச்சசேரிகளை - ஆடியோ இழப்பின்றி - நேரடியாகவும் ஆஃப்லைனிலும் டியூன் செய்யும் வாய்ப்பை LeEco தன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். கன்டென்ட் மெம்பர்ஷிப் மட்டுமே நிச்சயமாக, Le Max2 மற்றும் Le 2 ஆகியவற்றை கட்டாயம் வாங்கவேண்டியதாக ஆக்குகிறது.
Le 2 மற்றும் Le Max2 இரண்டிலுமே USB Type-C Audio Port உள்ளது. CDLA (Continual Digital Lossless Audio) ஸ்டான்டர்டுக்கு LeEco காப்புரிமை பெற்றுள்ளது. இந்த மிகச் சிறந்த CDLA தொழில்நுட்பம் பயன்படுத்துவோரின் ஆடியோ அனுபவத்தையே மாற்றி அமைக்க உள்ளது. ஸ்மார்ட்ஃபோன் துறையில் ஆடியோ புரட்சியை துரிதப்படுத்த, தன்னுடைய முதல் ஃபிளாஷ் விற்பனையில் CDLA இயர்ஃபோன்களை Le 2 மற்றும் Le Max2 மொபைல்களை வாங்குபவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.
இரு சூப்பர்ஃபோன்களிலுமே சக்திவாய்ந்த பிராசஸர்களும் மிகச் சிறந்த அம்சங்களும் இணைந்து கிடைக்கின்றன. Le 2-ல் Snapdragon Qualcomm ® Snapdragon TM 652 பிராசஸரும் Le Max2-வில் Qualcomm ® Snapdragon TM 820 பிராசஸரும் உள்ளன.
Le 2 மற்றும் Le Max2 மொபைல்களின் ஃபிளாஷ் விற்பனையின்போது, அதாவது ஜூன் 28 அன்று, பயனர்கள் சில ஆச்சரியமான சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்:
- 10% SBI கேஷ்பேக் (Flipkart டில் மட்டும் பொருந்தும். ஒவ்வொரு கார்டுக்கும் பயனர்கள் சலுகைகளைப் பெறலாம். 10% கேஷ்பேக், ஜூன் 28 அன்று மட்டும் செல்லும், SBI கிரெடிட் கார்டுகளில் EMI பரிவர்த்தனைகளிலும் இது பொருந்தும்)
- HDFC கிரெடிட் & டெபிட் கார்டுகளைக்கொண்டு LeMall-ல் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 10% கேஷ்பேக்.
- இரு சூப்பர்ஃபோன்களோடும் ஒரு ஆண்டு LeEco மெம்பர்ஷிப் கிடைக்கும்
- இலவச CDLA இயர்ஃபோன்கள் (அறிமுகச் சலுகை, முதல் ஃபிளாஷ் விற்பனைக்கு மட்டும் பொருந்தும்)
அடுத்த தலைமுறை சூப்பர்ஃபோன்களைப் பெற நீங்கள் இன்னும் பதிவு செய்யாவிட்டால் இன்னும் சிறிது நேரமே உள்ளது.
பதிவு செய்வதற்கான பக்கங்கள்
LeMall
http://in.lemall.com/in/campaigns/Le20620.html?cps_id=SMFB_le2_20160617_FB
Flipkart
http://www.flipkart.com/leeco-le-2/p/itmejeucxaxmnk8k?pid=MOBEJEUCS2Z4N2E2
LeEco பற்றி:
LeEco, இதற்கு முன்னர்Letv என அழைக்கப்பட்டது. கன்டென்ட், டிவைஸஸ், அப்ளிக்கேஷன்ஸ் மற்றும் பிளாட்ஃபார்ம்ஸ் என பல இணைய எக்கோசிஸ்டம்ஸில் ஒரு உலகளாவிய முன்னோடியான இணைய மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும். நவம்பர் 2004-ல் Jia Yueting மற்றும் Liu Hong, அவர்களால் நிறுவப்பட்ட LeEco ஏறக்குறைய 10,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதுதான் உலகின் $12 பில்லியன் அமெரிக்க டாலர்களை சந்தையில் முதலீடு செய்துள்ள முதல் வீடியோ கம்பெனியாகும். சீனாவின் பெய்ஜிங்கில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் தனது வட்டார தலைமை அலுவலகங்களை ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிலிக்கான் வேலி ஆகிய இடங்களில் கொண்டிருக்கிறது.
ஆச்சரியமூட்டும் தன்னுடைய வழிகாட்டு நெறியாகக் கொண்டுள்ள LeEco எண்ணிலடங்கா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது, இணைய தொலைக்காட்சி, வீடியோ உற்பத்தி மற்றும் பகிர்வு, ஸ்மார்ட் கருவிகள் மற்றும் பெரிய திரை அப்ளிக்கேஷன்ஸ் முதல் ஈ-காமர்ஸ், எக்கோ அக்ரிகல்சர் மற்றும் கணெக்டட் சூப்பர் எலக்ட்ரிக் கார்கள்வரை எண்ணிலடங்கா தொழில்களில் ஈடுபட்டுள்ளது. மூவிகள், டிவி நாடகங்கள், பொழுதுபோக்கு காட்சிகள், விளையாட்டுகள் மற்றும் இசை உட்பட்ட உலகிலேயே மிகப் பெரிய கன்டென்ட் லைப்ரரிகளுள் ஒன்றை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது. சூப்பர்ஃபோன்கள் மற்றும் சூப்பர் டிவி-கள் போன்ற LeEco கருவிகள் முலும் இவற்றைக் காண முடியும். புதுமைக்கான தடைகளை உடைத்து, LeEco தனிநபருக்கேற்ற விதத்தில் மாற்றப்பட்ட தயாரிப்புகளையும் சேவைகளையும் அளிக்கிறது. இதுவும் நம்ப முடியாத குறைந்த விலையில் மேம்பட்ட பயனர் அனுபவத்தைத் தருகிறது.
ஊடகத் தொடர்பு:
Aaron Samuel Rajendran
[email protected]
+91-9686100143
LeEco, இந்தியா
Share this article